தமிழ்நாட்டில் 200-க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் திடீர் மூடல்
தமிழகத்தில்எவ்வித முன்னறிவிப்புமின்றி 200-க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் மூடப்பட்டதால் சுமார் 8 லட்சம் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பட்டாசு விபத்துகளை தடுப்பதற்காக விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பட்டாசு ஆலைகளிலும் ஆய்வு நடத்தி விதிமீறல்கள் இருந்தால் நடவடிக்கை எடுக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது. இதற்காக அமைக்கப்பட்ட குழு நேற்று ஆய்வுப்பணியை துவக்கியதும் பல ஆலைகள் அச்சத்தில் மூடின.