கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திற்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வருவதற்கு தயாராக இருந்தால், நானும் அமைச்சர் சேகர் பாபுவும் அங்கு என்னென்ன வசதிகள் உள்ளது என்பதை காட்டுவதற்கு தயாராக உள்ளோம்

முடிச்சூரில் ஆம்னி பேருந்துகளுக்கான நிறுத்தம் தயாராகும் வரையில் கோயம்பேட்டில் இருந்து அவர்கள் பேருந்துகளை இயக்கிக்கொள்ளலாம் என்பதே உயர் நீதிமன்ற உத்தரவு -போக்குவரத்து அமைச்சர் சிவசங்கர் பேட்டி

ராஜேஷ் தாஸ்-க்கு 3 ஆண்டு சிறை தண்டனை உறுதி

முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ்க்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டு சிறை தண்டனையை விழுப்புரம் மாவட்ட நீதிமன்றம் உறுதி செய்தது. பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் 3 ஆண்டு தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. கீழமை நீதிமன்றம் விதித்த தண்டனையை எதிர்த்து ராஜேஷ் தாஸ் மேல்முறையீடு செய்தார். மேல்முறையீட்டு மனுக்களை தள்ளுபடி செய்து நீதிபதி பூர்ணிமா உத்தரவிட்டுள்ளார்.

பெண் ஐ.பி.எஸ். அதிகரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கூடுதல் டி.ஜி.பி.யாக இருந்த ராஜேஷ் தாஸ் ஐ.பி.எஸ்க்கு கீழமை நீதிமன்றம் விதித்த 3 ஆண்டு சிறை தண்டனையை விழுப்புரம் மாவட்ட நீதிமன்றம் உறுதி செய்தது

20,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.

சென்னை கோயம்பேட்டை சுற்றிய ஆம்னி பஸ் பணிமனைகளில் பயணிகளை ஏற்றி இறக்கலாம் – உயர்நீதிமன்றம்

கோயம்பேடு ஆம்னி பஸ் பணிமனைகளில்  பயணிகளை ஏற்றி, இறக்க அனுமதிக்க கோரிய வழக்கில் உத்தரவு போரூர், சூரப்பட்டு சுங்கச்சாவடிகளிலும் பயணிகளையும் ஏற்றலாம் – உயர்நீதிமன்றம் கிளாம்பாக்கத்தில் பயணிகளை ஏற்றி, இறக்காமல் தென்மாவட்ட ஆம்னி பஸ்களை இயக்க கூடாது – உயர்நீதிமன்றம் மறு உத்தரவு வரும்வரை கோயம்பேடு ஆம்னி பஸ்களின் பணிமனைகளை பயன்படுத்தலாம் – உயர்நீதிமன்றம்

சென்னைக்கு உள்ளேயே பயணிகளை ஏற்றிச் செல்ல அனுமதி வழங்கினால், கிளாம்பாக்கம் செல்வதற்கு முன்னதாகவே பேருந்து நிரம்பிவிடும்.

பேருந்து முனையம் கொண்டு வந்த நோக்கமே வீணாகிவிடும் – சென்னை உயர் நீதிமன்றம். ஆம்னி பேருந்துகளின் கேரேஜ்கள் கோயம்பேட்டில் இருப்பதால், தற்போதைக்கு சூரப்பட்டு, போரூர், தாம்பரத்தில் பயணிகளை ஏற்றி, இறக்க அனுமதிக்கப்படும். பெருங்களத்தூரில் பயணிகளை இறக்கிவிட மட்டும் அனுமதி வழங்கப்படும் – அரசு விளக்கம் ஆம்னி பேருந்துகள் செல்ல அனுமதிக்கப்பட்ட வழித்தட வரைபடத்தை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிமன்றம், ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் தாக்கல் செய்த வழக்கு விசாரணையை வரும் 9ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

திருமணமாகாத பெண் வாடகை தாய் மூலம் குழந்தை பெற அனுமதி இல்லை என உச்ச நீதிமன்றம் கருத்து

புதுடெல்லி: திருமணமாகாத பெண் வாடகைதாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள அனுமதிக்க முடியாது என்றும் திருமண பந்தத்தை பாதுகாக்க வேண்டியது அவசியம் என்றும் உச்ச நீதிமன்றம் கருத்துதெரிவித்துள்ளது. டெல்லியைச் சேர்ந்த ஒரு திருமணமாகாத பெண் (44) பன்னாட்டு நிறுவனத்தில் பணிபுரிகிறார். இவர் வழக்கறிஞர் ஷ்யாமல் குமார் மூலம் உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், “கணவனை இழந்த அல்லது விவாகரத்து பெற்ற, 35 முதல் 45 வயதுக்குட்பட்ட இந்திய பெண் விரும்பினால் வாடகைத்தாய் மூலம் குழந்தை […]

அதிமுகவின் உட்கட்சி தேர்தல் விவகாரத்தில் தலையிட முடியாது – உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் பதில்

அதிமுகவில் உட்கட்சி தேர்தல் நடத்தாமல் நிர்வாகிகள் நியமனம் செய்வதற்கு தடை கோரி, திண்டுக்கலைச் சேர்ந்த சூரியமூர்த்தி என்பவர் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி பொதுச்செயலாளர் உள்ளிட்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுவிட்டதால், எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது. சிவில் நீதிமன்றத்தை அணுகுங்கள் – நீதிபதி

இந்திய நீதிமன்றங்களில் 5 கோடி நிலுவை வழக்குகள்!

நாட்டில் உள்ள நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை 5 கோடியை கடந்துள்ளது. உச்சநீதிமன்றத்தில் மட்டும் ஜனவரி மாத நிலவரப்படி, 80,221 வழக்குகள் நிலுவையில் உள்ளது. கடந்த 5 ஆண்டுகள் நிலவரப்படி நிலுவையில் இருக்கும் வழக்குகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. 2020-ஆம் ஆண்டு ஜனவரி மாத நிலவரப்படி உச்சநீதிமன்றத்தில் 59,859 வழக்குகள் நிலுவையில் இருந்தது. கடந்த மாதம் மட்டும் 1,966 வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், 2,420 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டுள்ளது. பொது விடுமுறையை […]

சாதி, மதமற்றவர் என சான்று வழங்க சட்டத்தில் இடமில்லை-சென்னை உயர்நீதிமன்றம்.!

சாதி, மதமற்றவர் என சான்று வழங்க சட்டத்தில் இடமில்லை; சான்றிதழ் வழங்க வட்டாட்சியர்களுக்கு அதிகாரம் இல்லை. சாதி, மதற்றவர் என சான்றிதழ் வழங்கினால் எதிர்கால சந்ததியினர் இட ஒதுக்கீட்டு பலன் பெறுவது பாதிக்கப்படும். வாரிசுரிமை சட்டங்களின் மூலம் பலன் பெற முடியாத நிலை ஏற்படும் – சென்னை உயர்நீதிமன்றம்..!