காங்கிரஸ் நாடாளுமன்ற குழு பொறுப்பாளர்கள் நியமனம்

காங்கிரஸ் நாடாளுமன்ற குழுவின் அலுவலக பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். கன்னியாகுமரி எம்.பி., விஜய் வசந்த் பொருளாளராகவும், செயலாளர்களாக எம்.பி.,க்கள் ரஞ்சீத் ரஞ்சன் (மாநிலங்களவை), எம்.கே.ராகவன் (மக்களவை), அமர் சிங் (மக்களவை) ஆகியோரை நியமித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் வேணுகோபால் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதற்காக எம்.பி., விஜய் வசந்த், காங்கிரஸ் தலைவர் கார்கே உள்ளிட்ட தலைவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
ஜூன் 12ம் தேதி தமிழக சட்டப்பேரவை அலுவல் ஆய்வுக்குழு கூட்டம்

சபாநாயகர் அப்பாவு தலைமையில் நடைபெற உள்ளது. துறை ரீதியான மானிய கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெறும் நாட்கள் குறித்து முடிவு செய்யப்படும். ஜூன் 24ம் தேதி தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்க உள்ளது.
I.N.D.I.A கூட்டணியின் ஒருங்கிணைப்புக் குழுவின் முதல் கூட்டம் வரும் செப்.13ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு;

டெல்லியில் உள்ள சரத்பவார் இல்லத்தில் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நடைபெறும் என அறிவிப்பு; மக்களவை தேர்தலுக்கான தொகுதி பங்கீடு உள்ளிட்ட முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என தகவல்.
காங்கிரஸ் தேர்தல் கமிட்டி குழு அமைப்பு!

16 பேர் அடங்கிய தேர்தல் கமிட்டி குழு அமைத்துள்ளது காங்கிரஸ் கட்சி காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் குழு. சோனியா காந்தி, ராகுல்காந்தி, அம்பிகா சோனி உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர். அதிரஞ்சன் சவுத்ரி, கே.சி.வேணுகோபால் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.
INDIA கூட்டணி ஒருங்கிணைப்புக் குழு!

◼️ கே.சி.வேணுகோபால், காங்கிரஸ்◼️ சரத் பவார், என்.சி.பி◼️ மு.க.ஸ்டாலின், தி.மு.க◼️ அபிஷேக் பானர்ஜி, டி.எம்.சி◼️ சஞ்சய் ராவத், சிவசேனா◼️ தேஜஸ்வி யாதவ், ஆர்.ஜே.டி◼️ லல்லன் சிங், ஜே.டி.யு◼️ ராகவ் சத்தா, ஆம் ஆத்மி◼️ ஹேமந்த் சோரன், ஜே.எம்.எம்◼️ ஜாதவ் அலிகான், எஸ்.பி◼️ டி.ராஜா, சி.பி.ஐ◼️ உமர் அப்துல்லா, என்.சி◼️ மெகபூபா முப்தி, பி.டி.பி