சிவகார்த்திகேயன் 10 லட்சம்”மிக்ஜாம் புயல்” பாதிப்பின் நிவாரண பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.10 லட்சம் காசோலையைஅமைச்சர் உதயநிதியிடம் வழங்கினார் நடிகர் சிவகார்த்திகேயன்

‘மிக்ஜாம்’ புயல் பாதிப்பு குறைந்த நிலையில், சென்னை இயல்பு நிலைக்கு திரும்பியது

மக்கள் பள்ளி, கல்லூரிகள், அலுவலகங்கள் செல்வதால் சாலைகள் மீண்டும் பரபரப்பாக இயங்கி வருகிறது. இதனால், சென்னை அடையார் திரு.வி.க பாலத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

புயலால் ரயில் சேவை நிறுத்தப்பட்டதால் தெற்கு ரயில்வேக்கு ரூ.35 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது

புயல் காரணமாக, சென்னையில் பல இடங்களில் ரயில் தண்டவாளங்கள் மழை நீரில் மூழ்கி, ரயில் சேவை பாதித்தது. ஏராளமான ரயில்கள் இயக்கப்படாமல் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. 4 முதல் 5 நாட்கள் வரை ரயில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக ரயில்வேக்கு ரூ.35 கோடி வரை வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங். தெரிவித்துள்ளார்.இது குறித்து தெற்கு ரயில்வே அதிகாரி கூறியதாவது: புயல் காரணமாக தெற்கு ரயில்வேயில் 605 மெயில் மற்றும் விரைவு […]

சென்னை வெள்ளம் ரேஷன் கார்டுக்கு ரூபாய் 6000 வழங்க ஸ்டாலின் உத்தரவு

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவித் தொகை வழங்குவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம், தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் உள்ளிட்ட உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.வெள்ள சேதம் குறித்தும், வழங்கப்பட வேண்டிய நிவாரணத் தொகை குறித்தும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.இதனடிப்படையில், மிக்ஜாம் புயலால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணத் தொகையாக ரூபாய் 6 ஆயிரம் வழங்கிட மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இந்த நிவாரணத் தொகையினை, […]

மிக்ஜாம்’ புயலால் பாதிக்கபட்டுள்ள காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு, உதகையில் இருந்து பால் பவுடர், டீ தூள், ஊட்டி வர்க்கி போன்ற ₹1.77 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள் அனுப்பிவைப்பு

மாவட்ட ஆட்சியர் அருணா கொடி அசைத்து அனுப்பி வைத்தார். மேலும் நிவாரணப் பொருட்களை அனுப்ப விரும்புவோர் மாவட்ட நிர்வாகத்தை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘மிக்ஜாம்’ புயல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட செமஸ்டர் தேர்வுகள், வரும் 11ம் தேதி முதல் 16ம் தேதி வரை நடைபெறும் என சென்னை பல்கலைக்கழகம் அறிவிப்பு!

மேலும் விவரங்களுக்கு unom.ac.in இணையதளத்தை காணலாம்

பள்ளத்தில் சிக்கிய தொழிலாளர்களில் ஒருவரது உடல் மீட்பு

மிக்ஜாம் புயல் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால், வேளச்சேரி ஐந்து பர்லாங் சாலையில் உள்ள பெட்ரோல் பங்க் அருகில் தோண்டப்பட்ட பள்ளத்தில் சிக்கிய 2 தொழிலாளர்களில் ஒருவரான நரேஷ் சடலமாக மீட்பு. அவரது உடல் ஆம்புலன்ஸ் மூலம் பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட்டது. மற்றொரு தொழிலாளியின் உடலைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது. L&T, NDRF, தீயணைப்பு வீரர்கள் இணைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னை: மிக்ஜாம் புயலால் சென்னை பள்ளிக்கரணையில் வெள்ளம் ஏற்பட்டது

15 அடி வெள்ளநீரில் சிக்கிய தாய், தந்தை, தங்கையை காப்பாற்றிய அருண் என்ற இளைஞர், நீரில் மூழ்கி உயிரிழந்தார். 3 நாட்களுக்கு பிறகு வெள்ளநீரில் மிதந்த சடலத்தை பார்த்து பெற்றோர் கதறினர்.

சென்னை அருகே கூடுவாஞ்சேரி அருள்நகர் – ஆதனூர் இணைக்கும் தரைபாலம், காமாட்சி நகர், பவானியம்மன் கோயில் அருகே உள்ள தரைப்பாலங்கள் மழை வெள்ளத்தால் அடித்து செல்லப்பட்ட நிலையில், அப்பகுதியில் போக்குவரத்து துண்டிப்பு. சுமார் 5000க்கும் அதிகமானோர் கடும் பாதிப்பு!