தமிழ்நாடு ஆளுநர் செயல்படாமல் இருக்கிறார் என குற்றச்சாட்டுகளை முன்வைத்து தமிழ்நாடு அரசு தொடர்ந்து இருக்கக்கூடிய வழக்குகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கருத்து
மசோதாக்களுக்கு விரைவில் ஒப்புதல் அளிக்க ஆளுநருக்கு உத்தரவிடக்கோரிய தமிழ்நாடு அரசின் மனு
மனு மீது பதில் அளிக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு மனு மீதான விசாரணை நவம்பர் 20ம் தேதிக்கு ஒத்திவைப்பு
மசோதாக்களுக்கு விரைவில் ஒப்புதல் அளிக்க ஆளுநருக்கு உத்தரவிடக்கோரிய தமிழ்நாடு அரசின் மனு

மனு மீது பதில் அளிக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு; மனு மீதான விசாரணை நவம்பர் 20ம் தேதிக்கு ஒத்திவைப்பு.
சபாநாயகர் அப்பாவு பதிலளிக்க வேண்டும்! சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ்!

தமிழக சட்டப் பேரவையில் எதிர்கட்சித் துணைத் தலைவர் இருக்கையை ஆர்.பி.உதயகுமார் அவர்களுக்கு ஒதுக்க கோரி எடப்பாடி தொடர்ந்த வழக்கில் டிச.12க்குள் பதிலளிக்க சட்டமன்ற சபாநாயகர் அப்பாவு, சட்டமன்ற செயலாளர் ஆகியோருக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
கோர்ட் உத்தரவுபடி கட்சி வேட்டி இல்லாத OPS (சிங்கப்பூர் ஏர்போர்ட்)
அதிமுக முன்னாள் எம்.பி. கே.சி. பழனிசாமியை கட்சியில் இருந்து நீக்கியது தொடர்பான ஆவணத்தை தாக்கல் செய்ய எடப்பாடி பழனிசாமிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

எடப்பாடிக்கு எதிரான அவதூறு வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து கே.சி.பழனிசாமி முறையீடு செய்திருந்தார். பொதுச்செயலாளராக ஜெயலலிதா இருந்தபோதே கட்சியில் இருந்து கே.சி.பழனிசாமி நீக்கப்பட்டுவிட்டார் – இ.பி.எஸ். தரப்பு பதில்
நீதித் துறையைப் பிணைக்கும் மைய மொழியாக ஆங்கிலம் இருக்கும் என்று அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கியவா்கள் கருதினா்
ஆனால் அது மக்கள் பேசும் மொழி அல்ல. இதனால் நாடு முழுவதும் உள்ள மக்களுக்குப் புரியும் மொழியில், அவா்களை நீதிமன்றங்களால் சென்றடைய முடியவில்லை. இதைக் கருத்தில் கொண்டு, கடந்த ஓராண்டாக உச்ச நீதிமன்றத்தின் அனைத்துத் தீா்ப்புகளும் மொழிபெயா்க்கப்பட்டு வருகின்றன. இதுவரை செயற்கை நுண்ணறிவு உதவியுடன் பல்வேறு மொழிகளில் 31,000 தீா்ப்புகள் மொழிபெயா்க்கப்பட்டுள்ளன. மக்களிடம் நீதிமன்றங்கள் சென்றடைய வேண்டும் என்பதே இதன் நோக்கம். அமெரிக்க உச்ச நீதிமன்றம் சராசரியாக ஓராண்டில் 80 வழக்குகளில் தீா்ப்பளிக்கிறது. அதேவேளையில், இந்த ஆண்டு […]
அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின் மற்றும் சேகர் பாபு மீது நடவடிக்கை எடுக்காத தமிழக காவல் துறைக்கு கடும் கண்டனத்தை சென்னை உயர்நீதி மன்ற தெரிவித்துள்ளது

சனாதன தர்மத்தை அழிக்க வேண்டும் என்ற கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய ஆளும் கட்சியை சார்ந்த அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்காதது என்? என சராமரியாக கேள்வி எழுப்பியுள்ளது உயர்நீதி மன்றம். இந்த நாட்டில் ஒரு குறிப்பிட்ட சித்தாந்தத்தை அழிக்க வேண்டும் என யாரும் எந்த கூட்டத்தையும் கூட்டுவதற்கு உரிமையில்லை என்றும் இத்தகைய பேச்சுகள் எவ்வளவு அபாயகரமானது என்பதை ஆட்சியாளர்கள் உணருவதோடு, பொறுப்புணர்வோடு நடந்து கொள்ள வேண்டும் என்றும், இது போன்று மக்களிடையே பிரிவினை ஏற்படுத்தும் போக்கினை […]
அமைச்சர் செந்தில்பாலாஜியின் நீதிமன்ற காவல் நவ.22ம் தேதி வரை நீட்டிப்பு; சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு..!!
விவகாரங்கள் நீதிமன்றத்திற்கு வருவதற்கு முன்னதாகவே கண்டிப்பாக ஆளுநர்கள் செயல்பட்டிருக்க வேண்டும்
மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதில் காலதாமதம் செய்வதாக பஞ்சாப் ஆளுநருக்கு எதிராக மாநில அரசு தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் கருத்து. ஆளுநர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியாளர்கள் அல்ல என்பதை உணர வேண்டும். மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க உத்தரவிடக் கோரி மாநில அரசு நீதிமன்றங்களை நாட வேண்டுமா? -தலைமை நீதிபதி கேள்வி?. ஒரு மசோதாவுக்கு ஒப்புதல் கொடுக்கும் முன்னர் அதனை ஆய்வு செய்யவும், அதுவரை அதை நிறுத்தி வைக்கவும் ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது. -உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி. மாநில […]