543க்குதான் 99 பெற்றுளீர்கள் 100க்கு அல்ல – காங்கிரஸ் கட்சியை தாக்கி பேசிய பிரதமர் மோடி

பாஜகவை தோற்கடித்துவிட்டதாக எதிர்க்கட்சிகள் நினைத்துக்கொள்கின்றன. தொடர்ந்து மூன்றாவது முறையாக காங்கிரஸ் 100க்கும் குறைவான இடங்களையே பெற்றுள்ளது. 1984க்கு பிறகு காங்கிரஸ் ஒருமுறைகூட 250க்கும் அதிகமான தொகுதிகளில் வெல்லவில்லை. தனது தோல்வியை காங்கிரஸ் கட்சி சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும். நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரசுக்கு 99 இடங்கள் மட்டுமே கிடைத்துள்ளன; 100க்கு 99 பெறவில்லை; 543க்கே 99 பெற்றுள்ளது. தோல்வி பெறுவதில் காங்கிரஸ் உலக சாதனை படைத்து வருகிறது. பாஜக-காங்கிரஸ் நேருக்கு நேர் போட்டியிட்ட தொகுதிகளில் காங்கிரஸின் […]
2029 லும் காங்கிரஸ் கட்சிக்கு எதிர் கட்சி வரிசை தான்.!

காங்கிரசுக்கு இனி எப்போதுமே எதிர் கட்சி வரிசைதான்.! காங்கிரஸ் கட்சி விவாதிக்க முடியாத போது எல்லாம் கூச்சலிட்டு கொண்டே இருப்பார்கள்! 3 தேர்தல் கடந்த போதும்…காங்கிரஸ் கட்சி 100 இடங்களை கூட பிடிக்க முடியவில்லை.! தோற்பதில் உலக சாதனை படைத்துள்ளது காங்கிரஸ்.! பிரதமர் மோடி.!
காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியுடன் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா சந்திப்பு!

பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க டெல்லி வந்த வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி & பிரியங்கா காந்தி ஆகியோரை சந்தித்துப் பேசினார்
2014ல் பாஜக : 282 காங் : 44பிரதான எதிர்க்கட்சி கிடையாது
2019ல் பாஜக : 303 காங் : 55பிரதான எதிர்கட்சி கிடையாது. கடந்த 10 வருடங்களில் அங்கீகரிக்கப்பட்ட எதிர்க்கட்சி அந்தஸ்திற்கு தேவையான இடங்களில் எந்த கட்சியும் வெற்றி பெறவில்லை. எதிர்க்கட்சித் தலைவரே இல்லாமல் பாராளுமன்றத்தில் இஷ்டம் போல் ஆடியது. எந்த அளவுக்கு என்றால் சுதந்திர இந்தியாவில் 144 MPகளை தகுதி நீக்கம் செய்து எந்த எதிர்ப்பும் இல்லாமல் சட்டங்களை நிறைவேற்றியது. துணை சபாநாயகர் இல்லாமல் 5 ஆண்டுகள் கடத்தியது என்று தன் விருப்பத்திற்கு ஆட்சி செய்தார்கள் ஆனால் […]
எதிர்க்கட்சி தலைவராகிறார் ராகுல் காந்தி? கூடும் செயற்குழு!

நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில், ‛ இண்டியா ‘ கூட்டணி 234 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு தனித்து 99 இடங்கள் கிடைத்துள்ளது. ஆட்சியில் அமர்வதற்கு தேவையான இடங்கள் கிடைக்காததால், எதிர்க்கட்சி வரிசையில் அமர முடிவு செய்துள்ளது. தொடர்ந்து, லோக்சபா எதிர்க்கட்சி தலைவராக யார் பதவியேற்பார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்தலையில், எதிர்க்கட்சி தலைவராக ராகுலை நியமிக்க வேண்டும் என காங்கிரசில் கோரிக்கை எழுந்துள்ளது. பல எம்.பி.,க்கள் இது குறித்து வெளிப்படையாக பேசி உள்ளனர். காங்கிரஸ் […]
காங்கிரஸ் எம்பிக்களின் எண்ணிக்கை 100-ஐ தொட்டது!

மகாராஷ்டிரா சங்கிலி தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்ட விஷால் பாட்டில் காங்கிரஸில் இணைந்தார்
எதிர்கட்சி வரிசையில் அமர காங்கிரஸ் தலைமையிலான இண்டியா கூட்டணி முடிவு

ஆட்சி அமைக்க முயலமாட்டோம் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே டெல்லியில் நடைபெற்ற கூட்டத்திற்கு பின் கூறினார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் பா.கார்மேகம் பட திறப்பு விழா.!

குரோம்பேட்டை நெமிலிச்சேரியில் காங்கிரசின் மூத்த தலைவர் பா. கார்மேகம் கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல் நல குறைவு காரணமாக காலமானார்.அவருக்கு வயது 85. அவரது திரு உருவ பட திறப்பு விழா குரோம்பேட்டைநெமிலிச்சேரியில் உள்ள முத்துசாமி நகர் மெயின்ரோட்டில் உள்ள முன்னாள் பல்லாவரம் நகரசபை உறுப்பினர் அவரது மூத்த மகன் G. செல்வகுமார் இல்லத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் இ. கருணாநிதி.செங்கல்பட்டு வடக்கு மாவட்ட காங்கிரஸ் முன்னாள் தலைவர் வி. ஆர் .சிவராமன்.தாம்பரம் […]
அரசியல் சாசனத்தை காப்பதற்காக நின்ற கூட்டணி கட்சித்தலைவர்களுக்கு நன்றி: ராகுல் காந்தி

காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி தனது எக்ஸ் தளத்தில் கூறி இருப்பதாவது; “அரசியல் சாசனத்தை காப்பதற்காக நின்ற கூட்டணி கட்சித்தலைவர்களுக்கு நன்றி. நாட்டின் மகத்தான மக்களையும் வணங்குகிறேன். இந்தியா கூட்டணி அமையும் என அஞ்சா நெஞ்சமுள்ள காங்கிரஸ் தொண்டர்களுக்கு தெரிவிக்கிறேன். தவறாக பிரதமர் திசை திருப்ப முயன்றும் பொது நலன் சார்ந்த பிரச்சினையில் போராடி வென்றுள்ளோம். விவசாயிகள், தொழிலாளர்கள், இளைஞர்கள், பெண்கள் மற்றும் பட்டியலின மக்களின் குரலை உயர்த்தியுள்ளோம்.” இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.
தோ்தலுக்கு பிறகு மோடியை அமலாக்கத் துறை விசாரிக்கும்: ராகுல் காந்தி

ஜூன் 4-ஆம் தேதிக்குப் பிறகு (வாக்கு எண்ணிக்கை நாள்) பிரதமராக இருந்த மோடியிடம் அமலாக்கத் துறை ஊழல் தொடா்பாக விசாரணை நடத்தும் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்தாா்.