மாடு முட்டி சிறுமி காயமடைந்த சம்பவத்தில் மாட்டின் உரிமையாளர் விவேக் மீது 2 பிரிவின் கீழ் காவல்துறை வழக்குப்பதிவு;

கவனக்குறைவாக செயல்பட்டு உயிருக்கு ஆபத்து ஏற்படுத்துதல் உள்ளிட்ட 2 பிரிவின் கீழ் அரும்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
சென்னையில் மாடு முட்டி பள்ளிக் குழந்தை படுகாயம்

“கால்நடைகளை கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்; பொதுமக்களின் குறிப்பாக குழந்தைகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, சென்னையில் கால்நடைகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த சென்னை மாநகராட்சியும், காவல்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட குழந்தைக்கு தரமான மருத்துவம் அளிக்கப்படுவதை தமிழ்நாடு அரசு உறுதி செய்ய வேண்டும்.
சென்னை: சிறுமியை மாடு முட்டிய சம்பவம்

2 மாடுகள் பெரம்பூர் டிப்போவில் பிடித்து வைக்கப்பட்டுள்ளன. நகர்ப்புறங்களில் சுற்றி திரியும் மாடுகளை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. தனியார் மருத்துவமனையில் குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மாநகரப் பகுதியில் சுற்றும் மாடுகளை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்- மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன்.
பள்ளி குழந்தையை பந்தாடிய மாடு, பொதுமக்கள் சாலையில் நடக்க அச்சம்

சென்னை அரும்பாக்கத்தில் பள்ளி குழந்தையை மாடு முட்டிய காட்சி வீடியோ வெளியாகி வைரலாகி உள்ளது.அரும்பாக்கம் எம் எம் டி ஏ காலனி பகுதியில் உள்ள இளங்கோ தெருவில் நேற்று பள்ளி சென்ற சிறுமி நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது அங்கே வந்த இரண்டு மாடுகள் அந்த சிறுமியை முட்டி தள்ளின.சில நிமிடங்கள் வரை யாரும் நெருங்க விடாமல் அந்த சிறுமியை அந்த மாடு முட்டி தள்ளிக் கொண்டு இருந்தது.அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் விரைந்து வந்து அந்த மாட்டை […]