5.36 லட்சம் மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்க டெண்டர்
நடப்பாண்டு பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்திற்கு தமிழக அரசு, ₹193 கோடியில் டெண்டர் கோரியுள்ளது. இதில் 5.36 லட்சம் பேருக்கு சைக்கிள் வழங்கப்படவுள்ளன. இந்த சைக்கிள்களில் ‘தமிழ்நாடு முதலமைச்சரின் மிதிவண்டிகள் வழங்கும் திட்டம் 2025 – 26’ என்ற லோகோ இடம்பெற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது
மாணவ, மாணவியருக்கு விலையில்லா மிதிவண்டி

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் (24.11.2025) பெருநகர சென்னை மாநகராட்சி, தண்டையார்பேட்டை மண்டலம், பட்டேல் நகர், சென்னை மேல்நிலைப்பள்ளியில் மேல்நிலைக் கல்வி பயிலும் மாணவ, மாணவியருக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன், இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான், மேயர் திருமதி ஆர்.பிரியா, வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி, […]
பெருங்களத்தூர் அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள்

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் மாநகராட்சி 4வது மண்டலத்திற்கு உட்பட்ட பெருங்களத்தூர் அரசு மேல்நிலை பள்ளியில் தமிழக அரசு சார்பில் விலையில்லா மிதிவண்டிங்களை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர். ராஜா அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றிய பின்னர் 130 பள்ளி மாணவ மாணவிகள் விலையில்லா மிதிவண்டிங்களை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் தாம்பரம் மாநகராட்சி 4வது மண்டல குழு தலைவர் டி.காமராஜ் , பெருங்களத்தூர் எஸ்.சேகர், மாமன்ற உறுப்பினர் […]
திருவஞ்சேரி பள்ளி மாணவர்கள் 118 பேருக்கு இலவச மிதிவண்டி

தாம்பரம் அடுத்த திருவஞ்சேரியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 118 மாணவ மாணவியர்களுக்கு மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தாம்பரம் சட்டபேரவை உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா மாணவர்களுக்கு மிதிவண்டிகளை வழங்கினார். திருவஞ்சேரி ஊராட்சிமன்ற தலைவர் ஜனனி சுரேஷ், ஒன்றிய கவுன்சிலர் அமுதா வேல்முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்…