தனக்குத்தானே மின்சாரம் பாய்ச்சி ஐடி இன்ஜினியர் தற்கொலை

தாழம்பூர் அடுத்த வேங்கடமங்லத்தில் பில்லி சூனியம் பயத்தால் மன அழுத்தம் பாதித்த ஐ.டி பொறியாளர் தனக்கு தானே உடலில் மின்சாரம் பாய்ச்சி தற்கொலை தேனி மாவட்டத்தை சேர்ந்த ஐ.டி பொறியாளர் கார்த்திகேயன்(50), வண்டலூர் அடுத்த வேங்கடமங்கலத்தில் குடும்பத்துடன் வசித்துவந்த நிலையில் மன அழுத்தம் காரணமாக புலம்பியவாறு இருந்துள்ளார். இதனால் குடும்பத்தினர் பரிகார பூஜைகளை செய்துவந்துள்ளனர். அதே வேளையில் தனக்கு பில்லி சூனியம் வைத்துள்ளதாகவும் அதனால் தான் பாதிக்கப்பட்டதாக கார்திகேயன் கூறி வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று முந்தினம் […]
மாடம்பாக்கத்தில் அறுந்து விழுந்த மின்கம்பி, மாணவர்களை காப்பாற்றிய கடைக்காரருக்கு பாராட்டு

மாடம்பாக்கத்தில் மின்சார கம்பி திடீரென அறுந்து விழுந்தது. இதனால் யாரும் பாதிக்கப்படாத வகையில் தடுப்பு ஏற்படுத்தி மாணவர்களை காப்பாற்றிய கடைக்காரருக்கு பாராட்டு குவிகிறது. தாம்பரம் அடுத்த மாடம்பாக்கம் நூத்தஞ்சேரி பிரதான சாலையில் பயங்கர சத்தத்துடன் சற்றுமுன் மின்கம்பி ஒன்று அறுந்து சாலையின் நடுவே விழுந்தது. அந்த மின்கம்பியில் இருந்து தொடர்து புகை வந்ததால் மின்சாரம் பாய்வதை அறிந்த, பழையபொருள் கடை ஊழியர் ஒருவர், அங்கு இருந்த மரக்கழிவுகள் மற்றும் பல்வேறு பொருட்களைக் கொண்டு உடனடியாக சாலையின் குறுக்கே […]
பல்லாவரம் உணவகத்தில் அடுத்தடுத்து ஷாக் : மின்சாரம் பாய்ந்து ஊழியர் பலி

சென்னையில் தனியார் உணவகத்தில் பணிபுரிந்து வந்த ஊழியர்கள் மூவருக்கு அடுத்தடுத்து மின்சாரம் பாய்ந்து ஷாக் அடித்த நிலையில் திரிபுரா மாநிலத்தை சேர்ந்த இளைஞர் பரிதாபமாக உயிரிழப்பு. சென்னை துரைப்பாக்கம் பல்லாவரம் 200 அடி ரேடியல் சாலையில் உள்ள தனியார் உணவகத்தில் திரிபுரா மாநிலத்தை சேர்ந்தவர்கள் உதவியாளர் மற்றும் ஹவுஸ் கீப்பிங் பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் நேற்று இரவு வழக்கம் போல் உணவகத்தை மூடுவதற்கு முன்பு உயிரிழந்த திரிபுரா மாநிலத்தை சேர்ந்த 24 வயதான தன்குமார், 22 […]
பள்ளிக்கரணையில் அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்தவர் பலியான வீடியோ வைரல்

சென்னை பள்ளிக்கரணையில் நள்ளிரவில் மின்கம்பி அறுந்து கிடப்பது தெரியாமல் சிறுநீர் கழிக்க சென்று காலால் மிதித்ததில் ஒருவர் பலியான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு, மின்வாரிய அதிகாரிகள் அலட்சியம் என பொதுமக்கள் குற்றச்சாட்டு, சென்னை பள்ளிகரணை, பழண்டியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ரகு (46) இவர் பிளம்பர் வேலை செய்து வந்தார். இருவருக்கு திருமணமாகி காமட்சி என்ற மனைவியும் கார்த்திக் மற்றும் விஜயக்குமார் என்ற இரு பிள்ளைகள் உள்ளனர். இவர் நேற்று இரவு 11 மணி அளவில் […]
அயனாவரம்: லேப்டாப்புக்கு சார்ஜ் போடும்போது மின்சாரம் தாக்கியதில் பயிற்சி மருத்துவர் சரனிதா (32) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்

