போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ஜாஃபர் சாதிக்குக்கு ஜாமீன் வழங்கி டெல்லி போதைப் பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜாமீன் கிடைத்தாலும் அமலாக்கத்துறை வழக்கிலும் கைதாகி உள்ளதால் ஜாஃபர் சாதிக் சிறையில்தான் இருப்பார்.
பெங்களூரு ராமேசுவரம் கஃபே குண்டு வெடிப்பு சம்பவத்தில், தமிழர்களைத் தொடர்புப்படுத்தி பேசியது தொடர்பாக மதுரை சைபர்க்ரைம் போலீஸார் பதிவு செய்த வழக்கை ரத்து செய்யக் கோரி

மத்திய அமைச்சர் ஷோபா கரந்தலாஜே உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார்
“தமிழகத்தில் வெளி மாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகள் இயக்குவதை தடுக்க கூடாது”

இடைக்கால உத்தரவு பிறப்பித்தது உச்சநீதிமன்றம் வெளி மாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகள் தொடர்பான தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் வழக்கு தமிழக அரசின் உத்தரவால் வெளிமாநில ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் – மனு வாதத்தை ஏற்ற உச்சநீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்தது ரிட் மனு தொடர்பாக தமிழக அரசு பதில் அளிக்கவும் உத்தரவு
எச்சில் இலையில் அங்கப் பிரதட்சணம் செய்யும் நிகழ்வுக்கு அனுமதி அளித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் உத்தரவுக்கு தடை கோரி மேலும் ஒரு மேல்முறையீட்டு மனு தாக்கல்!

அரசுத்தரப்பில் ஏற்கனவே தனி நீதிபதியின் உத்தரவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ள நிலையில், தமிழ் வழியில் அர்ச்சகராக பயின்ற அரங்கநாதன் என்பவரும் மேல்முறையீட்டு மனு தாக்கல்!
மத நம்பிக்கை செயல்களுக்கு கட்டுப்பாடு விதிக்க முடியாது
ஆனால், அவற்றை முறைப்படுத்த வேண்டும் – உயர் நீதிமன்ற மதுரைக்கிளை கருத்து. நெல்லை மாவட்டம் பாபநாசம் கோயிலில் திதி, தர்ப்பணம் ஆகிய செயல்களால் தாமிரபரணி ஆறு மாசுபடுவதை தடைக்க உத்தரவிடக்கோரி மனுத்தாக்கல். மாசுக்கட்டுப்பாட்டுத்துறை, மாவட்ட ஆட்சியரின் நிபுணர் குழு அங்கு ஆய்வு செய்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவு.
டெல்லி மதுபான கொள்கை வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை திகார் சிறையில் வைத்து கைது செய்தது CBI

கெஜ்ரிவாலின் ஜாமீன் மனு மீதான விசாரணை நாளை உச்ச நீதிமன்றத்தில் நடைபெற உள்ள நிலையில் சிபிஐ தற்போது கைது செய்துள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கில் அமைச்சர் கீதாஜீவன் விடுதலை செய்யப்பட்டதற்கு எதிராக மேல் முறையீடு செய்வதற்காக,

வழக்கு தொடர்பான ஆவணங்களை வழக்கறிஞர் சண்முகசுந்தரத்துக்கு வழங்க, தூத்துக்குடி முதன்மை அமர்வு நீதிமன்றத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விசாரணை நீதிமன்றத்தின் ஜாமீன் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்த டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனுவை இன்று அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் ஏற்பு
கள்ளக்குறிச்சி விஷ சாராயம் மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரி மனு

அவசர வழக்காக விசாரிக்க கோரி அதிமுக தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என நீதிமன்றம் அறிவிப்பு..
2011 ல் இவரது தந்தை ப.சிதம்பரம் மத்திய அமைச்சராக இருந்த போது சட்டத்திற்கு புறம்பாக இந்தியாவுக்கு வர சீன நாட்டவர்கள் 263 பேருக்கு விசா வழங்கிட கார்த்தி உதவியதாக குற்றச்சாட்டு பதிவு செய்தது அமலாக்கத்துறை சட்டவிரோத பணபரிமாற்றம் நடந்ததாகவும் குற்றம் சுமத்தப்பட்டது
இது தொடர்பாக சிபிஐ, அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் பல முறை ஆஜராக சம்மன் அளிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் ஜாமின் கேட்டு சிபிஐ சிறப்பு கோர்ட்டில் கார்த்தி ஜாமின் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி காவேரி பவேஜா, அவருக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்.