முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு எதிராக அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் தொடர்ந்த வழக்கு டிச. 11-ம் தேதிக்கு ஒத்திவைப்பு- சென்னை உயர்நீதிமன்றம்

மறு உத்தரவு வரும்வரை அதிமுகவின் பெயர், கொடி, சின்னம் உள்ளிட்டவற்றை பயன்படுத்த மாட்டேன் என ஓ.பன்னீர்செல்வம் தரப்பு உத்தரவாதம். உத்தரவாதத்தை மீறினால் நீதிமன்ற கவனத்திற்கு கொண்டுவரும்படி எடப்பாடி பழனிசாமிக்கு நீதிபதிகள் அறிவுறுத்தல்.
சனாதனம் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியது நீதிமன்ற அவமதிப்பு இல்லை…

உச்சநீதிமன்றம்
கேரள ஆளுநர் ஒரு மசோதாவுக்கு ஒப்புதல்.7 மசோதாக்ககளை குடியரசு தலைவருக்கு அனுப்பினார்

இன்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வரும் நிலையில் எட்டு மசோதாக்கள் மீதும் முடிவு…. உச்ச நீதிமன்றம் கடுமை காட்டத் தொடங்கியவுடன் ஆளுநர்கள் செயல்படத் தொடங்கியுள்ளனர்…
லஞ்சம் கேட்ட தாசில்தார் – கலெக்டருக்கு ஐகோர்ட்டு உத்தரவு!

திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரி கிராமத்தை சேர்ந்தவர் குமரேசன். இவர் ஏலகிரி மலை அருகே உள்ள அத்தனாவூர் கிராமத்தில் உள்ள தனக்கு சொந்தமான 2 ஏக்கர் பட்டா நிலத்தில் பயிர் செய்து வருகிறார். அவருடைய நிலத்தில் சிலர் அத்து மீறி நுழைந்து பயிரையும், நிலத்தை சுற்றி போடப்பட்டு இருந்த பாதுகாப்பு வேலியையும் சேதப்படுத்தி உள்ளனர். இதுகுறித்து அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் பிரச்சினைக்கு இன்னும் முடிவு எட்டப்படவில்லை. இதற்கிடையே 3வது நபர் ஒருவர் திருப்பத்தூர் தாசில்தாரை அணுகி, […]
கரூரில் வருமானவரித்துறை அதிகாரிகளை தாக்கிய வழக்கில் 4 பேரின் ஜாமினை ரத்து செய்யக்கோரி வருமான வரித்துறை சார்பில் தொடரப்பட்ட வழக்கில், வீடியோ ஆதாரங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை டிசம்பர் 6ம் தேதிக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ஒத்திவைத்துள்ளது
சுடுகாட்டு கூரை ஊழல் வழக்கில் முன்னாள் அமைச்சர் செல்வகணபதி விடுதலை

சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு சிபிஐ பதிவு செய்த வழக்கில் விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனை ரத்து 1995 மற்றும் 1996ஆம் ஆண்டுகளில் சுடுகாடுகளுக்கு கூரை அமைக்கும் திட்டத்தில் ரூ.23 லட்சம் அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதாக சிபிஐ வழக்கு கூட்டுச் சதி குற்றச்சாட்டில் இருந்தும் விடுதலை செய்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு
மதுரை எய்ம்ஸ் விவகாரத்தில் தலையிட முடியாது – உச்ச நீதிமன்றம் கறார்

மதுரை எம்ய்ஸ் விவகாரம் தொடர்பான வழக்கில் எந்த உத்தரவுகளையும் பிறப்பிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கடந்த 2018 -ம் ஆண்டு ஜூன் மாதம் மதுரை மாவட்டம், தோப்பூரில் 224.24 ஏக்கர் பரப்பளவில் ரூ.1,264 கோடி மதிப்பில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது. ஆனால், நிலம் ஒதுக்கீட்டில் கால தாமதம் ஏற்பட்டது. தமிழகத்தில் அமைய உள்ள மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ஜப்பான் நாட்டின் ஜைக்கா நிறுவனம் கடன் வழங்க முன்வந்தது. அதற்கான […]
ED விசாரணைக்கு தடையில்லை – உயர் நீதிமன்றம் அறிவிப்பு!

சட்ட விரோத மணல் விற்பனை விவகாரத்தில், அமலாக்கத்துறை விசாரணைக்குத் தடையில்லை என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் காவிரி உள்ளிட்ட முக்கிய ஆறுகளில் சட்டவிரோதமாக மணல் விற்பனை நடைபெற்றது தொடர்பாக, 10 மாவட்ட ஆட்சியர்களிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை எதிர்த்து தமிழக அரசும், மாவட்ட ஆட்சியர்களும், சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் மீதான விசாரணை, இன்று சென்னை உயர்நீதி மன்றத்தில் நடைபெற்றது. அப்போது, […]
அதிமுக அலுவலகத்தில் நடந்த வன்முறை சம்பவம்: நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் உத்தரவு

அதிமுக அலுவலகத்தில் நடந்த வன்முறை சம்பவம் தொடர்பாக முகாந்திரம் இருந்தால் நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. பழனிசாமி உள்ளிட்டோர் மீது அளிக்கப்பட்ட புகாரில் விசாரணை நடத்தி, முகாந்திரம் இருந்தால் நடவடிக்கை எடுக்க ஆணையிட்டுள்ளது. 2 வாரங்களில் நடவடிக்கை எடுக்க சிபிசிஐடி போலீசாருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அமலாக்கத்துறை சம்மனுக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை

சட்டவிரோத மணல் விற்பனை தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களிடம் விசாரணை நடத்த அமலாக்கத் துறை அனுப்பிய சம்மனுக்கு தடை அமலாக்கத் துறை ஆட்சேப மனுவுக்கு பதிலளிக்க தமிழக அரசுக்கு மூன்று வாரம் அவகாசம் சம்மனை எதிர்த்து தமிழக அரசும், மாவட்ட ஆட்சியர்களும் தாக்கல் செய்த மனுக்கள் தள்ளிவைப்பு மாவட்ட ஆட்சியர்களுக்கு அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை எதிர்த்து தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு சம்மன்களுக்கு மட்டுமே தடை, விசாரணைக்கு தடையில்லை – உயர்நீதிமன்றம் வழக்கு […]