கூட்டுறவுச் சங்க உறுப்பினர்கள் பதவிக் காலம்: தமிழக அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

சென்னை: கூட்டுறவுச் சங்க உறுப்பினர்களின் பதவிக் காலம், தேர்தலில் வெற்றி பெற்ற நாளிலிருந்து தொடங்குகிறது என தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்த மேல்முறையீடு வழக்கில், தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கூட்டுறவு சங்கங்களுக்கு கடந்த 2018-ம் ஆண்டு ஏப்ரல், ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் தேர்தல் நடத்தப்பட்டது. இருப்பினும், வழக்குகள் காரணமாக, சில கூட்டுறவு சங்கங்களில், 10 முதல் 14 மாதங்கள் தாமதமாக, 2019-ம் ஆண்டு ஜூன் மாதம் தான் […]

#BREAKING செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு

அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் அக்.13ம் தேதி வரை நீட்டிப்பு 7வது முறையாக காவலை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவு

வாகன ஒட்டிகளிடம் கட்டணம் வசூல் செய்வதை மட்டுமே சுங்கச்சாவடிகள் குறிக்கோளாக வைத்துள்ளன

சாலைகள் முறையாக பராமரிக்கப்படுவது இல்லை – உயர் நீதிமன்ற மதுரைக்கிளை. கயத்தாறு, நாங்குநேரி தேசிய நெடுஞ்சாலையில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றும் வரை சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்க தடை கோரிய வழக்கில், தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் தரப்பில் விரிவாக பதிலளிக்கவும் நீதிபதி உத்தரவு.

காவிரி ஒழுங்காற்று குழுவின் உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தை நாட கர்நாடகா முடிவு

தமிழகத்திற்கு 3 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விட உத்தரவு பிறப்பித்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தை நாட வழக்கறிஞர்கள் பரிந்துரை கர்நாடகா அணைகளில் தமிழகத்திற்கு வழங்க தண்ணீர் இல்லை – கர்நாடக முதல்வர் சித்தராமையா

காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் ஒழுங்காற்று குழுவின் ஆணைகளை அமல்படுத்த உச்சநீதிமன்றம் உத்தரவு

காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுகளை ஏற்க முடியாது என கர்நாடக அரசு கூற முடியாது – உச்சநீதிமன்றம். காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்ற கர்நாடக அரசின் கோரிக்கை நிராகரிப்பு.

ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை: சி.பி.ஐ., பரிசீலிக்க ஐகோர்ட் உத்தரவு

சென்னை: ஜெயலலிதாவின் மரணம் குறித்த, நீதிபதி ஆறுமுகசாமி கமிஷன் அறிக்கை அடிப்படையில், விசாரணை நடத்துவது குறித்த கோரிக்கை மனுவை, சி.பி.ஐ., பரிசீலிக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரிக்க, ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி கமிஷன் அமைக்கப்பட்டது. விசாரணையை முடித்து, அரசிடம் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், ‘தினமலர்’நாளிதழின் வேலுார் மற்றும் திருச்சி பதிப்புகளின் வெளியீட்டாளர் ஆர்.ஆர்.கோபால்ஜி, உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு: நீதிபதி ஆறுமுகசாமி கமிஷன் அறிக்கையில், அமைச்சர்கள், மருத்துவர்கள், […]

மெட்ரோ ரயில் திட்டத்துக்காக ஒதுக்கப்பட்ட நிலத்தை ஒரு மாதத்தில் திமுக எம்.பி. கலாநிதி வீராசாமி காலி செய்ய வேண்டும்-சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சமூகநீதி பாதுகாவலர்கள் எனக் கூறும் அரசியல் கட்சிகள், மக்கள் விருப்பத்துக்கு கௌரவம் வழங்க வேண்டும். மெட்ரோ ரயில் திட்டத்துக்காக, ஒதுக்கப்பட்ட நிலத்தை ஒரு மாதத்தில் காலி செய்ய வேண்டும். ஒரு மாதத்தில் காலி செய்து கொடுக்காவிட்டால், திமுக எம்.பியை அப்புறப்படுத்தி நிலத்தை மீட்க வேண்டும்.