முன்னாள் காவல் அதிகாரி ராஜேஷ்தாஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடி;

“3 ஆண்டு சிறை தண்டனைக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் ராஜேஷ்தாஸ் தொடர்ந்த மேல்முறையீடு மனு; பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் விதிக்கப்பட்ட தண்டனைக்கு எதிரான மனு தள்ளுபடி; மேல்முறையீடு வழக்கில் விழுப்புரம் நீதிமன்றம் தீர்ப்பை அறிவிக்க தடை இல்லை”
அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு – வரும் 12-ம் தேதி தீர்ப்பு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் அறிவிப்பு

சட்டவிரோத பண பரிமாற்ற தடைச்சட்ட வழக்கில் அமலாக்க துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஆண்டு ஜூன் 14ஆம் தேதி கைது செய்யப்பட்டார். 3- வது முறையாக ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்தார் .இம்மனு மீது இருதரப்பு வாதங்கள் நிறைவடைந்த நிலையில் வருகிற 12-ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் அறிவித்துள்ளது.
ஊழல் வழக்கில் மூன்றாண்டு சிறைதண்டனை பெற்ற தி.மு.க முன்னாள் மந்திரி பொன்முடி, அவரது மனைவி விசா வாட்சி ஆகியோர் தாக்கல் செய்த மேல்முறையீடு மற்றும் ஜாமீன் மனுக்கள் மீது ஜனவரி 12 ந்தேதி உச்சநீதிமன்றம் விசாரணை நடத்துகிறது
பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக சஸ்பெண்ட் செய்யப்பட்ட சிறப்பு டிஜிபியின் மேல் முறையீட்டு வழக்கு

விழுப்புரம் நீதிமன்றத்தில் இருந்து வேறு நீதிமன்றத்துக்கு மாற்ற சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு
போதைப்பொருட்கள் மற்றும் சட்டவிரோதமாக லாட்டரி விற்பனை செய்யும் பெட்டிக்கடைகளை கண்டறிந்த உடனடியாக சீல் வைத்து சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு!
மேலும் இதுபோன்ற குற்றங்களை குறைக்க மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து காவல்துறை தரப்பில் விரிவான அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிடப்பட்டது
முன்னாள் அமைச்சர்கள் ஓபிஎஸ், வளர்மதி ஆகியோர் வழக்குகளிலும் பிப்ரவரி 5 முதல் 9 வரை தினசரி விசாரணை .. சென்னை உயர்நீதிமன்றம்
தமிழக அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கேகேஎஸ்எஸ்ஆர் மீதான மறு ஆய்வு வழக்கு. பிப்ரவரி 5 முதல் தினந்தோறும் விசாரணை உயர் நீதிமன்றம்..
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்து அமலாக்கத்துறை பதில் மனு தாக்கல்;

அமலாக்கத்துறை கூறும் காரணம் ஏற்கும்படி இல்லை என வழக்கு விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவு
2021 சட்டப்பேரவை தேர்தலில் வேதாரண்யம் தொகுதியில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியனின் வெற்றி செல்லும் – சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு

ஓ.எஸ்.மணியனின் வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர் வேதரத்தினம் தேர்தல் வழக்கு தொடர்ந்திருந்தார். நகராட்சி ஆணையர், காவல்துறை துணை கண்காணிப்பாளர் உள்ளிட்ட அரசு அதிகாரிகளை தனது தேர்தல் முகவர்கள் போல பயன்படுத்தியதாக மனுவில் குற்றம் சாட்டியிருந்தார்.
பொன்முடிக்கு சொத்துகுவிப்பு வழக்கில் நீதிபதி ஜெயச்சந்திரன் மீது திமுகவினரின் குற்றசாட்டு நல்லது அல்ல…நீதிபதி ஜெயச்சந்திரன் யார்?

க.பொன்முடிக்கு சொத்துகுவிப்பு வழக்கில் குற்றவாளி என அறிவித்த நீதிபதி ஜெயச்சந்திரன் இரண்டு நாள் கழித்து தண்டனை விபரங்களை அளித்தார். அதில் 3 ஆண்டு சிறைத்தண்டனையும், 50 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்தார். தண்டனையை மேல்முறையீடு செய்வதற்கு வசதியாக 30 நாட்களுக்கு நிறுத்தி வைத்தார். இந்நிலையில் இந்த வழக்கில் பொன்முடி வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி ஜெயச்சந்திரனை வழக்கம் போல் திமுக விமர்சித்துள்ளது. திமுகவினர் எப்போதும் இதுபோன்ற செயலில் இறங்குவது வாடிக்கையான ஒன்றாக உள்ளது. நீதிமன்ற தீர்ப்பு பற்றி கருத்து […]