தாம்பரம்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ திரு.சீ.பாலச்சந்தர்‌, இஆப,

அவர்கள்‌ தலைமையில்‌ வடகிழக்கு பருவமழை தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்‌ குறித்து அனைத்து சேவைத்துறை அலுவலர்கள்‌ உடனான ஆலோசனைக்‌ கூட்டம்‌ மாநகராட்சி கூட்டரங்கில்‌ நடைபெற்றது.

புதிய கமிஷனர் பதவியேற்பு

புதிதாக பொறுப்பேற்ற மாநகராட்சி கமிஷனர் பாலசந்தருக்கு மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி துணை மேயர் கோ. காமராஜ் மற்றும் அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

தாம்பரம் புதிய போலீஸ் கமிஷனர் பதவியேற்பு

தாம்பரம் மாநகராட்சி போலீஸ் கமிஷனர் ஆக அமல்ராஜ் இருந்து வந்தார் அவர் திடீரென மாற்றப்பட்டார் அவருக்கு பதில் அபின் தினேஷ் மோதக் நியமிக்கப்பட்டார் அவர் இன்று முறைப்படி பதவி ஏற்றார் .அவருக்கு போலீஸ் அதிகாரிகள் பூச்செண்டு கொடுத்து வரவேற்றனர்.ஏற்கனவே ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பிறகு தமிழ்நாடு முழுவதும் ரவுடிகள் பட்டியல் கணக்கு எடுக்கப்பட்டு வருகிறது. அதைப் போல தாம்பரம் மாநகர பகுதிகளிலும் ரௌடிகளை கட்டுப்படுத்த புதிய போலீஸ் கமிஷனர் ஆலோசனைகளை மேற்கொண்டார்.

குற்றங்களை தடுக்க மக்கள் ஒத்துழைப்பு அவசியம் தாம்பரம் போலீஸ் கமிஷனர்

குற்றங்களை தடுக்க பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம் குரோம்பேட்டை காவல் நிலையத்தில் இருந்து சிசிடிவி கேமராக்களை இயக்கி வைத்த பின்னர் தாம்பரம் மாநகர காவல் ஆணையாளர் அமல்ராஜ் பேட்டியளித்தார். சென்னை அடுத்த குரோம்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில், பொது இடங்களில் நடைபெறும் குற்றங்களை கண்காணிப்பதற்காக தனியார் பங்களிப்புடன் ஜி.எஸ்.டி சாலையில் அமைக்கபட்டுள்ள 75 சிசிடிவி கேமராக்களை குரோம்பேட்டை காவல் நிலையத்திலிருந்து தாம்பரம் மாநகர காவல் ஆணையாளர் அமல்ராஜ் இயக்கி வைத்தார். பின்னர் பேட்டியளித்த ஆணையர் அமல்ராஜ்:- குற்றங்களை […]

தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் நீரினை சுத்திகரிப்பு செய்வது குறித்து கலந்தாய்வு

தாம்பரம் மாநகராட்சி எல்லைகுட்பட்ட தாம்பரம் சானிடோரியம் பகுதியில் அமைந்துள்ள வர்த்தகம் மற்றும் தொழில் அமைச்சகம், வர்த்தகத் துறை கட்டுப்பாட்டில் உள்ள MEPZ Special Economic Zone Devolopment Commissioner தாம்பரம் மாநகராட்சியின் துணை மேயர் கோ.காமராஜ் நேரில் சந்தித்து மேற்படி தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் நீரினை சுத்திகரிப்பு செய்வது குறித்து கலந்தாய்வு ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டார்.