இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் பிஷன் சிங் பேடி (77) காலமானார்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சுழற்பந்து ஜாம்பாவனுமான பிஷன் சிங் பேடி இன்று உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 77. புகழ்பெற்ற சுழற்பந்து வீச்சாளரான பிஷன் சிங் பேடி 1967ஆம் ஆண்டு முதல் 1979ஆம் ஆண்டு வரை இந்திய அணிக்காக விளையாடினார். மொத்தம் 67 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 266 விக்கெட்டுகளையும், 10 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 7 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தசரஸில் பிறந்த பிஷன் சிங் பேடி, டெல்லி அணிக்காக […]

சென்னையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு உற்சாக வரவேற்பு

11 ஆண்டுகளுக்குப் பின் பாகிஸ்தான் அணி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் விளையாடவுள்ளது. நாளை திங்கள்கிழமை ஆப்கானிஸ்தான் அணியை சென்னையில் எதிர்கொள்கிறது பாகிஸ்தான். இதன்பின் வரும் 27ம் தேதி தென் ஆப்பிரிக்கா அணியை எதிர்த்தும் சென்னையில் விளையாடவுள்ளது பாகிஸ்தான். இதற்காக ஒருவாரம் சென்னையில் தங்கவுள்ள பாகிஸ்தான் வீரர்கள் சென்னை விமான நிலையம் வந்தனர். விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் பாகிஸ்தான் வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 11 ஆண்டுகளுக்குப் பிறகு…: கடைசியாக 2012ல் நடந்த […]

உலகக்கோப்பை கிரிக்கெட் – வங்கதேசத்தை 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது இந்தியா

41.3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 261 ரன்கள் எடுத்து இந்தியா அபார வெற்றி முதலில் ஆடிய வங்கதேச அணி, 8 விக்கெட் இழப்புக்கு 256 ரன்கள் எடுத்தது அதிகபட்சமாக விராட்கோலி – 103*, சுப்மன் கில் – 53, ரோஹித் ஷர்மா – 48 ரன்கள் எடுத்தனர்.

லாஸ் ஏஞ்சல்சில் 2028ம் ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக்கில் கிரிக்கெட் சேர்ப்பு

கிரிக்கெட், ஸ்குவாஷ் உள்பட 5 போட்டிகளை சேர்ப்பதாக ஒலிம்பிக் ஒருங்கிணைப்பு குழு அறிவிப்பு 1900ம் ஆண்டு பாரிஸில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் கடைசியாக கிரிக்கெட் விளையாடப்பட்டது. 128 ஆண்டுகள் கழித்து ஒலிம்பிக்கில் டி20 கிரிக்கெட் விளையாடப்பட உள்ளது. பேஸ்பால், ஃபிளாக் கால்பந்து, ஸ்குவாஷ், லாக்ரோஸ் ஆகிய விளையாட்டுகளும் சேர்ப்பு

ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கெட்டை சேர்க்க பரிந்துரை

2028 ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கெட் விளையாட்டை சேர்க்க சர்வதேச ஒலிம்பிக் கமிட்டிக்கு லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் ஏற்பாட்டு கமிட்டி பரிந்துரை அளித்துள்ளது. சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி ஒப்புதல் தந்தால் 2028 ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட் விளையாட்டு இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

2028ம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில், கிரிக்கெட்டும் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

பேஸ்பால், சாஃப்ட்பால், ஸ்குவாஸ் உள்ளிட்ட போட்டிகளும் சேர்க்கப்படவுள்ளன. அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.

உலகக் கோப்பை கிரிக்கெட்: இந்தியா-ஆஸ்திரேலியா ஆட்டத்தில் கோலி, வார்னர் சாதனை

உலகக்கோப்பை கிரிக்கெட்டில் சென்னையில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதின.சென்னை, ஐ.சி.சி. நடத்தும் 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதின. இந்த போட்டியில் இந்தியா 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

உலகக் கோப்பையில் அதிக ரன்:

உலக கோப்பை வரலாற்றில் அதிக ரன் எடுத்த வீரர்கள் பட்டியலில் இந்திய ஜாம்பவான் சச்சின் முன்னிலையில் உள்ளார். இவர், 45 போட்டியில், 6 சதம், 15 அரைசதம் உட்பட 2278 ரன் குவித்துள்ளார். ‘டாப்-5’ பேட்ஸ்மேன்கள் சச்சின் (இந்தியா) 45 போட்டிகளில் 6 சதம் உட்பட 2278 ரன்கள் பாண்டிங் (ஆஸி.,) 46 போட்டிகளில் 5 சதம் உட்பட 1743 ரன்கள் சங்ககரா (இலங்கை) 37 போட்டிகளில் 5 சதம் உட்பட 1532 ரன்கள் லாரா (வெ.இ.,) […]

உலகக் கோப்பை கிரிக்கெட் இன்று தொடக்கம்: முதல் ஆட்டத்தில் இங்கிலாந்து-நியூசிலாந்து பலப்பரீட்சை

10 அணிகள் பங்கேற்கும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஆமதாபாத்தில் இன்று தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் இங்கிலாந்து-நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகிறது.ஆமதாபாத், உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி (50 ஓவர்) 1975-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. அது முதல் 4 ஆண்டுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு வருகிறது. கடைசியாக 2019-ம் ஆண்டு இங்கிலாந்தில் நடந்த உலகக் கோப்பை போட்டியில் இங்கிலாந்து அணி பட்டத்தை வென்றது. இந்த நிலையில் 13-வது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் இன்று […]