தாம்பரத்தில் 500 மாணவர் பங்கேற்ற செஸ் போட்டி

தாம்பரத்தில் 500 க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற மாநில அளவிலான சதுரங்க போட்டிகள் நடைபெற்றது. தாம்பரத்தில் ஜி.எம் செஸ் அகாடமி மற்றும் செங்கல்பட்டு மாவட்ட சதுரங்க கழக துணை செயலாளர் மாசிலாமணி ஏற்பாட்டில் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கான சதுரங்கபோட்டிகள் நடைபெற்றது. இதில் செங்கல்பட்டு,காஞ்சிபுரம்,சென்னை,திருவள்ளூர்,வேலூர், திருச்சி,திருநெல்வேலி என தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களில் இருந்து 8வயது 10வயது,13வயது,மற்றும்25 வயதுடைய சுமார் 500 கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளி கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டு தங்கள் […]

மாநில கட்சி அந்தஸ்தை இழந்தது பாமக

மக்களவைத் தேர்தலில் பீஜேபீ கூட்டணியில் 10 தொகுதிகளில் போட்டியிட்ட பாமக மீண்டும் மாநில கட்சி என்ற அங்கீகாரத்தை இழந்தது; நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் 4.23% வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளதால் மாநில கட்சி என்ற அங்கீகாரத்தை இழந்தது பாமக

அமேதி தொகுதியில் போட்டியிட ராகுல் காந்திக்கு அதீத பயம் ஏற்பட்டதால் தொகுதி மாறியுள்ளார் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்

வயநாடு தொகுதியில் தோற்றுவிடுவோம் என தெரிந்ததால் புதிய தொகுதியில் போட்டியிடுகிறார். சோனியா காந்தி தேர்தலில் போட்டியிட பயந்து மாநிலங்களவை எம்.பி. ஆகியுள்ளார் என்று பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

விவிபேட் வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் அனைத்து மனுக்களும் தள்ளுபடி!

உச்ச நீதிமன்ற நீதிபதிகள், சந்தேகத்தின் அடிப்படையில் தோ்தலைக் கட்டுப்படுத்தவோ அல்லது தோ்தல் ஆணையத்துக்கு உத்தரவு பிறப்பிக்கவோ முடியாது. மற்றொரு அரசியல் சாசன அமைப்பைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் உச்சநீதிமன்றத்துக்கு இல்லை என்று தெரிவித்தனர். உச்சநீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, தீபாங்கா் தத்தா ஆகியோா் அடங்கிய அமர்வு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகளுடன் வாக்கு ஒப்புகைச் சீட்டுகளை (விவிபேட்) முழுமையாக எண்ணி ஒப்பிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்துள்ளது.

பெரும்பாக்கத்தில் மாநில சதுரங்க போட்டி

பெரும்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள தனியார் பள்ளியில் 8-வயதிலிருந்து 16-வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கான மாநில அளவிலான சதுரங்க சாம்பியன்ஷிப் போட்டி நடைப்பெற்றது. இந்த சதுரங்க போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த 500 க்கும் மேற்பட்ட சிறுவர்கள், சிறுமிகள் தங்கள் திறமையை வெளிப்படுத்தினர். போட்டியின் தொடக்கத்தில் மாணவர்கள் 8 வயதிற்கு கீழ், 10 வயதிற்கு கீழ், 12 வயதிற்கு கீழ், 16 வயதிற்கு கீழ் என 4 குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு குழுவும் தலா ஆறு சுற்றுகள் விளையாடினர். இந்தியாவின் 80-வது கிராண்ட் […]

ஜல்லிக்கட்டு- மதுரையில் முன்பதிவு தொடக்கம்

மதுரை மாவட்டத்தில் நடைபெறக்கூடிய ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கானமுன்பதிவு தொடங்கியது ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்க விரும்பும் காளைகள், மாடுபிடி வீரர்கள் நாளை பிற்பகல் 12 மணி வரை முன்பதிவு செய்யலாம் madurai.nic.in என்ற இணையத்தளத்தில் முன்பதிவு செய்ய வேண்டும் காளை உரிமையாளருக்கும், மாடுபிடி வீரருக்கென தனித்தனியாக உள்ள பிரிவுகளில் முன்பதிவு செய்ய அறிவுறுத்தல் முறைகேடுகளை தடுக்க இணைப்புடன் டோக்கன் வழங்கப்படும்.

ஸ்ரீ ஹயகிரீவர் அகாடமி சார்பில் மாநில அளவிலான சதுரங்க போட்டி சிட்லபாக்கம் தனியார் பள்ளியில் நடைபெற்றது. இதில் சுமார் 500 மாணவ மாணவியர் கலந்து கொண்டனர். இதில் வெற்றி பெற்றவர்களுக்கு மாமன்ற உறுப்பினர் சி.ஜெகன், பா.பிரதாப் Ex.Mc, ஆகியோர் கோப்பையை வழங்கினர். அருகில் பவித்திரா ஜெகன்

பல்லாவரம் பள்ளியில் சாலை பாதுகாப்பு ஓவியப்போட்டி

சாலை பாதுகாப்பு குறித்து மாணவர்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக காவல் துறையினர் சார்பில் மாநில அளவிலான ஓவியம் மற்றும் கட்டுரை போட்டிகள் நடைபெறுகிறது. இதன் ஒரு பகுதியாக தமிழ்நாடு போக்குவரத்து காவல் காப்பாளர் சார்பில் பல்லாவரம் தெரேசா பள்ளியில் நடைபெற்ற ஓவிய போட்டியில் 25 பள்ளிகளை சேர்ந்த 134 மாணவ மாணவியர்கள் பங்கேற்றனர். இதில் தாம்பரம் போக்குவரத்து துணை ஆணையாளர் குமார் மாணவர்களின் ஓவிய போட்டியை துவக்கிவைத்தார். தமிழ்நாடு போக்குவரத்து காவல் முதன்மை காப்பாளர் கருப்பையா, […]

குரோம்பேட்டை நேரு நகர் எஸ் சி எஸ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் 39 வது ஆண்டு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது

இதில் சிறப்பு விருந்தினராக வருமான வரித்துறை கூடுதல் கமிஷனர் டாக்டர் வி.ஜஸ்டின் ஐ ஆர் எஸ் கலந்து கொண்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார். பள்ளி தாளாளர் கிருஷ் சந்தானம் உடன் உள்ளார்.