பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் பிரச்சாரத்தில்VOTE For INDIA என்று கூறி மக்களிடம் வாக்கு கேட்டதை சமூக வலைதளங்களில் வேகமாக பரப்பும் காங்கிரஸ் கட்சியினர்

எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு இன்று INDIA என பெயர் வைத்த நிலையில் அதனை பாஜக தலைவர்கள் விமர்சித்து வருவது குறிப்பிடத்தக்கது
மணிப்பூர் பிரச்சனையை நாடாளுமன்றத்தில் எழுப்புவோம்: காங்கிரஸ்

நாடாளுமன்ற கூட்டத்தில் மணிப்பூர் பிரச்சனை குறித்து விவாதிக்க வலியுறுத்துவோம் என காங்கிரஸ் எம்.பி. ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகள் மீது ஆளுநர் மூலம் நடத்தப்படும் தாக்குதல் குறித்தும் பிரச்சனை எழுப்புவோம். விலைவாசி உயர்வு, அதானி குழுமம் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை உள்ளிட்ட பிரச்சனைகளை எழுப்புவோம். டெல்லி நிர்வாகம் தொடர்பான ஒன்றிய அரசின் அவசர சட்டத்தை காங்கிரஸ் எதிர்க்கும் எனவும் கூறினார்.
மேற்குவங்க உள்ளாட்சி தேர்தல் முடிவுகள்: திரிணாமுல் காங்கிரஸ் முன்னிலை!

மேற்கு வங்க உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் தொடர்ந்து முன்னிலை பெற்று வருகிறது. மேற்கு வங்க மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தல் ஜூலை 8-ம் தேதி நடைபெறும் என கடந்த மாதம் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இதனையடுத்து அரசியல் கட்சியினர் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் போட்டி போட்டு வேட்பு மனுத்தாக்கல் செய்தனர். தேர்தலுக்கு முன்னர் பல்வேறு இடங்களில் நடைபெற்ற வன்முறையில் 19 பேர் உயிரிழந்தனர். 22 ஜில்லா பரிஷத், 9,730 பஞ்சாயத்து கமிட்டிகள் […]