சார்ஜரை கையில் பிடித்தவாரே இறந்து கிடந்துள்ளார். மின்சாரத்தில் விளையாடக்கூடாது ஸ்விட்ச் ஆப் செய்திருக்கும் போது தான் பிளக் செய்ய வேண்டும்.
மின்சாரம் தாக்கி கட்டடத் தொழிலாளி உயிரிழந்தாா்

சென்னை பெருங்களத்தூா் பகுதியைச் சோ்ந்தவா் ராஜேந்திரன். இவா், ஆலப்பாக்கத்தில் கட்டப்பட்டு வரும் வீட்டில், வேலை செய்து வந்தாா். இந்த நிலையில், ராஜேந்திரன் வழக்கம்போல சனிக்கிழமை கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்தபோது, எதிா்பாராதவிதமாக உயா் மின்னழுத்த கம்பி மீது உரசியுள்ளது. இதில், மின்சாரம் பாய்ந்து ராஜேந்திரன் தூக்கி வீசப்பட்டாா். இதையடுத்து அருகே இருந்தவா்கள் அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். இது குறித்து மதுரவாயல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து […]
திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே புதூரில் உள்ள வீட்டில் மின்சாரம் தாக்கியதில் கனகா(57) என்ற பெண் உயிரிழந்தார்
தெருவிளக்கு மின்கம்பத்தில் இருந்து அறுந்து விழுந்த மின்கம்பியை மிதித்தபோது கனகா உயிரிழந்தார்.
செல்போன் விபரீதம் மின்சாரம் தாக்கி ஐடி ஊழியர் பலி

சென்னை கிழக்கு தாம்பரம் அடுத்த சர்மா தெருவை சேர்ந்தவர் செந்தில் பிரசாத் (32),இவருடைய மனைவி ரன்ஜினி தேவி (30) இவருவரும் கிண்டியில் உள்ள ஐ.டி நிறுவனத்தில் ஒன்றாக வேலை பார்த்து வருகின்றனர். இன்று வழக்கம் போல் காலை ரன்ஜினி தேவி வேலைக்கு சென்றிருந்த நிலையில் வீட்டில் இருந்த செந்தில் பிரசாத் செல்போனில் தொடர்பு கொண்ட போது எடுக்காததால் சந்தேகமடைந்த ரன்ஜினி தேவி வீட்டிற்க்கு சென்று பார்த்த போது பால்கனியில் செந்தில் பிரசாத் உயிரிழந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து […]
கும்மிடிப்பூண்டி | சரக்கு ரயிலின் மேல் ஏறி செல்ஃபி எடுத்த வடமாநில தொழிலாளி மின்சாரம் பாய்ந்து காயம்.

கும்மிடிப்பூண்டி அருகே நின்றுகொண்டிருந்த சரக்கு ரயில் பெட்டியில் ஏறி, செல்ஃபி எடுத்த வடமாநில தொழிலாளி மின்சாரம் பாய்ந்து காயமடைந்த சம்பவம், பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே உள்ள சின்னஓ புளாபுரம் பகுதியில் தனியார் பிளைவுட் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இத்தொழிற்சாலையில் பணிபுரிந்து வரும் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த அம்ரேஷ்குமார்(18), நேற்று முன்தினம், சென்னை- சூளூர்பேட்டை ரயில்வே மார்க்கத்தில், சின்ன ஓபுளாபுரம் பகுதியில் உள்ள ரயில் பாதையில் நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் […]
கிரைண்டரில் இட்லி மாவு அரைத்த பெண் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு

சிட்லப்பாக்கம் அடுத்த நேதாஜி சுபாஷ் சந்திரப்போஸ் தெருவை சேர்ந்தவர் ஜெகதீஸ் கூலி வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி விஜிலா (38) வீட்டிலேயே இட்லி மாவு அறைத்து விற்பனை செய்து வந்தார். நேற்று இரவு வழக்கம் போல் கிரைண்டரில் மாவு அறைத்து கொண்டிருந்த போது எதிர்பாரத விதமாக மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்டார். வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பிய ஜெகதீஸ் மனைவி விஜிலா மயக்க நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து குரோம்பேட்டை அரசு மருத்துவனை கொண்டு சென்றார். […]