சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக ஆர்.மகாதேவன் நியமனம்

சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக ஆர்.மகாதேவனை நியமித்து ஜனாதிபதி உத்தரவு அளித்துள்ளார். உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக உள்ள கங்காபூர்வாலா நாளையுடன் ஓய்வுபெறுகிறார். தலைமை நீதிபதி கங்காபூர்வாலா ஓய்வுபெறும் நிலையில் பொறுப்பு தலைமை நீதிபதியாக ஆர்.மகாதேவன் நியமனம் செய்துள்ளனர்.
“நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தடையில்லை”

நீட் தேர்வு முடிவுகளை திட்டமிட்டபடி வெளியிட எந்த தடையும் இல்லை என உச்ச நீதிமன்றம் உத்தரவு 2024 நீட் நுழைவுத்தேர்வு மே 5-ல் நடைபெற்ற நிலையில் ஜூன் 14ஆம் தேதி முடிவுகள் வெளியாக உள்ளன..
விசாரணை நீதிமன்றத்தை அணுகி டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் ஜாமின் பெற்றுக் கொள்ளலாம் : உச்சநீதிமன்றம்

டெல்லி : விசாரணை நீதிமன்றத்தை அணுகி டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் ஜாமின் பெற்றுக் கொள்ளலாம் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. வழக்கு விசாரணையின் போது, கெஜ்ரிவால் கைது நடவடிக்கை எந்த ஆதாரங்கள் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது என்றும் ஆம் ஆத்மி மீதான குற்றச்சாட்டை எவ்வாறு நிரூபிக்கப் போகிறீர்கள் என்றும் உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது
ரெட்பிக்ஸ் யூ-டியூப் சேனலின் தலைமை ஆசிரியர் ஃபெலிக்ஸ் ஜெரால்ட் கைது செய்யப்பட்டதாக அரசு தரப்பில் உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து, அவரது முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது
“போலீஸ் உதவியின்றி கஞ்சா விற்பனை நடக்க வாய்ப்பில்லை”

காவல்துறையின் உதவி இல்லாமல் கஞ்சா வியாபாரம் நடக்க வாய்ப்பில்லை. நடவடிக்கை கடுமையாக இருந்தால் கஞ்சா புழக்கமும், வழக்குகளும் எப்படி அதிகரிக்கிறது? கஞ்சா விற்பனை, கடத்தல் தொடர்பாக எத்தனை வழக்குகள் பதிவாகியுள்ளன? – உள்துறை செயலர், போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவு இயக்குநர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.
கெஜ்ரிவால் காணொளியில் பேச மனு: அபராதத்துடன் தள்ளுபடி

சிறையில் உள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமைச்சரவை உடன் காணொளியில் கலந்துரையாட அனுமதிக்க கோரிய பொதுநல மனு. ரூபாய் 1 லட்சம் அபராதத்துடன் டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவு.
2ஜி அலைக்கற்றை தீர்ப்பில் திருத்தம் கோரிய மத்திய அரசின் மனுவை பட்டியலிட உச்ச நீதிமன்றம் மறுப்பு

புதுடெல்லி: 2ஜி முறைகேடு வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் திருத்தம் கோரி மத்திய அரசு தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு பட்டியலிட நேற்று உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளது. “2ஜி தீர்ப்பில் தெளிவு கோரும் போர்வையில் அதில் திருத்த செய்ய வேண்டும் என்று மத்திய அரசு கேட்கிறது. இத்தனை ஆண்டுகள் கழித்து எந்த காரணமும் இன்றி இந்த மனுவை ஏற்க வேண்டிய அவசியம் இல்லை” என்று கூறிய உச்ச நீதிமன்ற பதிவாளர், மத்திய அரசு தாக்கல் செய்த […]
மதுபாட்டில் திரும்பப்பெறும் திட்டம்- டாஸ்மாக் பதில்

“மதுபாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10-க்கு விற்றதன் மூலம் 12 மாவட்டங்களில் 306.32 கோடி ரூபாய் வசூல் செய்யப்பட்டுள்ளது” காலி மதுபாட்டில்களை திருப்பிக் கொடுத்தவர்களுக்கு ரூ.297.12 கோடி திருப்பிக் கொடுக்கப்பட்டுள்ளது – டாஸ்மாக் நிர்வாகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் டாஸ்மாக் நிர்வாகம் தரப்பில் பதில்
செந்தில் பாலாஜி வழக்குஉச்ச நீதிமன்றத்தில் மன்னிப்புக் கேட்ட அமலாக்கத்துறை

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரிய வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை சார்பில் மன்னிப்புக் கேட்கப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜி ஜாமீன் கோரிய வழக்கில் தாமதமாக பதில் மனு தாக்கல் செய்யப்பட்டதற்கு, உச்ச நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை மன்னிப்புக் கேட்டது. அமலாக்கத்துறை வேண்டுமென்றே வழக்கு விசாரணையை தாமதப்படுத்துவதாக செந்தில் பாலாஜி தரப்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டதைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை மன்னிப்புக் கோரியது. பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் […]
அமலாக்கத்துறையின் அடாவடியை நீதிமன்றம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது: டெல்லி நீதிமன்றம் கடும் கண்டனம்!