சவுக்கு சங்கர் மீது வழக்கு பதிவு

காஞ்சிபுரம், பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்டம் கடந்த 26 ஆம் தேதி நடைபெற்றது. போராட்டத்தில் பங்குபெற்ற பிரபல யூடியுபர் சவுக்கு சங்கர் மீது வழக்கு பதிவு சவுக்கு சங்கரை கைது செய்ய சுங்குவார்சத்திரம் போலீசார் நடவடிக்கை
செந்தில் பாலாஜி ஜாமின் மனு மீதான விசாரணையை பிப்ரவரி 14ம் தேதிக்கு ஒத்திவைத்தது சென்னை உயர்நீதிமன்றம்!

அமலாக்கத்துறை பதில் மனு தாக்கல் செய்யவும் நீதிபதி உத்தரவு!
பொன்முடியின் தண்டனையை நிறுத்திவைக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

முன்னாள் அமைச்சர் பொன்முடியின் சிறைத் தண்டனைக்கு இடைக்காலத் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. சொத்துக்குவிப்பு வழக்கில் உயர்நீதிமன்றம் வழங்கிய 3 ஆண்டுகள் சிறை தண்டனையை ரத்து செய்யக் கோரி பொன்முடி உச்சநீதிமன்றத்தை நாடியிருந்தார். அதன் விசாரணையின்போது லஞ்ச ஒழிப்புத் துறைக்கு நோட்டீஸ் அனுப்பிய நீதிபதிகள், உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்க மறுத்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தனியார் பீர் தொழிற்சாலையை மூடும்படி, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!
ஆலை நீண்டநாள் செயல்பட்டு வரும் நிலையில் திடீரென மூட உத்தரவிட்டால் அதில் பணியாற்றும் ஊழியர்கள் பாதிக்கப்படுவர். அது அவர்களுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பை ஏற்படுத்தும் என நீதிபதிகள் விளக்கம்!
“நேரலை – சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்”
அயோத்தி ராமர் கோயில் பிராண பிரதிஷ்டை நேரலை விவகாரத்தில் தமிழ்நாடு முதல்வருக்கு உத்தரவிட கோரிய ரிட் மனு வாய்மொழி உத்தரவை வைத்து எந்த வித உத்தரவும் பிறப்பிக்க முடியாது – உச்சநீதிமன்ற நீதிபதி சஞ்சீவ் கன்னா சட்டப்படி எதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளதோ அதை அனுமதிக்க வேண்டும்
“ராமர் கோயில் பிரதிஷ்டை நிகழ்வை தனியார் கோயில்கள் மற்றும் திருமண மண்டபங்களில் நேரலை ஒளிபரப்பு, பூஜைகள் ஆகியவை செய்வதற்கு போலீசார் அனுமதி தேவையில்லை என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு;

மேலும் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோயில்களில் நேரலை/பூஜை மேற்கொள்ள வேண்டுமெனில் கோயில் செயல் அலுவலரிடம் தகவல் தெரிவிக்க வேண்டும்; உரிய கட்டுப்பாடுகளுடன் கோயில் செயல் அலுவலர் அனுமதியளிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு அயோத்தியில், ராமர் கோயில் பிரதிஷ்டை விழாவை முன்னிட்டு, சென்னை பட்டாபிராமில் உள்ள தனியார் மண்டபத்தில் பஜனைகள், அன்னதானம் நடத்த அனுமதி மறுத்த காவல்துறையினரின் உத்தரவை எதிர்த்து விவேகானந்தா இந்து இயக்கம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு; எதிர்பாராதவிதமாக […]
சொத்துகுவிப்பு வழக்கில் சரணடைவதில் இருந்து முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு விலக்கு அளித்து உச்சநீதிமன்றம் உத்தரவு

பொன்முடி நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதிப்பு
அதிமுக பெயர், கொடி, சின்னத்தை பயன்படுத்த விதிக்கப்பட்ட தடையை நீக்க கோரிய ஓபிஎஸ் மனு தள்ளுபடி

அதிமுக கொடி சின்னம் ஆகியவற்றை பயன்படுத்த ஓபிஎஸ் அணியினருக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்க மறுப்பு. தனி நீதிபதி முன்பு இது தொடர்பாக மனு தாக்கல் செய்ய அறிவுறுத்தல்.
மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு;

அனைத்து சமூகத்தினர் ஒன்றிணைந்து கமிட்டி அமைத்து ஜல்லிக்கட்டு நடத்த உத்தரவிடக் கோரிய வழக்கு; அனைத்து சமூகத்தினரையும் அழைத்து அமைதி பேச்சுவார்த்தை நடத்த உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது; மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் பேச்சு வார்த்தையை வீடியோ பதிவு செய்து செய்து ஓர் அறிக்கையாக தாக்கல் செய்ய நீதிபதிகள் கிருஷ்ணகுமார், விஜயகுமார் ஆகியோர் அமர்வு உத்தரவு
மக்களவை, சட்டமன்ற தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்கள் செலுத்த வேண்டிய டெபாசிட் தொகையை உயர்த்தக் கோரிய மனு தள்ளுபடி

சைதாப்பேட்டையை சேர்ந்த பார்த்திபன் என்பவர் தாக்கல் செய்த பொது நல மனு மீது சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்தரவு