பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டிக்கு நிபந்தனை ஜாமின் வழங்கியது நெல்லை அம்பாசமுத்திரம் நீதிமன்றம்;

தென்காசியில் ‘என் மண் என் மக்கள்’ நடை பயணத்தின் போது போலீசாரை பணி செய்யவிடாமல் தடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில் ஜாமின் வழங்கியது நீதிமன்றம்

மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காத ஆளுநர் ஆரிப் முகமது கானுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு ரிட் மனு தாக்கல்

8 மசோதாக்கள் ஆளுநர் ஆரிப் முகமது கானிடம் நிலுவையில் உள்ளன. மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க ஆளுநர் கால தாமதம். மசோதாக்களுக்கு உரிய நேரத்தில் ஒப்புதல் அளிக்க ஆளுநருக்கு உத்தரவிட வேண்டும் – கேரள அரசு கோரிக்கை தமிழ்நாடு, பஞ்சாப் மாநிலங்களை தொடர்ந்து ஆளுநருக்கு எதிராக கேரள அரசும் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல்.

‘நீட் தேர்வை எதிர்க்க கட்சிகளுக்கு உரிமையுள்ளது’ – சென்னை உயர்நீதிமன்றம்

நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்க கட்சிகளுக்கு உரிமை உள்ளது. திமுகவின் நீட் எதிர்ப்பு கையெழுத்து இயக்கத்தால் என்ன பாதிப்பு?- பள்ளி மாணவர்களிடம் கட்டாயப்படுத்தி திமுக கையெழுத்து வாங்குவதாக தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி. உண்மைத்தன்மையை நிரூபிக்க ரூ.1 லட்சம் டெபாசிட் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் கூறியதால், மனுவை வாபஸ் பெற்றார் மனுதாரர்.

மாஜி அமைச்சர் மீதான முறைகேடு புகாரில் நடவடிக்கை என்ன?: ஐகோர்ட் கேள்வி

சென்னை: கடந்த அதிமுக ஆட்சியில் உணவுத்துறை அமைச்சராக இருந்தவர் காமராஜ். இவர் மீது பொதுவிநியோக திட்டத்துக்காக உணவுப்பொருள் கொள்முதலில் முறைகேடு செய்ததாக வா.புகழேந்தி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இதன் விசாரணையில், ‘முன்னாள் அமைச்சர் காமராஜ் மீதான ரூ.350 கோடி முறைகேடு புகார் மீது எடுத்த நடவடிக்கை என்ன?’ என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு, காமராஜ் மீதான 3 புகார் மீது விரிவான விசாரணை நடத்தப்படுவதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து, வழக்கு தொடர்பாக […]

டிடிஎப் வாசனுக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள டி.டி.எப்.வாசன் ஜாமீன் கோரி தாக்கல் செய்தார். டி.டி.எப்.வாசன் ஜாமின் மனு நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தது. 40 நாட்களுக்கு மேல் சிறையில் இருப்பதால் ஜாமின் வழங்க வேண்டுமென டிடிஎப் வாசன் மனு. தினமும் காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டுமென நிபந்தனை விதித்து ஜாமீன் வழங்கி உத்தரவு.

போதைப்பொருள் கடத்தல் வாகனங்களை கையாள சிறப்பு அதிகாரி நியமனம் செய்ததற்கு காவல்துறைக்கு உயர் நீதிமன்றம் பாராட்டு

தமிழ்நாட்டில் போதைப் பொருட்கள் கடத்தியதாக 3688 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதில், 710 வாகனங்கள் நீதிமன்றம் மூலம் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 191 வாகனங்களுக்கான வழக்கு நிலுவையில் உள்ளது. 2787 வாகனங்களுக்கு யாரும் உரிமை கோரவில்லை; இதனை ஏலம் விட நடவடிக்கை – உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் டி.ஜி.பி அறிக்கை

மகாராஷ்டிராவில் மராத்தாக்களுக்கு கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் 16 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்டத்தை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது

இந்நிலையில், மராத்தாக்களுக்கு இட ஒதுக்கீடு கோரி அந்த சமூகத்தை சேர்ந்த மனோஜ் ஜராங்கே சாகும் வரை உண்ணாவிரத போராட்டம் அறிவித்துள்ளார். மராத்தாக்கள் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளதை தொடர்ந்து, இவர்களுக்கு ஆதரவாக ஷிண்டே ஆதரவு சிவசேனா எம்பிக்கள் ஹேமந்த் பாட்டீல், ஹேமந்த் கோட்சே ஆகியோர் நேற்று திடீரென ராஜினாமா செய்தனர். போராட்டக்காரர்கள் தேசியவாத காங்கிரஸ் அலுவலகங்கள், பீட் தொகுதி எம்எல்ஏவின் வீட்டுக்கு தீ வைத்தனர்.

ராஜஸ்தான் முதல்வரின் மகன் வைபவ் கெலாட் அந்நிய செலாவணி விதிமீறல் வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேற்று விசாரணைக்கு ஆஜரானார்

ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் மகன் வைபவ் கெலாட். இவர் ராஜஸ்தான் கிரிக்கெட் சங்க தலைவர் மற்றும் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினராக செயல்பட்டு வருகின்றார். இந்நிலையில் அந்நிய செலாவணி விதிமீறல் தொடர்பாக வைபவ் ஆஜராகும்படி அமலாக்கத்துறை சார்பில் கடந்த வாரம் சம்மன் அனுப்பப்பட்டது. இதனை தொடர்ந்து டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் முதல்வரின் மகன் வைபவ் கெலாட் நேற்று ஆஜரானார். அவரிடம் அதிகாரிகள் பல மணி நேரம் விசாரணை நடத்தினார்கள். வைபவின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.இதைத் தொடர் […]

மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைப்பு தொடர்பான வழக்கில் தமிழ்நாடு அரசு 6 வாரத்தில் பதிலளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

தமிழக மக்கள் பயன்படுத்தும் மின்சாரத்தில் முதல் 100 யூனிட் மின்சாரத்திற்கு அரசு வழங்கும் மானியத்தை பெற வேண்டுமானால், சம்பந்தப்பட்ட மின் நுகர்வோர், தங்கள் மின் இணைப்பு எண்ணுடன், ஆதார் எண்ணை இணைக்க வேண்டுமென தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்தது. இந்த அரசாணையை ரத்து செய்யக் கோரி வழக்கறிஞர் எம்.எல்.ரவி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தார். அதில், ‘ஒரு மின் இணைப்பிற்கு ஒரு ஆதார் எண்ணை மட்டுமே இணைக்க முடியும் என்றும், வாடகை […]