சேலையூரில் பயங்கர தீ விபத்து பிரியாணி கடை, பட்டாசு கடை எரிந்து சாம்பல்

தாம்பரம் அடுத்த சேலையூரில் பேக்கரி, பிரியாணி கடை உள்ளிட்ட அடுத்து அடுத்து 5 கடைகளில் பயங்கர தீவிபத்து, பதுக்கிய பட்டாசு வெடித்து சிதறியதால் பரபரப்பு ஏற்பட்டது. தாம்பரம் அடுத்த சேலையூர் பகுதியை சேர்ந்தவர் ரவி தாம்பரம் வேளச்சேரி பிரதான சாலை சேலையூர் காவல் நிலையம் அருகே ஹைதராபாத் பிரியாணி கடை நடத்தி வருகிறார். இவர்கடையில் இன்று ஏற்பட்ட தீ அடுத்துள்ள ஆரோக்கியா பேக்கரி, பர்னிச்சர் கடை, டீக்கடை, பெட் தயாரிக்கும் கடை என அடுத்து அடுத்து தீ […]
நேற்று இரவில் இருந்தே பட்டாசுகள் வெடிக்கப்பட்டு வருவதால் சென்னையில் காற்று மாசு அதிகரித்துள்ளது

சென்னையில் பல்வேறு இடங்களில் காற்றின் தரக்குறியீடு 100 முதல் 200 வரை பதிவாகி உள்ளது. கும்மிடிப்பூண்டி 230, பெருங்குடி 169, அரும்பாக்கம் 134, வேலூர் 123, ராயபுரம் 121, கொடுங்கையூர் 112, கடலூர் 112, மணலியில் 109 என்ற அளவில் காற்றின் தரக்குறியீடு பதிவாகி உள்ளது.
தீபாவளி நாளில் இந்த ஆண்டும் 2 மணிநேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி – தமிழக அரசு

காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசுகள் வெடிக்க அனுமதி உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தீபாவளி பண்டிகைக்கு பொதுமக்கள் பசுமை பட்டாசுகளை மட்டுமே வெடிக்க அனுமதி தீபாவளியன்று காற்றின் தரம் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மூலம் தீவிரமாக கண்காணிக்கப்படும் எனவும் தகவல்
திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில் வெடிக்கடைகளில் விற்பனைக்கு வைத்திருந்த வெடிகள் வெடித்து விபத்து

தீயணைப்புத் துறையினர் சுமார் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. குடவாசல் சாலையில் 50-க்கும் மேற்பட்ட வெடிக்கடைகள் உள்ள நிலையில் வெடி விபத்தால் பரபரப்பு
அரியலூர் பட்டாசு விபத்தில் ஆலை உரிமையாளர் ராஜேந்திரன், மருமகன் அருண் ஆகியோர் கைது

திருமானூர் அருகே விராகலூரில் நடைபெற்ற விபத்தில் 11 பேர் சம்பவ இடத்திலேயே பலியானது குறிப்பிடத்தக்கது.
பலி எண்ணிக்கை 4 ஆக உயர்வு
அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே வெற்றியூரில் பட்டாசு குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தார் எண்ணிக்கை 4 ஆக உயர்வு. 5 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் தஞ்சை மருத்துவக் கல்லூரியில் அனுமதி.
அரியலூர் மாவட்டம் வெற்றியூரில் நிகழ்ந்த பட்டாசு ஆலை விபத்தில் பெண் ஒருவர் உடல் சிதறி உயிரிழப்பு
ஆலையின் உள்ளே 15 பேர் சிக்கியிருப்பதாக வெளியாகியுள்ள தகவலால் அதிர்ச்சி 3 பேர் படுகாயங்களுடன் மீட்பு- எஞ்சியவர்களை மீட்கும் பணி தீவிரம்
தமிழக கர்நாடக எல்லை அருகே அத்திப்பள்ளி எனும் பகுதியில் இயங்கி வந்த பட்டாசுக்கடை வெடி விபத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 14 பேர் உயிரிழந்த செய்தி அறிந்து மிகுந்த துயருற்றேன்

பலியானவர்களின் குடும்பங்களுக்கு என் ஆழ்ந்த வேதனையைத் தெரிவிக்கிறேன். காயமுற்றோர் விரைந்து குணமடைய விழைகிறேன். பட்டாசு போன்ற எளிதில் தீப்பிடிக்கிற ஆபத்தான பொருட்களைக் கையாள்வதில் கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டுமென்பதே இக்கொடூர விபத்து உணர்த்தும் பாடம். இதுபோன்ற துயர சம்பவங்கள் மீண்டும் நிகழாதிருக்க வேண்டும். -கமல்ஹாசன்
வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை தீவுத்திடலில் பட்டாசு விற்பனை..

அக்டோபர் 29 – நவம்பர் 12 வரை 15 நாட்களுக்கு, 55 கடைகள் மூலம் பட்டாசு விற்பனை நடைபெறும் என தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகம் அறிவிப்பு