காங்கிரஸ் கட்சி தவெக.,வுடன் கூட்டணி அமைக்கும் திட்டம்!

சக்சஸ் எனவும் தகவல்? திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் கட்சி வெளியேற இருப்பதாகவும் தவெக.,வுடன் கூட்டணி அமைக்க முடிவு செய்து இருப்பதாகவும் கதர் சட்டைகள் மூலம் தகவல் பரவி வருகிறது. விரைவில் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்காவை சந்திக்க விஜய் திட்டமிட்ட இருப்பதாக கூறப்படுகிறது

தமிழ்நாடு காங்கிரஸில் உச்சக்கட்ட குழப்பம் – உடைகிறதா திமுக–காங்கிரஸ் கூட்டணி?

ஈபிஎஸ் விமர்சனங்கள் தீவிரமடைந்து, 2026 தேர்தலுக்கு முன் அரசியல் புயல் கிளப்புகின்றன! தமிழக காங்கிரஸில் உச்சபட்ச குழப்பம் ! சச்சரவுகள் வெளிப்படையாக அதிகரித்துள்ளன. அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தொடர்ச்சியாக முன்வைக்கும் விமர்சனங்கள், TNCC தலைவர் செல்வப் பெருந்தகையின் தலைமையை சந்தேகத்திற்கு உட்படுத்தியுள்ளன.ஏற்கனவே தூய்மை பணியாளர் திட்டங்களை கோடிக்கணக்கில் கபலிகரம் செய்து வழக்கு நீதிமன்றங்களில் சந்தித்து வரும் செல்வப் பெருந்தகை தற்போது ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிபிஐ விசாரணைக்கு ஆளாக போகிறாரா? கைது செய்யப் போகிறதா […]

மயங்கிய கார்கே.. தாங்கிப் பிடித்த நிர்வாகிகள்!

ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பரப்புரையில் பேசிக் கொண்டிருக்கும்போது உடல்நலக்குறைவு ஏற்பட்டு லேசாக மயங்கிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே. திடீரென அவர் பேச்சை நிறுத்தி நிற்கவே சிரமப்படுவதை கவனித்த நிர்வாகிகள், உடனடியாக அவரை தாங்கிப்பிடித்து தண்ணீர் குடிக்க வைத்தனர். உடல்நிலை சரியில்லாத நிலையிலும், சிறிது நேரம் உரையாற்றிவிட்டு அமர்ந்தார் கார்கே.

புதுமணத் தம்பதிகளான காங்கிரஸ் முன்னாள் எம்.பி திருநாவுக்கரசரின் மகன் சாய் விஷ்ணு மற்றும் நடிகை மேகா ஆகாஷ் ஆகிய இருவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து, அவரது ஆசி பெற்றுள்ளனர்

மத்திய அமைச்சர் எல்.முருகனை திடீரென சந்தித்த காங்கிரஸ் எம்.பி.,

கட்சி நிகழ்ச்சிக்காக நாகர்கோவில் சென்ற எல்.முருகனை சந்தித்த எம்.பி., ராபர்ட் புரூஸ் சாப்பிடுமாறு அழைப்பு விடுத்த மத்திய அமைச்சர் எல்.முருகன் சாப்பிட்டு வந்ததாக கூறிய காங்கிரஸ் எம்.பி., ராபர்ட் புரூஸ் மத்திய அமைச்சரின் அறைக்குள் சென்று நலம் விசாரித்து திரும்பிய ராபர்ட் புரூஸ் காங்கிரஸ் எம்.பி., திடீரென பாஜக அமைச்சரை சந்திக்க வந்ததால் தொண்டர்கள் குழப்பம் நமது ஊருக்கு வந்த மத்திய அமைச்சரை சந்திக்க வந்ததாக கூறி சென்ற காங்கிரஸ் எம்.பி.

காமராஜுடன் மோடியை ஒப்பிட்ட தமிழிசை – காங்கிரஸ் எதிர்ப்பு

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழிசை சவுந்தரராஜன் மோடி ஆட்சி தான் காமராஜர் ஆட்சி என பேசி இருக்கிறார். மக்களை மதரீதியாக பிளவுபடுத்துகிற வெறுப்பு அரசியலையும், அதிகாரங்களை குவித்து வைத்துக்கொண்டு, சர்வாதிகார பாசிச முறையில் மோடியின் ஆட்சி செயல்பட்டு வருகிறது. அந்த ஆட்சியை காமராஜர் ஆட்சியோடு ஒப்பிடுவது தமிழிசை சவுந்தரராஜனின் அறியாமையை காட்டுகிறத என குறிப்பிட்டுள்ளார்.

தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை மாற்றப்படுவாரா? டெல்லி மேலிடத்தில் மூத்த நிர்வாகிகளும் புகார்

தன் மீது தவறான தகவலை பரப்பியதாக பகுஜன் சமாஜ் நிர்வாகி மீது ரூ.100 கோடி கேட்டு மாநில காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார். கட்சியின் மூத்த தலைவர்கள் சில எம்.பிக்கள் டெல்லி தலைமையிடம் தொடர்பு கொண்டு பேசி இருக்கிறார்கள்.

காங்கிரஸ் நாடாளுமன்ற குழு பொறுப்பாளர்கள் நியமனம்

காங்கிரஸ் நாடாளுமன்ற குழுவின் அலுவலக பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். கன்னியாகுமரி எம்.பி., விஜய் வசந்த் பொருளாளராகவும், செயலாளர்களாக எம்.பி.,க்கள் ரஞ்சீத் ரஞ்சன் (மாநிலங்களவை), எம்.கே.ராகவன் (மக்களவை), அமர் சிங் (மக்களவை) ஆகியோரை நியமித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் வேணுகோபால் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதற்காக எம்.பி., விஜய் வசந்த், காங்கிரஸ் தலைவர் கார்கே உள்ளிட்ட தலைவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

மஹிந்திரா குழுமம், ICICI, Dr Reddy’s உள்ளிட்ட 6 நிறுவனங்களிடம் இருந்து SEBI தலைவர் மாதபி புச் தனது Agora Advisory நிறுவனம் மூலம் கோடிகளில் வருமானம் ஈட்டியதாக காங்கிரஸ் குற்றச்சாட்டு

2016-17 மற்றும் 2023-24 இடைப்பட்ட காலத்தில் அந்த 6 நிறுவனங்களிடம் இருந்து மாதபி புச் ரூ.2.95 கோடி வருவாய் ஈட்டியதாக புதிய தரவுகளை வெளியிட்டு காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. SEBI அமைப்பிடம் மஹிந்திரா குழுமம் சில விசாரணைகளை எதிர்கொண்டு வந்த போது, அக்குழுமத்தின் ஆலோசகராக பணியாற்றிய மாதபியின் கணவர் தவல் புச் தனிநபராக ரூ.4.78 கோடி வருமானம் ஈட்டியதாகவும் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

நிதி ஆயோக் கூட்டம் – காங்கிரஸ் புறக்கணிப்பு

டெல்லியில் ஜூலை 27ல் நடைபெறவுள்ள நிதி ஆயோக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி ஆளும் மாநில முதல்வர்கள் புறக்கணிப்பு ஏற்கனவே, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் புறக்கணிப்பதாக அறிவித்த நிலையில் தற்போது காங்கிரஸ் கட்சி அறிவிப்பு