நாளை காலை புயல் உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்!

சௌராஷ்ட்ரா மற்றும் கட்ச் பகுதிகளில் மையம் கொண்டுள்ள ஆழந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அரபிக்கடலை அடைந்து, நாளை காலை புயலாக வலுப்பெற கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல். கடந்த மே மாதம் வங்க கடலில் ரிமால் புயல் உருவான நிலையில், இந்தாண்டின் 2வது புயலாக இது உருவாக வாய்ப்பு. புயல் உருவானால் அதற்கு பாகிஸ்தான் பரிந்துரைத்த ASNA என பெயரிடப்படும்.

“மிக்ஜாம் புயல் – ரூ.1487 கோடி நிவாரணம்“

மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சுமார் 25 லட்சம் குடும்பங்களுக்கு ரூ.1,487 கோடி நிவாரண தொகை வழங்கப்பட்டுள்ளது-சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல். நிவாரணம் வழங்கப்பட்டது தொடர்பாக முழுமையான அறிக்கை தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு தலைமை நீதிபதி அமர்வு உத்தரவு.

பெருங்களத்தூரில் 162 மாணவர்களுக்கு உதவிய ஆசிரியர்கள்

தாம்பரம் அடுத்த பெருங்களத்தூர் அன்னை அஞ்சுகம் நகரில் 300 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கிறார்கள். புயல் மழையில் வீடுகள் முழுகியது. தங்கியவர்களை மட்டும் படகுகள் மூலம் மீட்கப்பட்டனர். இந்த நிலையில் மீண்டும் வீடு திரும்பிய அவர்களுக்கு நேற்று முந்தினம் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க தலைவர் கு.தியாகராஜன் தலைமையில் ஆசிரியர்கள் உணவு, குடிநீர் வழங்கினார்கள். அப்போது “4ம் வகுப்பு படிக்கும் மாணவன் மாரி தங்களின் நோட்டு புத்தகம் முழுவதும் நனைந்துவிட்டது. உடைகளும் இல்லை என வருத்தமுடன் தெரிவித்துள்ளார். […]

சென்னையில் புயல், வெள்ளத்தால் சான்றிதழ்களை இழந்தவர்களுக்கு இன்று சிறப்பு முகாம்

மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் அரசு சான்றிதழ்களை இழந்தவர்கள் இன்று முதல் மீண்டும் விண்ணப்பிக்கலாம். சென்னை மாநகராட்சிக்குள்பட்டவர்களுக்கான சிறப்பு முகாம் இன்று நடைபெறுகிறது.

மிக்ஜாம் புயல் நிவாரணம், மத்திய அரசு வழங்கியுள்ள நிலையில், மாநில அரசின் பங்கு ஒன்றுமில்லாதது ஏமாற்றத்துக்குள்ளாக்குகிறது: பாஜக தலைவர் அண்ணாமலை அறிக்கை…

மிக்ஜம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண நிதியாக, ரூபாய் 10,000 வழங்க வேண்டும் என்று தமிழக பாஜக கோரிக்கை விடுத்திருந்தது. இந்த நிலையில், வெறும் 6,000 ரூபாய் மட்டுமே நிவாரண நிதியாக அறிவித்துள்ளார் தமிழக முதலமைச்சர். மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் தலைமையிலான மத்திய அரசு, பேரிடர் மேலாண்மை நிதியாக, தமிழக அரசுக்கு ரூபாய் 450 கோடி வீதம் இரண்டு தவணைகளில், ரூபாய் 900 கோடி நிதி வழங்கியுள்ளது. பொதுமக்களுக்கு வழங்கப்படும் நிவாரண […]

மிக்ஜாம்’ புயல் – நிவாரணத் தொகை பெற தகுதி படைத்தோர் யார் ?

ரேஷன் அட்டை வைத்திருப்போர் ரேஷன் அட்டைக்காக விண்ணப்பித்திருப்போர் வாடகை ஒப்பந்தம் / கேஸ் பில் / ஆதார் அட்டையுடன் சென்னையில் பல ஆண்டுகளாக வசித்துவருவோர்

மிக்ஜாம் புயல் – கன மழையைத் தொடர்ந்து கழக அரசு பல்வேறு நிவாரணப் பணிகளை இடைவிடாது மேற்கொண்டு வருகிறது

நம் அரசின் இந்த முயற்சிக்கு துணை நிற்கிற விதமாக, நிறுவனங்கள் – இயக்கங்கள் – தனிநபர்கள் என பலரும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் பொது நிவாரண நிதிக்கு நிதியளித்து வருகின்றனர். இந்நிலையில், இன்று நம்மை சந்தித்த போது, நடிகர் – சகோதரர் Siva_Kartikeyan, ரூ.10 லட்சத்துக்கான காசோலையை முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்காக நம்மிடம் வழங்கினார். அவருக்கு அன்பும் – நன்றியும். ஒன்றிணைந்து செயல்படுவோம் – இயற்கைப் பேரிடரால் ஏற்பட்ட துயர் துடைப்போம்!