புதுமணத் தம்பதிகளான காங்கிரஸ் முன்னாள் எம்.பி திருநாவுக்கரசரின் மகன் சாய் விஷ்ணு மற்றும் நடிகை மேகா ஆகாஷ் ஆகிய இருவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து, அவரது ஆசி பெற்றுள்ளனர்

மனவளக்கலை மன்ற விழா

குரோம்பேட்டை ராதா நகர் மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை சார்பில் குடும்ப உறவை மேம்படுத்தவும், கணவன் மனைவி நட்பின் புனிதத்தையும் போற்றக்கூடிய மனைவி நல வேட்பு நாள் விழா நடைபெற்றது. ராதா நகர் மெயின் ரோட்டில் உள்ள செல்வம் மஹாலில் இந்த நிகழ்ச்சி நடந்தது. சிறப்பு விருந்தினராக திரைப்பட இசை அமைப்பாளர் சத்யா தம்பதியினர் பட்டிமன்ற பேச்சாளர் ராஜ்மோகன் தம்பதியினர் சென்னை சில்க்ஸ் ரவிசங்கர் தம்பதியினர், மயில் முருகன் தம்பதியினர், சம்பத் குமார் தம்பதியினர் ரத்னம் தம்பதியினர் கலந்து […]

மனைவி கழுத்தை நெரித்து கொன்ற மத போதகர் கைது

சென்னை அருகே பொன்மாரில் மதபோதகர் அவர் மனைவியின் கழுத்து நெரித்து கொலைசெய்த நிலையில் உடல் நிலை பாதித்ததாக கூறி இறுதி சடங்கு செய்யமுயன்றபோது பெண் வீட்டார் சாவில் சந்தேகம் என கூறியதால் பிடிபட்டார். திருமணத்திற்கு முன்பு ஏற்பட்ட காதல் குறித்து பேசியபோது கணவன் மனைவி இருவருக்கு சண்டை ஏற்பட்டுள்ளது. தாழம்பூரை அடுத்த பொன்மாரில் உள்ள அட்வெண்ட் கிறிஸ்தவ திருச்சபையில் துனை மதபோதகராக உள்ளவர் விமல்ராஜ்(35) இவர் மனைவி வைஷாலி(33) மும்பையில் பூர்விகமாக கொண்ட வைஷாலிக்கு தமிழ் குடும்பம் […]

மனைவியைக் கொன்ற கட்டிட தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை

தாம்பரம் அருகே மனைவியை கொலை செய்த வழக்கில் கணவருக்கு ஆயுள் தண்டனை வழங்கி செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. தாம்பரம் அடுத்த அஸ்தினாபுரம் மகேஸ்வரி நகர் இரண்டாவது குறுக்கு தெருவை சேர்ந்தவர் வரபிரசாதம் (60) இவர் கட்டிட வேலை செய்து வருகின்றார். இவரது மனைவி விசுவாசம் (50) இவரும் வேறு பகுதியில் கட்டிட வேலை செய்து வந்துள்ளார். மனைவி விசுவாசம் காலையில் வேலைக்கு சென்று மாலை நேரத்தில் வீட்டிற்க்கு வராமல் இரவு நேரத்தில் வீட்டிற்க்கு வந்ததால் […]

ஆபாச வீடியோ எடுத்து மனைவியை மிரட்டிய கணவன்

கர்நாடக மாநிலம் பெங்களூரு பசவகுடி பிஎஸ் பகுதியைச் சேர்ந்த புதுமணத் தம்பதி நவம்பர் மாதம் தேனிலவுக்காக தாய்லாந்து சென்றனர். அப்போது மனைவியின் நிர்வாண வீடியோக்களை கணவன் செல்போனில் பதிவு செய்துள்ளார். அதன்பிறகு பணத்தை கேட்டு அவரை தொந்தரவு செய்துள்ளார். அதன்பேரில், மனைவி போலீசில் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கணவனே மனைவியை ஆபாசமாக வீடியோ எடுத்து பணம் கேட்டு மிரட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குரோம்பேட்டையில் பெயிண்டர் மீது சுடுதண்ணீர் ஊற்றிய தம்பதி கைது

குரோம்பேட்டை ஜமீன் ராயப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் அர்ஜுன் (24) பெயிண்டர் வேலை செய்து வருகிறார். கடந்த ஆறாம் தேதி தனது வீட்டிற்கு மது அருந்திவிட்டு இரவு 11 மணிக்கு உணவுப் பொட்டலங்களை வாங்கி சென்றுள்ளார். அப்போது அர்ஜுனின் பக்கத்து வீட்டு வாசலில் மது பாட்டில்கள் கிடந்துள்ளது. இதை அர்ஜுன் தான் இங்கு போட்டார் என்று எண்ணிய பக்கத்து வீட்டுக்காரர் மணிகண்டன் மற்றும் அவருடைய மனைவி ராஜேஸ்வரி (தனியார் பள்ளி ஆசிரியை) அர்ஜுனிடம் வாக்குவாதம் செய்துள்ளனர். மேலும் அர்ஜுனை […]

முதுமலை புலிகள் காப்பகத்தில் கைவிடப்பட்ட யானைக் குட்டிகளை தத்தெடுத்து பராமரித்து வரும் பொம்மன் – பெல்லி தம்பதியினர்

முதுமலை புலிகள் காப்பகத்தில் கைவிடப்பட்ட யானைக் குட்டிகளை தத்தெடுத்து பராமரித்து வரும் பொம்மன் – பெல்லி தம்பதியினரை பெருமைப்படுத்தும் விதமாக #AsianChampionshipTrophyChennai ஹாக்கி போட்டிக்கான இலச்சினைக்கு “பொம்மன்” என பெயர் சூட்டினோம். இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஆசிய கோப்பை ஹாக்கிப் போட்டியை காண, மேயர் இராதாகிருஷ்ணன் மைதானத்திற்கு வந்திருந்த பொம்மன் – பெல்லி தம்பதியினரை நேரில் சந்தித்து நலம் விசாரித்தோம். அவர்களின் தன்னலமற்ற பணிகள் தொடர வாழ்த்தி மகிழ்ந்தோம்.

ஒரு கோடி கடன் சிட்லபாக்கம் தம்பதி தற்கொலை

தாம்பரம் அடுத்த சிட்லப்பாக்கம் கல்யாண சுந்தரம் தெருவை சேர்ந்தவர் பொன்னுதாஸ் (48) திருமுடிவாக்கத்தில் ஏ.கே ஆட்டோ மொபலைஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வந்தார். இவருடைய மனைவி ஜொன்சிராணி குன்றத்தூரில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார். இவர்களுக்கு கல்லூரி படிக்கும் ஒரு மகன் மற்றும் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மகள் உள்ளனர். இந்நிலையில் ஆட்டோ மொபல் நிறுவனம் நடத்துவதற்காக வங்கி மற்றும் தனக்கு தெரிந்த பல நபர்களிடம் சுமார் ஒரு கோடி ரூபாய் வரை […]