மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட டெல்லி முன்னாள் துணை முதல்வர் மனிஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது

அவர் மீதான வழக்கை 6 முதல் 8 மாதங்களுக்குள் விசாரித்து முடிக்குமாறு விசாரணை நீதிமன்றத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் இலாகா இல்லா மந்திரியாக சிறையில் இருக்கும் செந்தில்பாலாஜியின் ஜாமீன் மனுவும் விசாரணைக்கு எடுக்கப்படவுள்ளது.

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் மதுபானங்கள் தரமானதாக இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும் எனக் கூறி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்

தரமற்ற மதுபானங்களை குடிப்பவர்கள் விரைவாக உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்து விடுகின்றனர். இதனால் அவர்களது குடும்பங்கள் நடுத் தெருவில் நிற்கிறது. இதனை நீதிமன்றம் கருத்தில் கொள்ள வேண்டும் என மனுதாரர் மனுவில் கோரி இருந்தார்.

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பதவியில் நீடிப்பதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட கோ வாரண்டோ வழக்கு

விசாரணையை நவம்பர் 3ம் தேதிக்கு தள்ளிவைத்தது சென்னை உயர் நீதிமன்றம் எந்த தகுதி அடிப்படையில் பதவியில் நீடிக்கிறார் என விளக்கம் கேட்டு கோ வாரண்டோ வழக்கு தொடரலாமா – உயர்நீதிமன்றம் கேள்வி முன்னுதாரணமான தீர்ப்புகளை தாக்கல் செய்ய மனுதாரர் முன்னாள் எம்.எல்.ஏ. சுப்புரத்தினம் தரப்பு பதில் அளிக்க அவகாசம் வேட்புமனுவில் தவறான தகவல் அளிப்பதை தகுயிழப்பாக கருத முடியாது தேர்தல் வழக்கு தான் தாக்கல் செய்ய முடியும் – அரசு தரப்பு விளக்கம்

முதலமைச்சர் குறித்து இனி அவதூறாக பேசமாட்டேன்” என சென்னை உயர் நீதிமன்றத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லப்பாண்டியன் உறுதிமொழி

அதன் அடிப்படையில், 15 நாட்களுக்கு விளாத்திகுளம் போலீசில் ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனை முன் ஜாமின் வழங்கி நீதிபதி உத்தரவு தூத்துக்குடியில் நடந்த பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மற்றும் அவரது குடும்பத்தினர் குறித்து செல்லப்பாண்டியன் அவதூறாக பேசிய நிலையில் அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

மதுரையைச் சேர்ந்த கண்மணி மற்றும் கீதா ஆகியோர் ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு

டிஎன்பிஎஸ்சி குரூப்-4 சார்பில் 7,301 காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு கடந்த 30.3.2022ல் வெளியானது. 24.7.2022ல் எழுத்துத்தேர்வு நடந்தது. 18 லட்சம் பேர் இந்த தேர்வை எழுதினர். பின்னர் காலியிடம் 10,117 ஆக உயர்த்தப்பட்டது. நாங்கள் இந்த தேர்வில் பங்கேற்றோம். கடந்த மார்ச்சில் தேர்வு முடிவுகள் வெளியானது. இதில், எங்கள் பெயர் இல்லை. நாங்கள் 255 மதிப்பெண்களுக்கு மேல் பெற வாய்ப்புள்ளது. தற்போது குரூப்-4 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடந்து வருகிறது. குரூப்-4 தேர்வில் […]

ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வழக்கு இறுதி விசாரணைக்கு பட்டியலிடப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது

ஸ்டெர்லைட் ஆலையை திறப்பது தொடர்பான வழக்கை விரைந்து விசாரிக்க ஆலை நிர்வாகம் கோரிக்கை விடுத்தது. வேதாந்தா நிறுவனம் வைத்த கோரிக்கையை அடுத்து இறுதி விசாரணை குறித்து தலைமை நீதிபதி அமர்வு அறிவித்துள்ளது.

உடல்நிலையை கருத்தில் கொண்டு ஜாமீன் வழங்கக்கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி ஐகோர்ட்டில் மனுத்தாக்கல்

உடல்நிலையை கருத்தில் கொண்டு ஜாமீன் வழங்கக்கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அவசர வழக்காக விசாரிக்கக் கோரி நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன் மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ முறையீடு செய்தார். மனு நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றநீதிபதி அறிவித்துள்ளார். செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் இரண்டு முறை தள்ளுபடி செய்திருந்தது.