விழுப்புரம், புதுச்சேரியை புரட்டிப் போட்ட கனமழை: மயிலத்தில் 51 செ.மீ. கொட்டியது

ஃபெஞ்சல் புயல் காரணமாக பெய்த கனமழை, வெள்ளத்தால் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்த நெ.பில்ராம்பட்டு கிராமத்தில் தற்காலிக தரைப்பாலம் துண்டிக்கப்பட்டுள்ளது.புதுச்சேரி: ஃபெஞ்சல் புயலால் தமிழகத்தின் விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களும், புதுச்சேரியும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. விழுப்புரம் மாவட்டம் மயிலத்தில் அதிகபட்சமாக 51 செ.மீ. மழை கொட்டியதால், பல பகுதிகள் வெள்ளக்காடாகின. பாதிக்கப்பட்ட பகுதிகளில் ராணுவத்தினர், தேசிய, மாநில பேரிடர் மீட்பு படையினர் தீவிர மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் 30-ம் தேதி மாலை […]
சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் நாளை அதி கனமழைக்கு வாய்ப்புள்ளதால் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூரில் நாளை (நவ.30) அதி கனமழைக்கான ரெட் அலர்ட்-வானிலை ஆய்வு மையம். சென்னை முதல் காரைக்கால் வரை இன்று, மணிக்கு 70 கி.மீ வேகம் வரை தரைக்காற்று வீசக்கூடும். நாளை வட கடலோர மாவட்டங்களில் மணிக்கு 90 கி.மீ வரை சூறைக்காற்று வீசக்கூடும் எனவும் கணிப்பு.
கடலூரில் தூய்மை பணியாளர்கள் வருகை குறித்து அதிரடியாக ஆய்வு செய்த கடலூர் ஆட்சியர் அருண் தம்புராஜ்

மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து துப்புரவு பணியாளர்களையும் ஒரே இடத்திற்கு வரவழைத்து ஆய்வு பணியாளர்கள், வாகனங்கள் எண்ணிக்கை குறித்து ஆய்வு மேற்கொண்ட கடலூர் ஆட்சியர் “80 ஊழியர்கள் பணிக்கு வரவில்லை, பாதிக்கும் மேற்பட்ட வாகனங்கள் இல்லை” ஒன்றரை மாதத்தில் அனைத்து பகுதிக்கும் தூய்மை பணியாளர்கள் வருகை தர வேண்டும்- ஆட்சியர்
கடலூரில் 6 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு உறுதி…

டெங்கு சிகிச்சைக்கு 6 பேர் கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதி 4 பெண்கள் மற்றும் 2 ஆண்களுக்கு டெங்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது டெங்கு பாதிப்புக்கு என தனி வார்டு இல்லாததால் மக்கள் அச்சம் டெங்கு காய்ச்சல் பாதிப்புக்கு தனி வார்டு அமைக்குமாறு கோரிக்கை
பருவநிலை மாற்றத்தால் கடலூர் மாவட்டத்தில் பரவி வரும் மர்ம காய்ச்சல் எதிரொலி

கடலூர் அரசு மருத்துவமனையில் குவிந்து வரும் நோயாளிகளின் கூட்டம். கடலூர் அரசு மருத்துவமனையில் நோயாளிகள் நீண்ட வரிசையில் காத்திருப்பு. இன்று காலை மட்டும் 1000க்கும் மேற்பட்டோர் காய்ச்சல் பாதிப்புக்கு சிகிச்சை. கடலூர் அரசு மருத்துவமனையில் போதிய இடவசதி இல்லாததால் கடும் நெருக்கடி என புகார்.