அரசு தலையீடு: இலங்கை அணியை சஸ்பெண்ட் செய்த ஐசிசி

அரசு தலையீடு காரணமாக இலங்கை கிரிக்கெட் அணியை சஸ்பெண்ட் செய்து ஐசிசி உத்தரவிட்டுள்ளது. ஐசிசி, இலங்கைஐசிசி, இலங்கைபுதிய தலைமுறை அரசு தலையீடு காரணமாக இலங்கை கிரிக்கெட் அணியை சஸ்பெண்ட் செய்து ஐசிசி உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக ஐசிசி எனப்படும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ’தற்போது நடைபெற்றுவரும் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இலங்கை அணி பெரும்பாலான போட்டிகளில் படுதோல்வி அடைந்து வருகிறது. இதனையடுத்து இலங்கை அரசு இலங்கை கிரிக்கெட் வாரியத்தை கலைத்து அறிவித்துள்ளது. இலங்கை கிரிக்கெட் […]

ஒருநாள் போட்டிகளில் பவுலர்களுக்கான தரவரிசை பட்டியலில் மீண்டும் முதலிடத்தை பிடித்தார் இந்தியாவின் முகமது சிராஜ்

சர்வதேச ஒருநாள் போட்டிகளுக்கான பேட்டிங் தரவரிசையில் முதலிடத்திற்கு முன்னேறினார் சுப்மன் கில்

விதிகளுக்கு உட்பட்டு நடுவரிடம் முறையிட்டேன்” – மேத்யூஸ் டைம்டு அவுட் குறித்து ஷகிப் அல் ஹசன்

புதுடெல்லி: இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் விவாத பொருளாகி உள்ளது இலங்கை வீரர் மேத்யூஸ் ‘டைம்டு அவுட்’ முறையில் ஆட்டமிழந்த விதம். கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக இந்த சம்பவம் அரங்கேறி உள்ளது. வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் இது நடந்தது. இந்த சூழலில் அது குறித்து விளக்கம் கொடுத்துள்ளார் வங்கதேச அணியின் கேப்டன் ஷகிப் அல் ஹசன். “இப்போது நடுவரிடம் முறையிட்டால் மேத்யூஸ் வெளியேற வேண்டும் என எங்கள் அணியின் ஃபீல்டர் […]

வரலாற்றில் முதல் முறை ‘டைம்டு அவுட்’ ஆன ஏஞ்சலோ மேத்யூஸ் – நடந்தது என்ன?

டெல்லி: வங்கதேசத்துக்கு எதிரான உலகக் கோப்பை லீக் ஆட்டத்தில் இலங்கையின் ஏஞ்சலோ மேத்யூஸ் ‘டைம்டு அவுட்’ முறையில் ஆட்டமிழந்துள்ளார். இதன்மூலம் 140 ஆண்டுகளுக்கும் மேலான உலக கிரிக்கெட் வரலாற்றில் ‘டைம்டு அவுட்’ முறையில் ஆட்டமிழந்த முதல் வீரர் ஆகியுள்ளார் ஏஞ்சலோ மேத்யூஸ். இந்த விதத்தில் இது ஒரு எதிர்மறை உலக சாதனை. முதல் பந்தை சந்திக்க காலதாமதம் செய்ததன் காரணமாக, வங்கதேச முறையீட்டினை அடுத்து நடுவர்களால் மேத்யூஸ் டைம்டு அவுட் செய்யப்பட்டார். டைம்டு அவுட்: இந்த விதிமுறையை […]

கிரிக்கெட் வாரியத்தை கலைத்த இலங்கை அரசு

50 ஓவர் உலக கோப்பையில் இலங்கை அணி தொடர் தோல்வியை சந்தித்து வருவதால், இலங்கை கிரிக்கெட் வாரியத்தை கலைத்தது அந்நாட்டு அரசு. 1996 உலக கோப்பை வென்றபோது கேப்டனாக இருந்த அர்ஜுன ரணதுங்கா தலைமையில், ஓய்வுபெற்ற நீதிபதிகளை உள்ளடக்கிய இடைக்கால குழு அமைக்கப்பட்டுள்ளது.

உலகக்கோப்பை 50 ஓவர் கிரிக்கெட் போட்டியின் இன்றைய ஆட்டம் புனேவில் நடக்கிறது

பிற்பகல் 2 மணிக்கு துவங்கும் போட்டியில் தென் ஆப்ரிக்காவும், நியூசிலாந்தும் மோதுகின்றன.புள்ளிப்பட்டியலில் தற்போது தென் ஆப்ரிக்கா இரண்டாவது இடத்திலும், நியூசிலாந்து மூன்றாவது இடத்திலும் உள்ளன.இந்தியா முதலிடத்தில் உள்ளது.

உலககோப்பை கிரிக்கெட் தொடர் 2023; வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வெற்றி

அதிகபட்சமாக பாகிஸ்தான் அணி வீரர் ஃபகார் ஜமான் 81 ரன்கள் விளாசி அசத்தல்.

ஆப்கானிஸ்தான் அணி வெற்றி

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் 2023; இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணி அபார வெற்றி. அதிகபட்சமாக ஆப்கானிஸ்தான் வீரர் அஸ்மத்துல்லா உமர்சாய் 73 ரன்கள் குவித்து அசத்தல்.

லக்னோவில் நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்தை, இந்தியா 100 ரன்கள் வித்யாசத்தில் தோற்கடித்தது

முதலில் பேட் செய்த இந்தியா 229 ரன்கள் எடுத்தது..இங்கிலாந்து 129 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது.34.5 ஓவரில் இங்கிலாந்தை இந்தியா சுருட்டியது.இந்த வெற்றியின் மூலம் 12 புள்ளிகளுடன் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.இதுவரை ஆடிய 6 ஆட்டங்களிலும் இந்தியா வென்றது குறிப்பிடத்தக்கது.