பருவமழையை எதிர்கொள்ள தயாரான சென்னை

சென்னையில் 25 இடங்களில் மெட்ரோ பணிகளால் சேதமடைந்த மழைநீர் வடிகால் கட்டமைப்புகளுக்கு மாற்று ஏற்பாடாக மேற்கொள்ளப்பட்ட பணிகள் நிறைவு பெற்றுள்ளதாக சென்னை மாநகராட்சிக்கு மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிக்கை கொடுத்துள்ளது. பருவமழை தொடங்க உள்ளதால் செப்டம்பர் 30-ந் தேதிக்குள் அனைத்து பணிகளையும் முடிக்க வேண்டும் என்று மாநகராட்சி அறிவுறுத்தியது குறிப்பிடத்தக்கது.
சென்னை: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பட்டினப்பாக்கம் கடற்கரையில் சிலைகள் கரைக்கப்பட்ட நிலையில், அங்கு தேங்கி கிடக்கும் குப்பைகள், மரக்கட்டைகள் ஆகியவற்றை அகற்றும் பணியில் 50க்கும் மேற்பட்ட சென்னை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்
கோவை மாநகராட்சி மேயராக 29 வது வார்டு் திமுக கவுன்சிலர் ரங்கநாயகி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு, உடனடியாக சான்றிதழை மாநகராட்சி ஆணையர் சிவகுருபாகரன் வழங்கினார்
விமான நிலையத்தில் திரியும் நாய்களைப் பிடித்து தடுப்பூசி மாநகராட்சி நடவடிக்கை

சென்னை விமான நிலையத்தில் சுற்றித்திரியும் தெரு நாய்களுக்கு தடுப்பூசி செலுத்திய மாநகராட்சி குழுவினர் கருதடை அறுவை சிகிச்சை செய்யப்படாத பத்துக்கும் மேற்பட்ட தெரு நாய்களை மாநகராட்சி நாய் பிடி ஊழியர்கள் பிடித்துச் சென்றனர். சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களில் தெரு நாய்களின் தொல்லை அதிகரித்துள்ளதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனா். இதைதொடா்ந்து சாலையில் செல்பவா்களை நாய்கள் கடிப்பதை தடுக்கும் வகையில் சென்னை மாநகராட்சி சார்பாக முகாம்கள் அமைத்து தெரு நாய்களை பிடித்து தடுப்பூசி செலுத்தியும் கருத்தடை அறுவை […]
தாம்பரம் மாநகராட்சி புதிய ஆணையாளர் திரு.S.பாலச்சந்தர் இ.ஆ.ப., அவர்கள்
தமிழ்நாட்டில் மேலும் 4 மாநகராட்சிகள் புதிதாக உருவாகிறது. அதன்படி திருவண்ணாமலை, காரைக்குடி, புதுக்கோட்டை, நாமக்கல் மாநகராட்சிகளாக தரம் உயர்கிறது.
சென்னையில் இதுவரை 100 டன் பட்டாசுக் கழிவுகள் அகற்றம் – சென்னை மாநகராட்சி தகவல்.

பட்டாசுக் கழிவுகளை அகற்றும் பணியில் நேற்று காலை முதல் ஈடுபட்டுள்ள மாநகராட்சி பணியாளர்கள் இதுவரை 100 டன் பட்டாசு கழிவுகள் அகற்றப்பட்டு இருப்பதாக மாநகராட்சி அதிகாரிகள் தகவல் இந்த பட்டாசுக் கழிவுகள் அகற்றும் பணி தொடர்ந்து 3 நாட்கள் நடைபெறும் என்றும் தகவல் தெரிவித்த சென்னை மாநகராட்சி அகற்றப்பட்ட பட்டாசுக் கழிவுகள் கும்மிடிப்பூண்டி அருகே உள்ள தொழிற்சாலையில் அறிவியல் பூர்வமாக அழிக்கப்படும் = மாநகராட்சி அதிகாரிகள்
வேங்கைவாசல் ஊராட்சியில் மரக்கன்று வழங்கும் விழா

தாம்பரம் அடுத்த வேங்கைவாசல் ஊராட்சியில் தமிழ்நாடு வேளாண்துறை சார்பில் பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்க நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் கலந்துக்கொண்ட வேங்கைவாசல் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயச்சந்திரன் பொதுமக்களுக்கு தென்னங்கன்று, மா, கெய்யா, நெல்லி மரக்கன்றுகளை வழங்கினார். இவ் விழாவில் வேளாண்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பொதுமக்கள் கலந்துக்கொண்டனர்…