லஞ்சம் வாங்கிய போது பிடிபட்ட அமலாக்க துறை அதிகாரி அங்கித் திவாரியின் ஜாமீன் மனுவை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை தள்ளுபடி செய்தது
பொங்கல் பரிசு, வெள்ள நிவாரணம் போன்ற பணப்பலன்களை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் செலுத்துவதன் மூலம் முறைகேடுகளை தவிர்க்க முடியும் என ஐகோர்ட் தமிழக அரசுக்கு யோசனை
அமலாக்கத்துறை அதிகாரி அங்கீத் திவாரி மடிக்கணினியில் இருந்து லஞ்ச வழக்கில் சிக்கி உள்ள 75 நபர்களின் பெயர் பட்டியல் அடங்கிய விவரம் சிக்கி உள்ளது”

-தமிழ்நாடு அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஹசன் முகமது ஜின்னா நீதிமன்றத்தில் தகவல் “அங்கீத் திவாரியை வாக்கு மூலத்தில் மேலும் சில அதிகாரிக்கு தொடர்பு உள்ளது என தெரிவித்துள்ளார் எனவே தொடர்ந்து விசாரணை மேற்கொள்ள வேண்டியுள்ளதால் ஜாமீன் வழங்கக் கூடாது” -தமிழ்நாடு அரசு தரப்பில் கடும் எதிர்ப்பு 2 தரப்பு வாதங்களை முடிந்த நிலையில், வழக்கின் தீர்ப்பு நாளை வழங்கப்படும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
3 ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்து முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான வழக்கில் ஜன.6ஆம் தேதி தீர்ப்பு:-

விழுப்புரம் நீதிமன்றம் அதிரடி அறிவிப்பு. நீதிமன்றம் என்ன விளையாட்டு மைதானம் என நினைத்துவிட்டீர்களா என முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாசிற்கு நீதிபதி சரமாரி கேள்வி.
லஞ்சம் வாங்கிய வழக்கில் கைதான அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி ஜாமின் கோரிய வழக்கு உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணை
ஜாமின் வழங்க அரசுத்தரப்பு கடும் எதிர்ப்பு மற்றும் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஆஜராகி வாதிட உள்ளதால் விசாரணையை ஒத்திவைக்கவும் கோரிக்கை இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் விசாரணையை வரும் 19ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்
சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவேற்றி, அரசு அனுப்பிய மசோதாக்களை, குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பியது சட்ட விரோதம் என அறிவிக்க வேண்டும் – உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு கூடுதல் மனு

மசோதாக்களுக்கும், அரசின் கோப்புகளுக்கும் ஒப்புதல் அளிக்காமல் தாமதம் செய்வது, புறக்கணிப்பதை அரசியல் சாசனத்திற்கு எதிரானது, தவறானது என அறிவிக்க வேண்டும் எனவும் தமிழ்நாடு அரசு கோரிக்கை
தெலுங்கு தேசம் தலைவரும், ஆந்திர முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடு திறன்மேம்பாட்டு நிதி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டார்

அவருக்கு உச்ச நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது. இதையடுத்து பைபர் நெட் ஒப்பந்த விவகாரத்தில் முறைகேட்டில் ஈடுபட்டதாக சந்திரபாபு நாயுடு மீது போலீஸ் வழக்கு பதிவு செய்திருந்தது. அந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு சந்திரபாபு நாயுடுதாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், ‘‘இந்த வழக்கை வரும் ஜனவரி 14ம் தேதிக்கு வழக்கை ஒத்திவைக்கப்படுகிறது. அதுவரை சந்திரபாபு நாயுடுவை கைது செய்யவும் இடைக்கால தடை விதிக்கப்படுகிறது. சந்திரபாபு நாயுடு மற்றும் ஆந்திரா மாநில அரசு ஆகியோர் வழக்கு […]
அமைச்சர் பொன்முடிக்கு எதிரான வழக்கில் தனக்கு எதிராக தனி நீதிபதி ஆனந்த் வெங்கடேசன் தெரிவித்த தேவையற்ற கருத்துகளை நீக்க வேண்டும்

வேலூர் மாவட்ட நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி, சென்னை உயர் நீதிமன்ற தலைமை பதிவாளருக்கு பதில் மொத்தம் 40 நாட்கள் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டது. இது தொடர்பான உத்தரவுகளை பார்க்காமல் தனி நீதிபதி தெரிவித்த கருத்துகள் ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல – ஓய்வு பெற்ற நீதிபதி எனது தரப்பு விளக்கத்தை கேட்காமலேயே நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விமர்சித்துள்ளார். ஒரே உத்தரவில், 28 ஆண்டுகள் கட்டிக்காத்த பணி நேர்மை பறிக்கப்பட்டது – ஓய்வு பெற்ற நீதிபதி
சொத்து குவிப்பு வழக்குகளில் இருந்து இன்னாள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் விடுவிக்கப்பட்டதற்கு எதிராக தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்குகளில்..

உரிய நடைமுறைகள் பின்பற்றப்பட்டதா? என்பது குறித்து தலைமை பதிவாளர் விளக்கமளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது..
கோடநாடு கொலை கொள்ளை வழக்கு

கோடநாடு கொலை கொள்ளை வழக்கில், கனகராஜின் சகோதரர் தனபாலுக்கு எதிராக தொடர்ந்த வழக்கில், நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி சாட்சியம் அளிக்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு விலக்கு – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு எடப்பாடி பழனிசாமியிடம் சாட்சியங்களைப் பதிவு செய்ய வழக்கறிஞர் ஆணையர் நியமனம். சாட்சியப்பதிவை ஒரு மாதத்தில் முடிக்க வழக்கறிஞர் ஆணையருக்கு நீதிமன்றம் உத்தரவு!