சுடுகாட்டு கூரை ஊழல் வழக்கில் முன்னாள் அமைச்சர் செல்வகணபதி விடுதலை

சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு சிபிஐ பதிவு செய்த வழக்கில் விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனை ரத்து 1995 மற்றும் 1996ஆம் ஆண்டுகளில் சுடுகாடுகளுக்கு கூரை அமைக்கும் திட்டத்தில் ரூ.23 லட்சம் அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதாக சிபிஐ வழக்கு கூட்டுச் சதி குற்றச்சாட்டில் இருந்தும் விடுதலை செய்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு..

அதிமுக பொதுக்குழு விவகார வழக்கு ஒத்திவைப்பு

அதிமுக பொதுக்குழு விவகார வழக்கின் விசாரணையை உச்சநீதிமன்றம் ஒருவாரத்திற்கு ஒத்திவைத்தது. பொதுக்குழுவில் நிறைவேற்றிய தீர்மானங்களுக்கு எதிராக ஓபிஎஸ் தரப்பு மேல்முறையீடு செய்த மனு ஒத்திவைப்பு. வழக்கை ஒருவாரத்திற்கு ஒத்திவைக்க வேண்டும் என ஓபிஎஸ் தரப்பு கடிதம் வழங்கிய நிலையில் கோரிக்கை ஏற்பு. பிற வழக்குகளை தாமதிக்க ஓபிஎஸ் முயற்சி செய்வதாக பதிவாளருக்கு இபிஎஸ் கடிதம் எழுதியிருந்தார்.

ஐகோர்ட் கேள்வி

இரு தரப்பு வாதங்களை கேட்ட பின், நீதிபதிகள் கூறியதாவது: சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்துள்ளவை தவிர அனைத்து குவாரி விவரங்களையும் அமலாக்கத்துறை எப்படி கோரலாம்?. விசாரணைக்கு உதவி கோருவதற்கும் சம்மன் அனுப்புவதற்கும் வித்தியாசம் உள்ளது. சட்ட விரோத மணல் கடத்தல் வழக்கில் அமலாக்கத்துறை எப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளதா?. எப்.ஐ.ஆர் பதிவு செய்யாமல் அமலாக்கத்துறை எப்படி விசாரணை நடத்த முடியும்?. ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்பியது ஏன்?. இவ்வாறு அமலாக்கத்துறைக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

மணல் குவாரி முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியதை எதிர்த்த வழக்குகளில் நாளை தீர்ப்பு

அரசு ஏன் இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்களை பாதுகாக்க முயற்சிக்கிறது? – அமலாக்கத்துறை தரப்பு கேள்வி மாவட்ட ஆட்சியர்களிடம் விவரங்களை கேட்டுப் பெறலாம்> விசாரணைக்கு உதவும்படி கோரலாம, ஆனால் சம்மன் அனுப்ப முடியாது யாரையும் பாதுகாக்கவில்லை, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம், அதை விடுத்து ஆட்சியர்களுக்கு சம்மன் அனுப்பியது ஏன்? – தமிழக அரசு குவாரி உரிமைதாரரின் தவறுக்கு அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்ப முடியுமா? யூகங்களின் அடிப்படையில் விசாரணை நடத்த முடியாது – தமிழக அரசு

பொது சொத்துகள் ஆக்கிரமிப்பு – கிரிமினல் வழக்கு

அரசின் பொது சொத்துகளை ஆக்கிரமிப்பவர்கள் மீது கிரிமினல் வழக்கு பதிய வேண்டும் ஆக்கிரமிப்பை அகற்றாத அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அதிரடி உத்தரவு அதிகாரிகளின் உதவியுடன் பேராசைக்காரர்கள் அரசு நிலங்களை ஆக்கிரமிப்பது அதிகரிக்கிறது – நீதிபதி வேதனை

அமலாக்க துறைக்கு எதிரான தமிழ்நாடு அரசின் வழக்கு இன்று சென்னை ஐகோர்ட்டில் விசாரணை

சட்டவிரோத மணல் குவாரிகள் தொடர்பான விசாரணைக்கு தடை கோரி வழக்கு. மணல் குவாரி விவகாரத்தில் கலெக்டர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்ட நிலையில், அதை ரத்து செய்ய கோரியும் வழக்கு..

எம்.பி கதிர் ஆனந்த் வேலூர் நீதிமன்றத்தில் ஆஜர்!

அமைச்சர் துரைமுருகனின் மகனும், வேலூர் எம்.பி-யுமான கதிர் ஆனந்த், கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பணம் பறிமுதல் செய்த வழக்கு தொடர்பாக வேலூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்காக ஆஜரானார்.

அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜூக்கு எதிரான டெண்டர் முறைகேடு புகாரில் முகாந்திரம் இருந்தால் மேல் நடவடிக்கை எடுக்கப்படும்

என சென்னை உயர்நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை பதில் அதிமுக ஆட்சியில் உணவுத்துறை அமைச்சராக இருந்த காமராஜ் ₹350 கோடி அளவுக்கு முறைகேடு செய்ததாக ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி வழக்கு