வருமான வரித்துறை பறிமுதல் செய்த கணக்கில் வராத பணம் குறித்து காங்கிரஸ் எம்பி.யிடம் ஜார்கண்ட் மாநில காங்கிரஸ் விளக்கம் கேட்டுள்ளது

ஒடிசாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பவுத் மதுபான நிறுவனம் மற்றும் அது தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை 3 நாட்கள் சோதனை நடத்தியது. இதன் போது, ஜார்கண்ட் காங்கிரஸ் எம்பி தீரஜ் பிரசாத் சாஹுவுக்கு சொந்தமான இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டது. இதில் கணக்கில் காட்டப்படாத பணம் கட்டு கட்டாக கைப்பற்றப்பட்டது. இதன் மதிப்பு ஏறக்குறைய ரூ.290 கோடி இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இந்நிலையில், பிர்சா முண்டா விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஜார்கண்ட் மாநில காங்கிரஸ் தலைவர் […]
சத்தீஸ்கரில் காங்.,கிற்கு அதிர்ச்சி கொடுத்த பா.ஜ., – வெற்றி கிடைத்தது எப்படி?
சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்., ஆட்சியை தக்க வைக்கும் என அக்கட்சி நம்பிக்கை தெரிவித்தது. தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளும் அதனையே கூறின. ஆனால், அனைத்தையும் பொய்யாக்கி, பா.ஜ., ஆட்சியை கைப்பற்றியது. இது எப்படி சாத்தியமானது என்பது குறித்து பா.ஜ., முன்னாள் முதல்வர் கருத்து தெரிவித்துள்ளார். இந்த வெற்றி தொடர்பாக பா.ஜ., மூத்த தலைவரும், அம்மாநில முன்னாள் முதல்வருமான ராமன் சிங் கூறியதாவது: பிரதமர் மோடியின் வாக்குறுதிகளில் மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். இதனை தான் தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. […]
காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சனாதனத்தை ஒழிக்க துடிக்கின்றது;

சனாதனத்தை ஒழிப்பது என்றால் ராஜஸ்தானின் கலாச்சாரத்தையே ஒழிப்பதாகும் – ராஜஸ்தான் மாநிலம் பாலி பகுதியில் நடைபெற்ற பாஜக தேர்தல் பரப்புரை கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேச்சு. காங்கிரஸ் கட்சி பெண்களுக்கு எதிரான மன நிலையில் இருக்கின்றது, பட்டியலின் மக்களுக்கு எதிரான கொடுமைகள் நடைபெறும் போது கண்மூடி கொண்டிருக்கின்றது. பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ராஜஸ்தான் முதலிடத்தில் உள்ளது. காங்கிரஸ் கட்சியும் அதன் கூட்டணி கட்சிகளும் சனாதனத்தை ஒழிக்க விரும்புகின்றது; சனாதனத்தை ஒழிப்பது என்றால் ராஜஸ்தான் மாநிலத்தில் கலாச்சாரத்தையே […]
முதல்வர் சந்திரசேகரராவை தேர்தலில் தோற்கடித்து தேசிய அளவில் அவரை வளரவிடாமல் தடுக்க காங்கிரஸ்,பாஜக கூட்டு சதி செய்துள்ளதாக தெலங்கானா அமைச்சர் கே.டி.ராமராவ் குற்றம் சாட்டினார்

தெலங்கானா முதல்வர் சந்திரசேகரராவின் மகனும், மாநில அமைச்சருமான கே.டி.ராமராவ் நேற்று அளித்த பேட்டியில்,‘‘30ம் தேதி நடக்கும் பேரவை தேர்தலில் பாஜக கட்சி போட்டியிலேயே கிடையாது. பிஆர்எஸ் கட்சி 88 இடங்களில் வெற்றி பெற்று தென் மாநிலங்களில் முதல் முறையாக மூன்றாவது முறை முதல்வர் ஆனவர் என்ற பெருமை சந்திரசேகரராவுக்கு கிடைக்கும். மக்களிடையே அரசுக்கு எதிரான அதிருப்தி தேர்தலில் ஓரளவு பிரதிபலிக்கலாம், அதை மறுக்க முடியாது.மெடிகட்டா அணையின் தூண்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது என தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையம் […]
கேதர்நாத் கோயிலில் சாமி தரிசனம் செய்த காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி
தெலங்கானா சட்டமன்ற தேர்தலில் ஒய்.எஸ்.ஆர். தெலங்கானா கட்சி காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளிக்க முடிவு

ஆந்திர மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரியும், ஒய்.எஸ்.ஆர். தெலங்கானா கட்சியின் தலைவருமான ஷர்மிளா அறிவிப்பு தெலங்கானாவில் சந்திரசேகர ராவ் அரசு மீண்டும் ஆட்சி அமைப்பதை தடுக்க ஒய்.எஸ்.ஷர்மிளா திட்டம்
மணிப்பூர் பிரச்சனைக்கு தீர்வு காண பாஜக அரசு முன்வரவில்லை… காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வீடியோ வெளியீடு!!

இந்தியா முழுவதும் ஒற்றைத் தன்மையை நிலைநிறுத்த பாஜக முயற்சிப்பதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி குற்றம் சாட்டியுள்ளார். மிசோரம் மாநில சட்டமன்ற தேர்தல் வரும் 7ம் தேதி நடைபெற உள்ள நிலையில், காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு வாக்களிக்கக் கோரி வீடியோ ஒன்றை சோனியா காந்தி வெளியிட்டுள்ளார். அதில் மிசோரம் மாநிலத்திற்கும் தனக்குமான தொடர்பை விளக்கி உள்ள சோனியா காந்தி, வடகிழக்கு மாநிலங்களில் அமைதி நிலவ காங்கிரசிற்கு வாக்களிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். பழங்குடி மக்களுக்கு உள்ள உரிமைகளை […]
“பிரதமர் மோடியை போல் நான் வெறும் வாக்குறுதி மட்டும் கொடுப்பவன் அல்ல. ஒரு வாக்குறுதி அளித்தால், அதை நிறைவேற்றுவேன்”

-ராகுல் காந்தி, காங்கிரஸ் எம்.பி.
சத்தீஸ்கரில் காங்கிரஸ் வாக்குறுதிகள்!

ஆண்டுதோறும் டெண்டு இலை (பீடி இலை) சேகரிப்பவர்களுக்கு ரூ.4,000 வழங்கப்படும். விவசாயிகள் கடன் தள்ளுபடி தொடரும். மழலையர் கல்வி முதல் பட்ட மேற்படிப்பு வரை இலவசக் கல்வி. வீடுகளுக்கு 200 யூனிட் மின்சாரம் இலவசம். குப்சந்த் பாகேல் சுகாதார உதவித் திட்டத்தின் கீழ் ரூ.10 லட்சம் வரை இலவச சிகிச்சை. முதலமைச்சரின் சிறப்பு திட்டத்தின் கீழ் ரூ.25 லட்சம் வரை இலவச சிகிச்சை. ரூ.500க்கு சமையல் எரிவாயு. சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்.
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் மல்லிகார்ஜனே கார்கே முன்னிலையில் தமிழக முன்னாள் காவல்துறை அதிகாரி பி கே ரவி இன்று காங்கிரஸ் கட்சியில் இணைகிறார்