புறம்போக்கு நிலங்களை மக்கள் நல திட்டங்களுக்காக பயன்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது

கால்நடை மேய்ச்சலுக்காக ஒதுக்கப்பட்ட மெய்க்கால், மந்தைவெளி புறம்போக்கு நிலங்களில் அரசின் 97 நலத் திட்டங்களுக்காக பயன்படுத்திக் கொள்ளலாம். சிப்காட் தொழில் பூங்கா, ஐடி பூங்கா உள்ளிட்டவற்றுக்கு நிலம் ஒதுக்கி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது. கால்நடை மேய்ச்சலுக்காக ஒதுக்கிய புறம்போக்கு நிலங்களை ஆக்கிரமிப்பு செய்யவோ, பட்டா மாறுதல் செய்யவோ தடை விதிக்க கோரி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.
உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது இரட்டை இலை சின்னத்தை முடக்க முடியாது

தேர்தல் தேதி அறிவித்த பிறகு கூட்டணி குறித்து அறிவிப்போம்- ஈபிஎஸ்
பிஜேபியின் சூழ்ச்சித் தந்திரங்களுக்கு ஒரு எச்சரிக்கையை அனுப்புகிறது உச்சநீதிமன்றம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: 2024 பொதுத் தேர்தல்களுக்கு முன்னதாக, பிஜேபியின் சூழ்ச்சித் தந்திரங்களுக்கு ஒரு எச்சரிக்கையை உச்சநீதிமன்றம் அனுப்புகிறது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சண்டிகர் மேயர் தேர்தலில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு நீதி மற்றும் சட்டத்தின் ஆட்சியின் கலங்கரை விளக்கமாகும்.சட்டப்பிரிவு 142-ன் கீழ் அரிதான அதிகாரத்தைப் பயன்படுத்துவதன் மூலம், நீதிமன்றம் நியாயத்தை நிலைநிறுத்தியது மட்டுமல்லாமல், தலைமை அதிகாரியால் பொறிக்கப்பட்ட தேர்தல் முறைகேட்டையும் தீர்க்கமாக ஒதுக்கியுள்ளது.
சண்டீகர் மேயர் தேர்தல் முடிவு ரத்து: உச்சநீதிமன்றம்

சண்டீகர் மேயர் தேர்தல் முடிவை ரத்து செய்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது. மேலும், தேர்தல் அதிகாரி அனில் மஷிஹ் எக்ஸ் (X) எனக் குறிப்பிட்ட 8 வாக்குகளும் இந்தியா கூட்டணியின் மேயர் வேட்பாளருக்கு சாதகமாக வழங்கப்பட்டது. இதன்மூலம், ஆம் ஆத்மியின் கவுன்சிலர் குல்தீப் குமாருக்கு 20 வாக்குகள் கிடைத்ததால் சண்டீகர் மாநகராட்சியின் மேயராக அறிவிக்கப்பட்டார். காங்கிரஸ் வேட்பாளர் துணை மேயரானார். மேலும், தேர்தல் அதிகாரி அனில் மஷிஹ் குற்றவாளியாக உச்சநீதிமன்றம் அறிவித்தது
தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கை பெங்களூரு நீதிமன்றம் நடத்தி வந்தது
இந்த வழக்கில் ஜெயலலிதாவுக்கு தண்டனை உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், சசிகலா, அவருடைய அண்ணி இளவரசி, சுதாகரன் உள்ளிட்டோர் பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பல்வேறு பொருட்கள் அங்குள்ள கருவூலத்தில் வைக்கப்பட்டன. இதனிடையே சொத்து குவிப்பு வழக்கில் குற்றவாளிகளின் தண்டனை காலம் நிறைவுற்ற நிலையில், பொருட்களை ஏலம் விடுமாறு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் நகைகளை ஏலம் விடுவதற்கு பதிலாக தமிழக அரசிடம் ஒப்படைக்கலாம் என்று பெங்களூரு நீதிமன்றம் தெரிவித்தது. அந்த வகையில், […]
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மனுவுக்கு பதிலளிக்க அமலாக்கத்துறைக்கு சென்னை மாவட்ட அமர்வு நீதிமன்றம் உத்தரவு

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி செந்தில் பாலாஜி மனு தாக்கல் செய்தார். செந்தில் பாலாஜி மனுவுக்கு பதிலளிக்க அமலாக்கத்துறைக்கு சென்னை மாவட்ட அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தனக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரமில்லை என செந்தில் பாலாஜி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கு விசாரணையை மார்ச் 4-ம் தேதிக்கு ஒத்திவைத்து அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோயம்பேட்டில் இருந்தே பேருந்துகளை இயக்க அனுமதிகோரி ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி

இவ்வழக்கு உயர் நீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கும் போது, ஏன் உச்ச நீதிமன்றம் தலையிட வேண்டும். உயர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வரும் போது உங்கள் வாதங்களை முன்வைக்கலாம் – நீதிபதிகள்.
என்.ஐ.ஏ. சோதனை – ஆவணங்கள் நீதிமன்றத்தில் ஒப்படைப்பு

கோவை கார் வெடிப்பு தொடர்பாக நடத்தப்பட்ட சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள், ஆவணங்கள் நீதிமன்றத்தில் ஒப்படைப்பு. 30 செல்போன்கள், 25க்கும் மேற்பட்ட ஆவணங்கள், 6 ஹார்ட் டிஸ்க்குகள், 20க்கும் மேற்பட்ட சிம்கார்டுகள் பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் ஒப்படைப்பு.
செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கில் அமலாக்கத்துறை பதில் மனு தாக்கல்

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கில் உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை பதில் மனு தாக்கல் செய்தது. செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கக்கூடாது, மனுவை தள்ளுபடி செய்ய பதில் மனுவில் அமலாக்கத்துறை கோரிக்கை விடுத்துள்ளது. ஒரே காரணத்தை அடிப்படையாக வைத்து மீண்டும் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது எனவும் கூறியுள்ளது.
6 மாதங்களாக சிறையில் இருந்துக்கொண்டு அமைச்சராக இருப்பதாலேயே அவரது ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுவதாக நீதிமன்றங்கள் தொடர்ந்து தெரிவித்து வந்தன

மக்களவை தேர்தலுக்கு முன்பு ஜாமீன் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே, தனது அமைச்சர் பதவியை செந்தில் பாலாஜி ராஜினாமா செய்துள்ளார்.