உயர்நீதிமன்றம் தீர்ப்பை எதிர்த்து ஜனவரி 2ம் தேதி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்கிறார் பொன்முடி

தீர்ப்பின் நகல் கிடைத்ததும், வழக்கறிஞர் உடன் ஆலோசனை மேற்கொண்ட பின் 2ம் தேதி மேல்முறையீடு செய்யப்படவுள்ளது.
மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் பிரிவு 8(1)-ன்படி, ஊழல் தடுப்பு போன்ற சட்டங்களின்கீழ் குற்றவாளி என அறிவிக்கப்பட்டாலே சம்பந்தப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் தகுதி இழப்புக்கு ஆளாக நேரிடும்
மேலும், ஊழல் தடுப்பு சட்டத்தின்கீழ், தண்டனை விதிக்கப்படாமல் ஒரு ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டாலும்கூட தகுதிஇழப்பு செய்யப்படுவார்கள். அதுபோல,இந்த வழக்கில் சிறை தண்டனையை அனுபவித்து விடுதலை செய்யப்பட்டாலும், அதன்பிறகு 6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது.
30 நாட்களுக்கு தண்டனை நிறுத்தி வைப்பு

அமைச்சர் பொன்முடிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிப்பு வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி பொன்முடிக்கும், அவரது மனைவிக்கும் 3 ஆண்டு சிறை மற்றும் தலா ரூ.50 லட்சம் அபராதம் ₨50 லட்சம் அபராதத்தை செலுத்த தவறினால் மேலும் 6 மாதம் சிறை எனவும் நீதிபதி எச்சரிக்கை
அமைச்சர் பொன்முடி வழக்கில் வாதம்

சென்னை உயர்நீதிமன்றத்தில் அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி ஆஜர் வயது, உடல்நிலையை கருத்தில் கொள்ள வேண்டும் என பொன்முடி தரப்பில் வாதம் அமைச்சர் பொன்முடி வழக்கில் தண்டனையை அறிவிக்கிறார் நீதிபதி ஜெயச்சந்திரன்
சென்னை உயர்நீதிமன்றத்தின் தண்டனை விபரங்கள் சட்டப்பேரவை செயலகத்திற்கு அனுப்பி வைக்கப்படும்
மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் பிரிவுகளின் படி தகுதி இழப்பு அறிவிப்பினை சட்டப்பேரவை செயலகம் வெளியிடும் சட்டப்பேரவை செயலகத்தின் அறிவிப்பு ஆணை தமிழ்நாடு அரசு இதழில் வெளியிடப்பட்டு தகுதி இழப்பு நடைபெறும் தகுதி இழப்புக்கு பின் திருக்கோவிலூர் தொகுதி காலி என தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்படும் திருக்கோவிலூர் தொகுதி காலி என அறிவிக்கப்பட்டதிலிருந்து 6 மாதத்திற்குள் திருக்கோவிலூர் தொகுதிக்கு தேர்தல் நடத்தப்படும் அதிகாரிகள் தகவல்
“டொனால்டு டிரம்ப் மீண்டும் அமெரிக்க அதிபர் பதவிக்கு தகுதியற்றவர்” -நீதிமன்றம் அதிரடி

அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான முதன்மை தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து முன்னாள் அதிபர் டெனால்ட் டிரம்ப்பை தகுதி நீக்கம் செய்து கொலரடோ உச்சநீதிமன்றம் உத்தரவு. அமெரிக்க அரசியலைப்புச் சட்டப்பிரிவு 3ன் கீழ் அதிபர் வேட்பாளர் தகுதிநீக்கம் செய்யப்படுவது இதுவே முதல்முறை. அதிபர் தேர்தலில் போட்டியிட அவர் தகுதியற்றவர் என நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
நிலுவையில் மற்றொரு வழக்கு:

கடந்த 1996-2001 திமுக ஆட்சியில் போக்குவரத்து அமைச்சராக பொன்முடி இருந்தபோது, வருமானத்துக்கு அதிகமாக ரூ.1.36 கோடி அளவுக்கு சொத்து குவித்ததாக பொன்முடி, விசாலாட்சி உள்ளிட்டோருக்கு எதிராக 2002-ல் அதிமுக ஆட்சியில் ஊழல் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் இருந்து இருவரையும் வேலூர் முதன்மை அமர்வு நீதிமன்றம் கடந்த ஜூன் மாதம் விடுதலை செய்தது. இத்தீர்ப்பை மறு ஆய்வு செய்யும் விதமாக ஐகோர்ட் தாமாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரிக்கிறது. நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு இந்த வழக்கு […]
ஊழல் வழக்கு – சட்டம் சொல்வது என்ன?
ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஒரு மக்கள் பிரதிநிதி குற்றவாளி என அறிவிக்கப்பட்டாலே, தகுதியை இழக்கிறார். குற்றவாளி என அறிவிக்கப்பட்டதற்கு தடை பெற்றால் மட்டுமே சட்டமன்ற உறுப்பினராக தொடரமுடியும். 3 ஆண்டுகள் அல்லது அதற்கும் குறைவாக தண்டனை விதிக்கப்பட்டால் உயர்நீதிமன்றத்திலேயே ஜாமீன் கோர முடியும். ஒருவேளை 3 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை விதிக்கப்பட்டால், உச்சநீதிமன்றத்தில்தான் ஜாமீன் பெற முடியும்.
சட்டமன்ற நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்ய வேண்டும் என்பது சட்டப்படி கட்டாயம் கிடையாது நேரடி ஒளிபரப்பு செய்ய வேண்டும் என்று சபாநாயகருக்கு உத்தரவிட முடியாது. சென்னை உயர்நீதிமன்றம் கருத்து….
அதிமுக கொறடா எஸ் பி வேலுமணி சட்டமன்றத்தில் ஆளுங்கட்சியினர் பேசும்போது மட்டுமே நேரலை ஒளிபரப்பப்படுகிறது. எதிர்க்கட்சி பேசும் போது இருட்டடிப்பு செய்யப்படுகிறது, என்று கூறி வழக்கு தொடர்ந்து இருந்தார். வேலுமணி தரப்பு இருட்டடிப்பு செய்வதை நிரூபிப்பதற்கு அவகாசம் கோரியதால் வழக்கு விசாரணை ஒத்திவைப்பு..
கடந்த 7ம் தேதி இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்ட ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 8 மீனவர்களை, விடுதலை செய்து அந்நாட்டின் மன்னார் நீதிமன்றம் உத்தரவு
ஓரிரு நாட்களில் அவர்கள் நாடு திரும்புவார்கள் என தகவல்