பொன் மாணிக்கவேலுக்கு முன்ஜாமின் வழங்க சிபிஐ எதிர்ப்பு!..

முன்னாள் காவல்துறை ஐ.ஜி. பொன் மாணிக்கவேலுக்கு முன்ஜாமின் வழங்க சிபிஐ தரப்பில் கடும் எதிர்ப்பு “பொன் மாணிக்கவேலை கைது செய்து விசாரணை நடத்தினால்தான் சிலை கடத்தல் வழக்கில் உண்மை தெரியவரும்” மெட்ராஸ் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் சி.பி.ஐ. தரப்பில் வாதம்

முறைகேடுகள் நடக்கும் 100 நாள் வேலை திட்டம் – நீதிபதிகள் வேதனை

மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் பெயரை மாற்றிவிடலாம் என தோன்றுகிறது. அந்த அளவிற்கு 100 நாள் வேலை திட்ட முறைகேடுகள் ” அதிகரித்து வருகிறது” தேனி பழைய கோட்டை பஞ்சாயத்தில் 2020-21ஆம் ஆண்டில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட முறைகேட்டில் ஈடுபட்ட ஆண்டிப்பட்டி திட்ட மேம்பாட்டு அலுவலர், பழையகோட்டை பஞ்சாயத்து தலைவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் வேதனை.

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கில் சாட்சி விசாரணையை தொடரலாம் – சென்னை உயர் நீதிமன்றம்

குற்றச்சாட்டு பதிவு முடிந்து சாட்சி விசாரணை துவங்கி விட்டதாக அமலாக்க துறை தகவல். அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்க கோரிய செந்தில் பாலாஜி மேல்முறையீட்டு மனுஆகஸ்ட் 28-ம் தேதிக்கு ஒத்திவைப்பு..

யுஜிசி நெட் தேர்வை ரத்து செய்ய முடியாது – உச்ச நீதிமன்றம்

நடப்பாண்டு யுஜிசி நெட் தேர்வை ஒத்தி வைக்கக்கோரிய மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு மறுப்பு. வரும் 21 ஆம் தேதி நடக்கும் தேர்வை 9 லட்சம் பேர் எழுத உள்ள நிலையில் எப்படி ஒத்திவைக்க முடியும்? நாங்கள் இதில் தலையிட முடியாது – நீதிபதிகள் வினாத்தாள் கசிவு காரணமாக தேர்வை ஒத்தி வைக்க கோரி மனு.

நாடு முழுவதும் வரும் 21ம் தேதி நடைபெற உள்ள யுஜிசி நெட் தேர்வை ஒத்திவைக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

ஒன்பது லட்சம் மாணவர்கள் இந்த தேர்வை நடத்த உள்ளதால் அவர்களது எதிர்காலம் பாதிப்படையும் எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது ஏற்கனவே தேசிய தேர்வுகள் முகமை நடத்திய தேர்வுகள் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதாக புகார்கள் எழுந்துள்ள நிலையில் அதை குறையாக விசாரித்து முடித்த பிறகு தான் இந்த தேர்வை நடத்த வேண்டும் என மாணவர்கள் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது

தேசிய கொடி ஏற்றுவதை தடுப்பவர்கள் மீது குண்டாஸ் தேசியக் கொடியேற்ற பாதுகாப்பு வழங்குவது அவமானம் ஐகோர்ட் உத்தரவு

சென்னை : சுதந்திர தினத்தை ஒட்டி தேசிய கொடி ஏற்றுவதை தடுப்பவர்களை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும் என்றும் ஐகோர்ட் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் இன்று காலையில் தனது வழக்குகளை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதற்கு முன்பு, முறையீடு என்ற அடிப்படையில், அவசர வழக்குகளை விசாரிப்பது தொடர்பாக வழக்கறிஞர்கள் முறையீடு செய்வது வழக்கம். அந்த வகையில் நீதிபதி ஜெயச்சந்திரன் அமர்வில் பெண் வழக்கறிஞர் ஒருவர் முறையீடு ஒன்றை முன்வைத்தார். அதில் சுதந்திர […]

2 அமைச்சர்களுக்கு எதிரான வழக்கில் நாளை தீர்ப்பு வழங்குகிறது சென்னை உயர் நீதிமன்றம்!

சொத்துக்குவிப்பு வழக்குகளில் இருந்து அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் விடுதலைக்கு எதிரான வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் நாளை காலை தீர்ப்பளிக்கிறது.

சட்டமன்றத்துக்குள் குட்கா கொண்டு சென்ற விவகாரத்தில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் மீது உரிமைக்குழு விசாரணை நடத்தலாம் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது

கடந்த அதிமுக ஆட்சியில் சட்டமன்றத்துக்குள் குட்கா கொண்டு சென்ற விவகாரம் தொடர்பாக அப்போதைய எதிர்க்கட்சி தலைவரும், தற்போதைய முதல்வருமான ஸ்டாலின் மற்றும் திமுக எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான உரிமை மீறல் நோட்டீசை நீதிமன்றம் ரத்து செய்ததை எதிர்த்து முந்தைய ஆட்சியில் தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கில் திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்.எல்.ஏ.க்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், கடந்த 2017ம் ஆண்டு அதிமுக-வில் பன்னீர்செல்வம் அணியினர் உருவானது, 18 எம்.எல்.ஏ.க்கள் அரசுக்கு […]

சட்டமன்றத்துக்குள் குட்கா கொண்டு சென்ற விவகாரம்

முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான வழங்கப்பட்ட உரிமை மீறல் நோட்டீசுக்கு பதிலளிக்க ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்.எல்.ஏ.க்களுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவு.