ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் சூப்பர்-4 சுற்று போட்டிகள், இறுதி போட்டி கொழும்பில் இருந்து ஹம்பன்தோட்டாவுக்கு மாற்றம்

ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் சூப்பர்-4 சுற்று போட்டிகள், இறுதி போட்டி கொழும்பில் இருந்து ஹம்பன்தோட்டாவுக்கு மாற்றம் செய்துள்ளனர். இலங்கையில் மழை பெய்து வருவதால் போட்டிகள் கொழும்பில் இருந்து மாற்றப்பட்டன.

உலகக் கோப்பை கிரிக்கெட் இந்தியா – பாகிஸ்தான் போட்டி டிக்கெட் ரூ. 57 லட்சத்துக்கு விற்பனையால் ரசிகர்கள் அதிர்ச்சி

உலகக் கோப்பை கிரிக்கெட் இந்தியா – பாகிஸ்தான் போட்டி டிக்கெட் ரூ. 57 லட்சத்துக்கு விற்பனையால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்தியா – பாகிஸ்தான் போட்டி டிக்கெட் மறுவிற்பனையில் கொள்ளை லாபம் அடைந்துள்ளது. எந்த தடங்கல்களும் இல்லாமல் போட்டியை பார்க்கும் வகையில் இருக்கும் 2 இருக்கை டிக்கெட் ரூ.57 லட்சத்துக்கு விற்பனை செய்யப்படுகின்றது.

தொடரை கைப்பற்றிய வெஸ்ட் இண்டீஸ்

இந்தியாவுக்கு எதிரான 5வது டி20 போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி 5 போட்டிகள் கொண்ட தொடரில் 3 போட்டிகளை வென்று தொடரை கைப்பற்றியது வெஸ்ட் இண்டீஸ் அணி 166 ரன்கள் இலக்குடன் ஆடிய வெஸ்ட் இண்டீஸ், 18 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்கள் எடுத்து வெற்றி முதலில் ஆடிய இந்தியா, 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 165 ரன்கள் சேர்த்தது

புச்சிபாபு கிரிக்கெட் தொடர்; 15ம் தேதி தொடக்கம்

புச்சிபாபு கிரிக்கெட் தொடர் கோவை, திண்டுக்கல், சேலம், திருநெல்வேலி ஆகிய 4 இடங்களில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. டிஎன்சிஏ பிரசிடண்ட் லெவன், டிஎன்சிஏ லெவன், இந்தியன் ரயில்வே, பரோடா, ஹரியாணா, மும்பை, டெல்லி, கேரளா, திரிபுரா, மத்தியபிரதேசம், பெங்கால், ஜம்மு மற்றும் காஷ்மிர் ஆகிய 12 அணிகள் கலந்துகொள்ளும் இப்போட்டி வரும் 15ம் தேதி தொடங்குகிறது.

இந்தியாவில் நடைபெறவுள்ள ஐசிசி 50 ஓவர் உலகக் கோப்பை தொடருக்கான அட்டவணையில், 9 போட்டிகளின் தேதி மாற்றம்!

அக்டோபர் 15ம் தேதி நடைபெற இருந்த இந்தியா – பாகிஸ்தான் போட்டி, அக்டோபர் 14ம் தேதிக்கு மாற்றம்!

முதல் டி20 கிரிக்கெட்: 4 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி திரில் வெற்றி

இந்திய அணிக்கு எதிரான முதல் டி 20 போட்டியில் 4 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி திரில் வெற்றி பெற்றதுதரோபா, வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி ஏற்கனவே டெஸ்ட் மற்றும் ஒரு நாள் தொடரை கைப்பற்றியது. அடுத்ததாக 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்கிறது. இதன்படி இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி டிரினிடாட்டின் தரோபாவில் உள்ள பிரையன் லாரா ஸ்டேடியத்தில் […]

அண்ணாமலைக்கு அமைச்சர் தா.மோ. அன்பரசன் கேள்வி

ஆலந்தூரில் கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி 60 அணிகள் கலந்துக்கொண்ட கிரிகெட் போட்டியை அமைச்சர் தா.மோ.அன்பரசன் துவக்கி வைத்து அவர்களுக்கு கிரிகெட் விளையாட்டு உபகரணங்களை வழங்கினார். அப்போது பேசிய அமைச்சர் அன்பரசன்:- மணிப்பூர் கலவரம் பெண்கள் மீதான பாலியல் தாக்குதல் நாட்டில் எங்கும் சிறுபான்மையினர் நிம்மதியாக வாழமுடியாத சூழல் உள்ளது. ராமேஸ்வரத்தில் பாஜக நடத்தும் 9 ஆண்டுகால சாதனையில் 15லட்சம் வழங்கியது. 18 கோடி இளைஞர்களுக்கு வேலை, ஜி.எஸ்.டி வரி அமுல் செய்து மாநில அரசுகளுக்கு நெருக்கடி ஏற்படுத்துவது […]

2வது போட்டி டிரா: தொடரை வென்றது இந்தியா

இந்தியா – மேற்கிந்திய தீவுகள் இடையேயான 2வது டெஸ்டின் கடைசி நாள் ஆட்டம் மழையால் முழுவதும் தடைபட்டது. இதனால் போட்டி டிரா ஆனதாக அறிவிக்கப்பட்டது. முதல் போட்டியில் வெற்றி பெற்றதால் இந்தியா 1-0 கணக்கில் கோப்பை வென்றது. சிராஜ் ஆட்டநாயகன் விருது பெற்றார். ஸ்கோர்: IND 1st In-438 & 2nd In-181/2 d. WI 1st In-255 & 2nd In-76/2.

ரிஷப் பண்ட் இடத்தை நிரப்புவாரா இஷான் கிஷன்?

இஷான் கிஷன் அறிமுக டெஸ்ட் போட்டியில் அரை சதம் (34 பந்தில் 52 ரன்) அடித்து அசத்தினார். அதிரடியாக ஆடுவதாலும், விக்கெட் கீப்பிங்கில் சிறப்பாக செயல்படுவதாலும் இவரால் ரிஷப் பண்ட் இடத்தை நிரப்ப முடியும் என்ற கருத்துகள் உலா வருகின்றன. ஆனால் பல இன்னிங்ஸ் ஆடினால்தான் இஷான் கிஷன் திறமையை கணிக்க முடியும் என்று முன்னாள் வீரர்கள் சிலர் கூறியுள்ளனர்.

உலகக்கோப்பை கிரிக்கெட்: செப்.5-க்குள் வீரர்கள் பட்டியலை ஒப்படைக்க ஐசிசி அறிவுறுத்தல்

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் வீரர்கள் பட்டியலை செப்.5-க்குள் ஒப்படைக்க ஐசிசி அறிவுறுத்தியுள்ளது. இந்தியாவில் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது.