பாஜகவால் என்னுடைய குரலை ஒடுக்க முடியாது – ராகுல்காந்தி

காங்கிரசின் அனைத்து வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளன. எதிர்க்கட்சி தலைவர்களை கைது செய்து சிறையில் அடைக்கிறார்கள். சிபிஐ, அமலாக்கத் துறை, வருமான வரித்துறையை வைத்து நாட்டை நடத்த முயற்சிக்கிறார்கள். ஈவிஎம் இல்லாமல் பாஜகவால் 180 இடங்களை கூட வெல்ல முடியாது – டெல்லியில் நடைபெறும் போராட்டத்தில் ராகுல்காந்தி பேச்சு
கச்சத்தீவு – காங்கிரஸ் மீது பிரதமர் குற்றச்சாட்டு

கச்சத்தீவை காங்கிரஸ் எப்படி தாரைவார்த்தது என்ற உண்மை தற்போது வெளிவந்துள்ளது. கச்சத்தீவு குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆர்டிஐ மூலம் பெற்ற தகவலை பகிர்ந்து பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் பதிவு காங்கிரஸை நாம் ஒரு போதும் நம்ப முடியாது என்பது மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவின் ஒற்றுமை, ஒருமைப்பாடு மற்றும் நலன்களை பலவீனப்படுத்த காங்கிரஸ் கட்சி 75 ஆண்டுகளாக உழைத்து வருகிறது. – பிரதமர் மோடி
பா.ஜ.க.- ராமதாஸ் கூடா உறவு – காங்கிரஸ் தாக்கு

பாஜகவுடன் கூடா உறவு வைத்துள்ளார் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனரும், தலைவரும், தேசத்தை சீரழித்த பாஜகவுக்கு ஆதரவாக இருந்தது அதிமுக கட்சி, படப்பை அருகே இந்தியா கூட்டணி வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் காங்கிரஸ் மாநில தலைவர் கு.செல்வபெருந்தகை பேச்சு:- காஞ்சிபுரம் வடக்கு மாவட்டம் இந்தியா கூட்டணி கட்சிகளின் செயல்வீரர்கள் கூட்டம் படப்பை அடுத்த கரசங்காலில் நடைபெற்றது. இதில்இந்தியா கூட்டணி ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு, காஞ்சிபுரம் நாடாளுமன்ற திமுக வேட்பாளர் க.செல்வம் ஆகியோர்களை அமைச்சர் தா.மோ.அன்பரசன்ன் […]
திருச்சி, தேனி தொகுதிகளுக்குப் பதிலாக,கடலூர், தென்காசி தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிட வாய்ப்பு

திமுக கூட்டணியில் காங்கிரஸ் 9 + 1 தொகுதிகளில் போட்டியிடுகிறது.தற்போது சிட்டிங் எம்பிக்கள் இருக்கும் 8 தொகுதிகளில் 7 இல் மீண்டும் காங்கிரஸ் கட்சியே போட்டியிடுகிறது.
முதற்கட்ட காங். வேட்பாளர் பட்டியல் வெளியீடு

முதற்கட்டமாக 39 வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ் கட்சி. சத்தீஸ்கர் – 6, கர்நாடகா -8, கேரளா -15, மேகாலயா-2, தெலங்கானா-5, நாகாலாந்து, சிக்கிம், திரிபுரா மாநிலங்களில் தலா ஒரு வேட்பாளர்கள் அறிவிப்பு. கடந்த தேர்தலில் போட்டியிட்டு வென்ற வயநாடு தொகுதியில் ராகுல்காந்தி மீண்டும் போட்டி.
மோடியின் அடுத்த அட்டாக் திமுகவை இனி எங்கு தேடினாலும் கிடைக்காது திமுகவும், காங்கிரஸும் நாட்டில் இருந்து அகற்றப்பட வேண்டிய கட்சிகள் திமுக,காங்கிரஸ் என்ன செய்யப்போகிறது

திமுகவை இனி எங்கு தேடினாலும் கிடைக்காது. தங்கள் வாரிசுகளுக்காக எதிர்க்கட்சிகள் இருக்கின்றன. நான் உங்களுக்காக இருக்கிறேன்.”திமுகவும், காங்கிரஸும் நாட்டில் இருந்து அகற்றப்பட வேண்டிய கட்சிகள்.என்று நெல்லை பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.நெல்லை பாளையங்கோட்டையில் இன்று (பிப்.28) பிரதமர் மோடி தலைமையில் பாஜக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பிரதமர் மோடி தமிழகத்தில் ஆளும் கட்சியான திமுக மீது விமர்சனங்களை முன்வைத்தார். பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகையில், “திருநெல்வேலி அல்வா போல நெல்லை மக்களும் இனிமையானவர்கள். இனிமையாகவும், இளகிய மனதுடனும் இருக்கிறவர்கள். நெல்லையப்பர், […]
மகாராஷ்டிரா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு மேலும் ஒரு பின்னடைவு ஏற்பட்டுள்ளது
அம்மாநில காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர்களில் ஒருவரும் முன்னாள் அமைச்சரும் ஆன பசவராஜ் பாட்டில் இன்று காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகினார். நாளை அவர் பாரதிய ஜனதா கட்சியில் இணைய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த வாரம் காங்கிரஸ் கட்சியிலிருந்து முன்னாள் முதலமைச்சர் அசோக் சவான் விலகி பாஜகவில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.
புதுடெல்லியில் மத்திய இணை அமைச்சர் எல் முருகன் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார் காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதாரணி
டெல்லி காங்கிரஸ் 3ஆம் ஆத்மி 4 இடத்தில் போட்டியிடும்..
பாஜகவில் இன்று இணைய உள்ளதாக வெளியான தகவலுக்கு காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதாரணி மறுப்பு..

கன்னியாகுமரி: பாஜகவில் இன்று இணைய உள்ளதாக வெளியான தகவலுக்கு காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதாரணி மறுப்பு தெரிவித்துள்ளார். பாஜகவில் யாருடனும் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்றும் இன்று இணைவதற்கான வாய்ப்புகள் இல்லை எனவும் அவர் தெரிவித்தார்