“மிக்ஜாம் புயல் – ரூ.1487 கோடி நிவாரணம்“

மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சுமார் 25 லட்சம் குடும்பங்களுக்கு ரூ.1,487 கோடி நிவாரண தொகை வழங்கப்பட்டுள்ளது-சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல். நிவாரணம் வழங்கப்பட்டது தொடர்பாக முழுமையான அறிக்கை தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு தலைமை நீதிபதி அமர்வு உத்தரவு.

கள்ளழகர் வைபவம் – நீதிமன்றம் உத்தரவு

சித்திரை திருவிழாவின் போது கள்ளழகரை சாதிய ரீதியான மற்றும் தனியார் மண்டகப்படிகளுக்கு கொண்டு செல்ல தடை விதிக்க கோரிய வழக்கு கள்ளழகர் வழக்கமாக செல்லும் பாதையில், 483 மண்டக படிகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது – கோயில் நிர்வாகம் தற்போது வரை சாதிய ரீதியான பிரச்சினைகள் ஏதும் ஏற்பட்டதாக புகார் ஏதுமில்லை – கோயில் நிர்வாகம் விளக்கம்

பதஞ்சலி வழக்கில் பாபா ராம்தேவின் நிபந்தனையற்ற மன்னிப்பை ஏற்க உச்சநீதிமன்றம் மறுப்பு!

‘மன்னிப்பு’ என்கிற பெயரில் எதையாவது எழுதிக் கொடுத்து விட்டு தப்பித்துவிடலாம் என்று நினைக்காதீர்கள் நீதிமன்றத்தின் அனைத்து உத்தரவுகளையும் மீறிவிட்டு தற்போது மன்னிப்புக் கேட்டால் எப்படி ஏற்க முடியும்? மன்னிப்பை ஏன் எழுத்துப்பூர்வமாகத் தாக்கல் செய்யவில்லை? -பதஞ்சலி நிறுவனம் வெளியிட்ட தவறான விளம்பரங்கள் குறித்த வழக்கில் உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி

அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராக உத்தரவு

சட்டவிரோத மணல் அள்ளும் விவகாரம் வரும் 25ம் தேதி திருச்சி, தஞ்சாவூர், கரூர், அரியலூர் மற்றும் வேலூர் 5 மாவட்ட ஆட்சியர்கள் அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராக உச்சநீதிமன்றம் உத்தரவு

ம.தி.மு.கவுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க முடியாது

மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க முடியாது என இந்திய தேர்தல் ஆணையம் பதில் ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே போட்டியிடுவதால் பம்பரம் சின்னத்தை ஒதுக்க முடியாது என மதிமுக வழக்கறிஞர்களுக்கு மின்னஞ்சல் மூலம் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது பம்பரம் சின்னம் ஒதுக்குவது குறித்து இன்று காலை 9 மணிக்குள் முடிவெடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டிருந்தது

ஓ.பி.எஸ். இரட்டை இலையைப் பயன்படுத்தத் தடை தொடரும்” – உயர்நீதிமன்றம்

அ.தி.மு.க.வில் ஒற்றைத் தலைமை பிரச்சனை பூதாகரமாகி ஓ.பி.எஸ். மற்றும் இ.பி.எஸ். ஆகிய இருவரும் நீதிமன்றத்திலும் தேர்தல் ஆணையத்திலும் முறையிட்ட நிலையில், எடப்பாடி பழனிசாமியை அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளராகத் தேர்தல் ஆணையம் கடந்த ஆண்டு ஏப்ரல் 20 ஆம் தேதி (20.04.2023) அங்கீகரித்தது. இதன் மூலம் இரட்டை இலை சின்னம் எடப்பாடி பழனிசாமி வசம் என்பது உறுதியானது. அதே சமயம் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தொடர்ந்து அ.தி.மு.க.வின் கொடிகள், பெயர், லெட்டர் பேடு, […]

உச்சநீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்!

இனி தவறான கூற்றுக்களை உள்ளடக்கிய விளம்பரங்களை வெளியிட மாட்டோம் என உறுதியளிப்பதாக பதஞ்சலி நிறுவனம் தெரிவிப்பு ஏப்ரல் 2-ம் தேதி பாபா ராம்தேவ் மற்றும் பாலகிருஷ்ணா ஆகியோர் நேரில் ஆஜராகுமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.