வேகமெடுக்கும் கொரோனா.. 59 பேர் பலியான சோகம்
வீரியம் குறைவான கொரோனா என அரசு விளக்கம் அளித்து வரும் நிலையில், பலி எண்ணிக்கை உயர்வதால் லாக்டவுன் அச்சம் ஏற்பட்டுள்ளது. நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 391 பேருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஒருவர் உள்பட புதிதாக 4 பேரும், நடப்பாண்டில் மொத்தமாக 59 பேரும் உயிரிழந்தது மத்திய சுகாதாரத்துறை அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது
.வேகமாக பரவும் கொரோனா.. மீண்டும் லாக்டவுன் அச்சம்!
நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை தினசரி அதிகரித்து வருகிறது. இதுவரை பாதிப்பே இல்லாத இமாச்சலப் பிரதேசத்திலும் நேற்று ஒருவருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இந்தச் சூழலில், ஹாஸ்பிடல்களில் போதிய ஆக்ஸிஜன்கள், படுக்கைகள், மருந்துகளை இருப்பு வைக்குமாறு மாநில அரசுகளுக்கு, மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இதனால், மீண்டும் ஒரு மினி லாக்டவுன் வருமோ? என்ற அச்சம் எழுந்துள்ளது.
கொரோனா பரவலால் பதற்றப்படத் தேவையில்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன்
கொரோனா பரவலால் பதற்றப்படத் தேவையில்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். முதியவர்கள், கர்ப்பிணிகள் பொது இடங்களுக்கு செல்லும் போது முகக்கவசம் அணிய ஒன்றிய அரசு அறிவுறுத்தியுள்ளது. நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள், இணை நோய் உள்ளவர்கள் பொதுஇடங்களில் முகக்கவசம் அணிய வேண்டும். ஒன்றிய அரசு கூறிய அறுவுறுத்தல்களையே நாங்களும் கூறி வருகிறோம்
தமிழகத்தில் கொரோனா : – முகக்கவசம் அணிய அறிவுறுத்தல்.
கொரோனா பரவல் அதிகரிக்கும் நிலையில் முகக்கவசம் அணிய தமிழக பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது. கூட்டம் அதிகமுள்ள இடங்களில் முகக்கவசம் அணிவதால் கொரோனா பரவலை தடுக்கலாம். உடல்நிலை சரியில்லாதவர்கள் வீடுகளில் இருக்க, தடுப்பூசிகளை போட தமிழக பொது சுகாதாரத்துறை. அறிவுரை கூறி உள்ளது.
சென்னையில் கொரோனா : ஒருவர் உயிரிழப்பு
சென்னையில் முதியவர் ஒருவர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகர் அடுத்த சட்டமங்கலம் பகுதியில் வசித்து வந்தவர் ஜோசியர் மோகன் (65). சிறுநீரக செயலிழப்புக்கு சிகிச்சை பெறுவதற்காக, அவர் கடந்த 15-ம் தேதி சென்னை கே.கே.நகர் இஎஸ்ஐ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் பலியானார் தமிழ்நாட்டில் 69 பேர் கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்
கொரானா வுக்கு மீண்டும் முக கவசம்:
மத்திய மந்திரி முக்கிய தகவல். மத்திய சுகாதாரத் துறை இணை அமைச்சர் பிரதாப்ராவ் யாதவ் புதுவையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது நாட்டில் கரோனா பரவலை மத்திய சுகாதாரத் துறை தீவிரமாக கண்காணித்து வருகிறது. ஆனால், பொதுமக்கள் முகக்கவசம் அணிய வேண்டும் என்பது கட்டாயமில்லை. மத்திய அரசும் அதை அறிவுறுத்தவில்லை. கரோனா பரவல் நிலைக்கு ஏற்ப மாநில அரசுகளே முகக்கவசம் அணிவது குறித்த முடிவுகளைத் தீர்மானிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.
கொரோனா தொற்று பரவல்: மாஸ்க் அணிய அறிவுறுத்தல்
தமிழ்நாடு, கேரளா, மகாராஷ்டிரா மாநிலங்களில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதால், பொது இடங்களில் மக்கள் முகக் கவசம் அணிய வேண்டும் என பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது. காய்ச்சல், நுரையீரல் சார்ந்த நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள், அருகில் உள்ள மருத்துவரை அணுகி, சிகிச்சை பெறுவது அவசியம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு உள்ளதா?
சிங்கப்பூர், ஹாங்காங் உள்ளிட்ட நாடுகளில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவில் கட்டுக்குள் உள்ளது தற்போதைய நிலவரப்படி, நாடு முழுவதும் 257 பேர் மட்டுமே கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர் கொரோனா நிலைமையை சுகாதார அமைச்சகம் உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது, அச்சப்பட தேவையில்லை” – என மத்திய அரசு கூறி உள்ளது இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலைமை கட்டுக்குள் உள்ளதாக மத்திய அரசு விளக்கம் அளித்து உள்ளது.
புதிய வகை கொரோனா தொற்று குறித்து பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை” – தமிழ்நாடு பொது சுகாதாரத் துறை!

சிங்கப்பூரில் பரவி வரும் புதிய வகை கொரோனா தொற்று, தமிழகத்தில் ஏற்கெனவே பாதிப்பை ஏற்படுத்திய ஜெ.என்.1 வகையிருந்து உருமாற்றமடைந்தது தான் என்றும் இதனால் பொது மக்கள் அச்சப்படத் தேவையில்லை என்றும் பொது சுகாதாரத் துறை இயக்குநா் செல்வவிநாயகம் தெரிவித்துள்ளார். கடந்த 2019-ம் ஆண்டின் இறுதியில் சீனாவின் வூஹான் பகுதியில் கொரோனா வைரஸ் பரவல் கண்டறியப்பட்டது. அங்கிருந்து 2020-ம் ஆண்டு தொடக்கத்தில் உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இதன் பின்னர் உலகம் முழுவதும் […]
உலகம் முழுவதும் கொரோனா தடுப்பூசியை திரும்பப் பெறுவதாக அஸ்ட்ராஜெனிகா நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது
மிக அரிதாக சிலருக்கு பக்கவிளைவுகள் ஏற்படும் என தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் தடுப்பூசியை திரும்பப் பெற முடிவு செய்துள்ளது. வணிக காரணங்களுக்காக கொரோனா தடுப்பூசியை திரும்பப் பெறுவதாக அஸ்ட்ராஜெனிகா நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. கொரோனா பரவலை தொடர்ந்து அறிமுகப்படுத்தப்பட்ட இந்த தடுப்பூசிக்கான தேவை தற்போது சந்தையில் குறைந்துள்ளதாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. கொரோனா திரிபுகளை எதிர்கொள்ளும் விதமாக பல்வேறு விதமான மருந்துகள் தயாரிக்கப்பட்டதால், தற்போது மருந்துகள் சந்தையில் தேங்க தொடங்கியுள்ளன. எனவே இனி […]