“காவிரி விவகாரம் – உச்சநீதிமன்றத்தில் முறையிடுவோம்”

தண்ணீர் இருக்கும் போதும் திறந்துவிடுவோம் என கர்நாடக அரசு எப்போதும் கூறியதில்லை. காவிரி நீர் மேலாண்மை வாரியம் உத்தரவிட்ட போதும் தண்ணீர் திறக்க கர்நாடகா மறுக்கிறது. கர்நாடகாவை கேள்வி கேட்க வேண்டியது உச்சநீதிமன்றம்தான். காவிரி தண்ணீர் தொடர்பாக உச்சநீதிமன்றத்தை நாடுவோம் –சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் அமைச்சர் துரைமுருகன் பேட்டி
இ-பாஸ் முறைக்கு ஊட்டி, கொடைக்கானலில் கடும் எதிர்ப்பு!..

கூட்ட நெரிசல் அதிகரித்ததையடுத்து இ-பாஸ் முறையை அமல்படுத்துமாறு தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டு இருந்தது சென்னை உயர்நீதிமன்றம்!
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 36வது முறையாக நீட்டிப்பு!..

சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு காணொலி மூலம் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் நீதிமன்ற காவலை ஜூன் 4ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவு சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் அமலாக்கத் துறையால் கடந்த ஆண்டு ஜூன் 14ஆம் தேதி செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். “வங்கி சார்பில், அசல் ஆவணங்கள் முழுமையாக சமர்ப்பிக்கப்படும் வரை சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கின் விசாரணையை ஒத்திவைக்க வேண்டும்” சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் […]
சென்னை உயர் நீதிமன்றத்திற்கு நாளை முதல் ஜூன் 2 ஆம் தேதி வரை கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது

விடுமுறைக் கால அவசர வழக்குகளை வாரந்தோறும் திங்கள், செவ்வாய் கிழமைகளில் தாக்கல் செய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவசர கால வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிகளின் பெயரையும் ஐகோர்ட் தலைமைப் பதிவாளர் வெளியிட்டார்.
மனைவியைக் கொன்ற கட்டிட தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை

தாம்பரம் அருகே மனைவியை கொலை செய்த வழக்கில் கணவருக்கு ஆயுள் தண்டனை வழங்கி செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. தாம்பரம் அடுத்த அஸ்தினாபுரம் மகேஸ்வரி நகர் இரண்டாவது குறுக்கு தெருவை சேர்ந்தவர் வரபிரசாதம் (60) இவர் கட்டிட வேலை செய்து வருகின்றார். இவரது மனைவி விசுவாசம் (50) இவரும் வேறு பகுதியில் கட்டிட வேலை செய்து வந்துள்ளார். மனைவி விசுவாசம் காலையில் வேலைக்கு சென்று மாலை நேரத்தில் வீட்டிற்க்கு வராமல் இரவு நேரத்தில் வீட்டிற்க்கு வந்ததால் […]
அமலாக்கத்துறையால் கைதாகியுள்ள டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என டெல்லி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இரண்டாவது மனுவும் நிராகரிப்பு

“மாநிலத்தை நாங்கள் நிர்வாகிக்கவில்லை. எல்லாவற்றுக்கும் நீதிமன்றம் தீர்வை அளிக்க முடியாது” என நீதிபதிகள் கருத்து
ஆதாரங்களை அழிக்க வேண்டாம்: சஞ்சய் சிங்குக்கு நீதிமன்றம் உத்தரவு!

சாட்சியங்களைக் கலைக்கவோ, அழிக்கவோ கூடாது என ஆம் ஆத்மி கட்சித் தலைவர் சஞ்சய் சிங்குக்கு டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கலால் கொள்கை முறைகேடு வழக்கில் சாட்சியங்களைக் கலைக்கவோ, சாட்சியங்களை அழிக்கவோ கூடாது என ஆம் ஆத்மி கட்சித் தலைவர் சஞ்சய் சிங்குக்கு டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆம் ஆத்மி மூத்த தலைவரும், மக்களவை உறுப்பினருமான சஞ்சய் சிங்குக்கு உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை ஜாமீன் வழங்கியது.
வடலூரில் சத்திய ஞானசபை நிலத்தில் வள்ளலார் சர்வதேச மையம் கட்ட தடை விதிக்க முடியாது: ஐகோர்ட் ஆணை

வடலூரில் சத்திய ஞானசபை நிலத்தில் வள்ளலார் சர்வதேச மையம் கட்ட தடை விதிக்க முடியாது என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. பெருவெளியில் வள்ளலார் சர்வதேச மையம் அமைப்பதற்கு தடை விதிக்கக் கோரி பாஜக வழக்கு தொடர்ந்தது. பாரதிய ஜனதா கட்சியின் ஆன்மிக மற்றும் கோயில் மேம்பாட்டு பிரிவு மாநில செயலாளர் வினோத் ராகவேந்திரன் வழக்கு தொடர்ந்தார். பாரதிய ஜனதா கட்சியின் கோரிக்கையை நிராகரித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
கள்ளழகர் திருவிழா- உயர்நீதிமன்ற கிளை கட்டுப்பாடு

கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வின் போது உயர் அழுத்த மோட்டார்களை பயன்படுத்தி தண்ணீர் பீய்ச்சி அடிக்க தடை பாரம்பரிய முறையில், தோல் பை வைத்து மட்டுமே தண்ணீர் பீய்ச்சி அடிக்க வேண்டும் “பெண்கள், குழந்தைகள், முதியோர்கள் மீது தண்ணீர் பீய்ச்சி அடிப்பதை காவல்துறையினர் அனுமதிக்கக் கூடாது”
டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங்குக்கு ஜாமின் வழங்கியது உச்சநீதிமன்றம்