மத்திய அமைச்சர் @AmitShah புதுதில்லியில் உள்ள விக்யான் பவனில் I4C இன் முதல் நிறுவன தின கொண்டாட்டத்தில் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு சைபர் குற்றங்களை தடுப்பதற்கான முக்கிய முயற்சிகளை தொடங்கி வைத்தார்

சைபர் மோசடி தணிப்பு மையம் (CFMC), சமன்வே பிளாட்ஃபார்ம் (கூட்டு சைபர் கிரைம் விசாரணை வசதி அமைப்பு), ‘சைபர் கமாண்டோஸ்’ திட்டம் மற்றும் சந்தேக நபர் பதிவு ஆகியவற்றை அறிமுகப்படுத்துகிறது.

யூடியூபர் சவுக்கு சங்கர் தேனியில் கைது: கோவை சைபர் க்ரைம் போலீஸ் நடவடிக்கை

பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் தேனியில் கைது செய்யப்பட்டார். கோவை சைபர் க்ரைம் போலீஸார் கைது நடவடிக்கையை மேற்கொண்டு அவரை கோவை அழைத்துச் சென்றனர். காவல் துறை அதிகாரிகள், பெண் காவலர்களை அவதூறாகப் பேசியதாக அவர் மீது கோவை சைபர் க்ரைம் போலீஸார் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்நிலையில், சவுக்கு சங்கர் தேனி வந்திருப்பதாகக் கிடைத்த தகவலை ஒட்டி இன்று (சனிக்கிழமை) அதிகாலை 3 மணியளவில் தேனியில் ஒரு தனியார் விடுதியில் தங்கியிருந்த அவரை கோவை சைபர் க்ரைம் […]

சென்னை கிறிஸ்தவ கல்லூரி இதழியல் துறை மாணவர்கள் சைபர் பாதுகாப்பு விழிப்புணர்வு பிரச்சாரத்தை நடத்தினர்

இதில் தனியார் காவல் நிறுவனத்தின் தலைவர் கார்த்திகேயன், தகவல் பாதுகாப்பு துறை துணைத்தலைவர் பழனி குமார் ஆறுமுகம், தனியார் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த திருமதி பி சாந்தி தேவி, உளவியல் நிபுணர் திருமதி சங்கவி சவுந்தரராஜன், ஹேக்கர் பி ரங்கநாதன் ஆகியோர் பங்கேற்று சைபர் செக்யூரிட்டி தொடர்பான பல்வேறு விளக்கங்களை அளித்தனர். கண்காட்சியும் நடத்தப்பட்டது. இறுதியில் எழுத்தாளர் மனுஷ்ய புத்திரனுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

+92 என்று ஆரம்பம் ஆகும் இந்த எண்ணிலிருந்து அழைப்பு வந்தால் எடுக்க வேண்டாம் என சைபர் க்ரைம் எச்சரிக்கை

வாட்ஸ்அப் கால் மூலம் புது வகையான சைபர் குற்றம் நடைபெற்று வருவது தெரியவந்துள்ளது. +92 என்று தொடங்கும் எண்ணில் இருந்து வரும் வாட்ஸ்அப் அழைப்புகளை எடுக்க வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. போன் செய்து ஐபோன், ஆப்பிள் தயாரிப்புகளை இலவசமாக தருவதாக கூறி லட்சக்கணக்கில் பணம் பறித்து வருகிறது ஒரு கும்பல். +92 என்ற பாகிஸ்தான் எண்ணில் இருந்து இந்தியர்களை குறிவைத்து பணம் பறிக்கின்றனர். | உஷார்! முன் பணம் கொடுத்து மோசடி! WATCH: https://youtu.be/dCWtNrJ9-e4 |