ஜி20 மாநாடு – டெல்லியில் விடுமுறை

டெல்லியில் ஜி20 மாநாட்டை முன்னிட்டு செப். 8 முதல் செப். 10 வரை விடுமுறை அறிவிப்பு. அனைத்து பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிப்பு.
பி.இ., பி.டெக் படிப்புக்கான 3ம் சுற்று கலந்தாய்வு முடிந்த நிலையில், 50,000 இடங்கள் காலி

11 பொறியியல் கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட சேராத நிலையில்; 263 கல்லூரிகளில் 50 சதவீதத்திற்கும் குறைவான மாணவர்களே சேர்ந்துள்ளனர். 61 கல்லூரியில் 10%க்கும் குறைவாகவும், 37 கல்லூரிகளில் ஒற்றை இலக்கத்திலும் மாணவர் சேர்க்கை.
செம்பாக்கத்தில் கண் தானம் குறித்து பள்ளி கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி

தாம்பரம் அடுத்த செம்பாக்கத்தில் பம்மல் சங்கர கண் மருத்துவமனை சார்பில் கண் தானம் குறித்து நடத்திய விழிப்புணர்வு பேரணியை தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா துவக்கிவைத்து பேரணியில் கலந்துகொண்டார். இதில் 200 க்கும் மேற்பட்ட பள்ளி கல்லூரி மாணவர்கள் கண் தானம் குறித்து விளம்பர பதாகை கலை கைகளில் ஏந்தியும், விழிப்புணர்வு கோஷங்களை எழுப்பியவாறு செம்பாக்கம் முதல் சேலையூர் ஸ்ரீ சங்கர பள்ளி வரை 3 கி.மீ தூரம் பேரணியாக சென்றனர். இந்த நிகழ்ச்சியில் அரிமா சங்க […]
குரோம்பேட்டையில் பள்ளி கல்லூரிகள் அருகே 5 கிலோ குட்கா பறிமுதல்

தாம்பரம் காவல் ஆணைய சரக்கத்திற்குட்பட்ட பகுதியில் உள்ள பள்ளி கல்லூரிகள் அருகில் குட்கா பான் மசாலா போன்ற போதை புகையிலை பொருட்கள் விற்கப்படுவதால் பள்ளி கல்லூரி மாணவர்கள் அதிக அளவில் போதை புகையிலை பொருட்களுக்கு அடிமை ஆவதை தடுக்கும் விதமாக தாம்பரம் காவல் ஆணையாளர் அமல்ராஜ் உத்தரவின் பேரில் துணை ஆணையாளர் பவன்குமார் ரெட்டியின் மேற்பார்வையில் உதவி ஆணையாளர் ஸ்ரீனிவாசன் மற்றும் ஆய்வாளர் ராஜசேகரன் தலைமையில் காவல் துறையினர் குரோம்பேட்டை ஆண்கள் அரசினர் மேல்நிலைப்பள்ளி சுற்றுவட்டார பகுதிகளில் […]
கோவை பாரதியார் பல்கலை. பட்டமளிப்பு விழாவிற்கு வருகை தரும் ஆளுநருக்கு கருப்புக் கொடி காட்டி போராட்டம்

கோவை பாரதியார் பல்கலை. பட்டமளிப்பு விழாவிற்கு வருகை தரும் ஆளுநருக்கு கருப்புக் கொடி காட்டி போராட்டம் நடைபெற்றது. மருதமலை சாலையில் அனைத்து முற்போக்கு அமைப்புகளின் சார்பில் கருப்புக் கொடி போராட்டம் நடைபெற்றது. ஆளுநருக்கு எதிராக கருப்புக் கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.
கோயம்பேடு கல்லூரி கலைஞர் நூற்றாண்டு விழா மாணவ, மாணவியருக்கான பரிசளிப்பு விழா

மு.க.ஸ்டாலின் இன்று (23.8.2023) சென்னை, கோயம்பேடு, தூய தாமஸ் கல்லூரி அரங்கத்தில் தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் சார்பில் நடைபெற்ற முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா மற்றும் அனைத்துக் கல்லூரி மாணவ, மாணவியருக்கான பேச்சுப் போட்டி பரிசளிப்பு விழாவில், மாநில அளவில் வெற்றி பெற்ற 6 மாணவ, மாணவியர்களுக்கு பரிசுத்தொகைக்கான காசோலைகள், பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி, பாராட்டினார். இந்த நிகழ்ச்சியில், உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், […]
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இரு தரப்பு மாணவர்களுக்கு இடையே மோதல்;
இந்த மோதலின் காரணமாக 12க்கும் மேற்பட்ட மாணவர்கள் மீது 4 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு, 5 மாணவர்கள் கைது; மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு காவல்நிலைய பிணையில் விடுவித்தனர்.
கல்லூரியில் மோதல் சம்பவம்: 18 மாணவர்களை கூண்டோடு நீக்கி நிர்வாகம் அதிரடி நடவடிக்கை

சென்னை தனியார் கல்லூரியில் பட்டாசு வீசி மாணவர்கள் மோதலில் ஈடுபட்ட சம்பவத்தில் 18 மாணவர்களை நீக்கி கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.சென்னை, சென்னை கிண்டி-வேளச்சேரி சாலையில் உள்ள தனியார் (குருநானக்) கல்லூரியில் மாணவர்கள் இரு பிரிவினரிடையே நீண்ட காலமாக மோதல் போக்கு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், இன்று மீண்டும் அந்த இருபிரிவு மாணவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதில் இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கிக் கொண்டதாகவும், அந்த மாணவர்களில் ஒருவர் பட்டாசுகளை […]
சென்னை, குரு நானக் கல்லூரியில் மாணவர்களிடையே ஏற்பட்ட தகராறில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

எதிர்தரப்பு மாணவர்களை மிரட்ட தீபாவளி பட்டாசை, நாட்டு வெடிகுண்டு போல் தயார் செய்து வீசியது போலீஸார் விசாரணையில் தெரிய வந்தது. சென்னை வேளச்சேரி பகுதியில் உள்ள குருநானக் கல்லூரி வளாகத்தில் இரு தரப்பு மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டதாக இன்று காலை கிண்டி போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் 30க்கும் மேற்பட்ட போலீஸார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மோதலில் ஈடுபட்ட 10க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்களை பிடித்து […]
தாம்பரம் மாநகராட்சி பகுதியில் கஞ்சா விற்றதாக 182 பேர் கைது

பல்லாவரம் தனியார் கல்லூரியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்ட போதை விழிப்புணர்வு நிகழ்ச்சி தாம்பரம் காவல்துறை சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களிடையே உரையாற்றினார். தாம்பரம் ஆணையரக காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மட்டும் 18 ல் இருந்து 20 வயதிற்கு உட்பட்ட இளைஞர்கள் கடந்த இரண்டு ஆண்டுகளில் 182 நபர்கள் போதைப் பொருள்கள் விற்பனை செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மாணவர்களை […]