மூத்த குடிமக்களின் வாழ்க்கை மற்றும் சொத்துகளை பாதுகாப்பது மாவட்ட ஆட்சியரின் கடமை -சென்னை உயர் நீதிமன்றம்

சென்னை உயர் நீதிமன்றம் கருத்து! “பிள்ளைகள் முறையாக கவனிக்கவில்லை என மூத்த குடிமக்கள் அளிக்கும் புகாரை சாதாராணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது; அவர்களின் வாழ்க்கை மற்றும் சொத்துகளை பாதுகாப்பது மாவட்ட ஆட்சியரின் கடமை”* உணவு, உறைவிடம் மட்டுமே இயல்பான வாழ்க்கைக்கு போதுமானது அல்ல; அன்புடனும் அக்கறையுடன் கண்ணியமாக நடத்த வேண்டும்”
‘நீதித்துறையை ஆண்டவன்தான் காப்பாற்ற வேண்டும்”

கீழமை நீதிமன்ற செயல்களை பார்க்கும்போது நீதித்துறையை ஆண்டவன்தான் காப்பாற்ற வேண்டும் வழக்குகளை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்வதால் என்னை வில்லனாக பார்க்கின்றனர். ஒவ்வொரு வழக்கிலும், விசாரணையை யாரும் எதிர்கொள்ள விரும்பவில்லை-சொத்துக்குவிப்பு வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறை, ஐ.பெரியசாமி, பா.வளர்மதி – உள்ளிட்டோர் பதிலளிக்க உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவு.
அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

ஐகோர்ட் உத்தரவை அடுத்து ஜாமின் மனுத்தாக்கல் செய்துள்ளதாக முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லியிடம் முறையிட்டுள்ளனர். முறையீட்டை ஏற்றுக்கொண்ட நீதிபதி அல்லி மனுத்தாக்கல் செய்ய அனுமதி அளித்துள்ளார்.
சாத்தான்குளம் தந்தை, மகன் கொல்லப்பட்ட வழக்கில், கைதான முன்னாள் காவல் உதவி ஆய்வாளர் ரகு கணேஷின் ஜாமின் மனுவை 5வது முறையாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளை தள்ளுபடி செய்தது

வழக்கு விசாரணை இறுதிகட்டத்தில் உள்ளது, இப்போது ஜாமின் வழங்கினால் பாதிப்பு ஏற்படும் என சிபிஐ தரப்பு வாதம்! இவ்வழக்கில் கைதான காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் பால கிருஷ்ணன், ரகு கணேஷ் மற்றும் காவலர்கள் என 9 பேர் கடந்த 3 ஆண்டுகளாக நீதிமன்றம் காவலில் சிறையில் உள்ளனர்.
மறைந்த தந்தையின் அரசு வேலையை மகளுக்கு கருணை அடைப்படையில் வழங்க ஐகோர்ட் கிளை உத்தரவு

மறைந்த தந்தையின் அரசு வேலையை மகளுக்கு கருணை அடைப்படையில் வழங்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மகளுக்கு திருமணமாகிவிட்டதால் அவருக்கு வாரிசு பணி வழங்கமுடியாது எனக் கூறியதை ஏற்க முடியாது. குடும்பத்தின் பொருளாதார சூழலை கருத்தில் கொண்டு திருமணமான மகளுக்கும் வாரிசு வேலை வழங்கலாம் என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
காவிரி வழக்கை உடனடியாக விசாரிக்க தமிழ்நாடு அரசு முறையீடு – வரும் 21ம் தேதி விசாரிக்கப்படும் என உச்ச நீதிமன்றம் அறிவிப்பு

நீதிபதிகள் கவாய், மிஸ்ரா அமர்வு முன்பு இவ்வழக்குகள் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், விசாரணை பட்டியலில் இடம்பெறாததால் தமிழ்நாடு அரசு முறையீடு செய்தது. நீதிபதிகள் கவாய், நரசிம்மா, மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு வழக்கை விசாரிக்கும் என அறிவிப்பு. அடுத்த வாரம் விடுப்பில் செல்ல உள்ளதாக நீதிபதி கவாய் தகவல்; 3 நீதிபதிகள் அமர்வில் நீதிபதி நரசிம்மா தற்போது விடுப்பில் உள்ளார். இதனால் வழக்கு வரும் 21ம் தேதி விசாரிக்கப்பட உள்ளது.
சங்ககிரியில் 6 பேர் பலியான விபத்துக்கு காரணமான லாரி டிரைவர் மீது 4 பிரிவுகளில் வழக்கு

சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் கபிலன் லாரி டிரைவரை பிடிக்க உத்தரவிட்டார். இதையடுத்து சங்ககிரி துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா மேற்பார்வையில் சங்ககிரி சப்-இன்ஸ்பெக்டர் பழனிசாமி மற்றும் போலீசார் லாரியையும், டிரைவரையும் தேடி வந்தனர். கோவை அருகே சாய்பாபா காலனி போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட எம்.ஜி.ஆர் மார்க்கெட் பகுதியில் ஜெகன் பாபு லாரியை ஓட்டி கொண்டு செல்வது தெரியவந்தது. இதையடுத்து போலீசார், அவரை மடக்கி பிடித்து லாரியை பறிமுதல் செய்து சங்ககிரி போலீஸ் நிலையம் கொண்டு […]
சிறையில் சொகுசு வசதி பெற்ற விவகாரம் : சசிகலா, இளவரசிக்கு பெங்களூரு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்தது

சிறையில் சொகுசு வசதி பெற்ற விவகாரம் தொடர்பாக சசிகலா, இளவரசிக்கு பெங்களூரு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்தது.சிறையில் சொகுசு வசதிகளை செய்து தர லஞ்சம் கொடுத்தது தொடர்பான வழக்கில் நேரில் ஆஜராகாததால் நீதிபதி நடவடிக்கை எடுத்துள்ளார்.
சுப.உதயகுமாருக்கு எதிராக வழங்கிய லுக் அவுட் நோட்டீசை திரும்பப் பெற உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

சுப.உதயகுமாருக்கு எதிராக வழங்கிய லுக் அவுட் நோட்டீசை திரும்பப் பெற உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மனுதாரர் மீது நீதிமன்றங்களில் பிடிவாரண்ட் இல்லாததால் லுக் அவுட் நோட்டீசை திரும்பப் பெற கோர்ட் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
டிடிவி தினகரனிடம் அபராதத் தொகையை வசூலிக்காத அமலாக்கத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம்.

1996ல் ஃபெரா சட்டத்தின் கீழ் பதிவான வழக்கில் டிடிவி தினகரனுக்கு, விதிக்கப்பட்ட 28 கோடியை இதுவரை வசூலிக்காத அமலாக்கத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம். டிடிவி தினகரனை திவாலானவர் என ED பிறப்பித்த நோட்டீசை ரத்து செய்த உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, ED தரப்பில் தாக்கல் செய்த மனு 18 ஆண்டுகள் கழித்து நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.