இந்தியாவுடன் இணையும் போது காஷ்மீருக்கு இறையாண்மை இல்லை- உச்சநீதிமன்றம்

காஷ்மீர் அரசியல் சாசனத்தில் இறையாண்மை இல்லை இந்தியாவுடன் இணைந்த போது இந்தியாவிடமே காஷ்மீர் இறையாண்மை- உச்சநீதிமன்றம் மத்திய அரசின் ஒவ்வொரு நடவடிக்கையும் கேள்விக்குரியது இல்லை- உச்சநீதிமன்றம் காஷ்மீர் 370வது பிரிவை ரத்து செய்ய மாநில அரசின் ஒப்புதல் தேவை இல்லை- உச்சநீதிமன்றம் காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது செல்லும்- உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

கருக்கா வினோத்தை காவலில் விசாரிக்க மனு

சென்னையில் ஆளுநர் மாளிகை முன்புபெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் கருக்கா வினோத்தை 5 நாட்கள் காவலில்வைத்து விசாரிக்க சிறப்பு நீதிமன்றத்தில் என்.ஐ.ஏ மனு

370-வது பிரிவு ரத்துக்கு எதிரான வழக்கில்: வரும் 11- ல் உச்சநீதிமன்றம் தீர்ப்பு

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் வரும் 11-ம் தேதி தீர்ப்பு வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இபிஎஸ்-க்கு எதிரான வழக்கு தள்ளுபடி

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக, தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை தொடர்ந்த டெண்டர் முறைகேடு வழக்கை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்

கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் சாட்சியம் அளிக்க நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கக்கோரி எடப்பாடி பழனிசாமி கூறும் காரணங்கள் ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை

சட்டத்தின் முன் அனைவரும் சமம் – சென்னை உயர்நீதிமன்றம் வழக்கில் சாட்சியங்களைப் பதிவு செய்வதற்காக மாஸ்டர் நீதிமன்றத்தில் ஆஜராக  இ.பி.எஸ்.க்கு விலக்கு அளித்த தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து மேத்யூ சாமுவேல் மேல்முறையீடு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் கருத்து

அண்ணா தி.மு.க பொதுச்செயலாளர் பதவியில் இருந்து தன்னை நீக்கியது செல்லாது என்று அறிவிக்கக் கூறி வி.கே.சசிகலா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது

தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா 2016.ம் ஆண்டு டிசம்பர் 5-ந் தேதி மரணம் அடைந்தார்.இதையடுத்து கட்சியின் தற்காலிக பொதுச்செயலாளராக பொதுக்குழு சசிகலாவை நியமித்தது.இதையடுத்து ஒரு சில நாட்களிலேயே உச்சநீதி மன்ற தீர்ப்பு படி ஊழல் வழக்கில் சசிகலா, அவரது அண்ணி இளவரசி, அக்கா மகன் சுதாகர் ஆகியோர் சிறை சென்றனர்.இதையடுத்து மீண்டும் கூடிய பொதுக்குழு பொதுச்செயலாளர் பதவியை நீக்கி, நிர்வாக ரீதியாக புதிய பொறுப்புக்களை உருவாக்கியது.இதை எதிர்த்து சசிகலா உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.சசிகலாவின் மனுவை கீழமை […]