சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில், மறைந்த முன்னாள் பிரதமர் வி.பி.சிங் சிலை திறப்பு விழா

சிலையை முதல்வர் ஸ்டாலின், உ.பி.,முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் திறந்து வைத்தனர். வி.பி.சிங் மனைவி சீத்தாகுமாரி, மகன்கள் அஜய்சிங், அபய் சிங் உள்ளிட்டோர் பங்கேற்பு மறைந்த முன்னாள் பிரதமர் வி.பி.சிங்கிற்கு மாநிலக் கல்லூரியில் ரூ.52 லட்சம் மதிப்பில் சிலை வி.பி.சிங் சிலை திறப்பு விழாவில் அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்பு
கொச்சியில் உள்ள அறிவியல் தொழில்நுட்ப பல்கலையில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியின்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 4 பேர் பலி

கொச்சி: பல்கலைக்கழக வளாகத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி கொச்சி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நான்கு பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழந்தனர். பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வரும் டெக் ஃபெஸ்ட்டின் ஒரு பகுதியாக இசை நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்த ஆடிட்டோரியத்தில் இந்த நெரிசல் ஏற்பட்டது. கொச்சியில் உள்ள குசாட் பல்கலைக்கழகத்திற்கு வந்த காவல்துறை அதிகாரிகள் கூட்ட நெரிசலில் சிக்கி 4 மாணவர்கள் உயிரிழந்தனர் மற்றும் பலர் காயமடைந்தனர். களமச்சேரி மருத்துவக் கல்லூரியில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் மேலும் […]
திருவண்ணாமலையில் அமைச்சர் எ.வ.வேலுவுக்கு சொந்தமான, அருணை மருத்துவ கல்லூரியில் மீண்டும் வருமான வரித்துறை சோதனை

ஏற்கனவே சோதனை நடந்த போது சில அறைகள் சீல் வைக்கப்பட்டன
கோயம்புத்தூர் இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா

கோயம்புத்தூர் இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் (20.11.2023) நடைபெற்ற முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழாவில் “இதழாளர் கலைஞர்” சிறப்பிதழை தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் / இதழாளர் கலைஞர் நூற்றாண்டு விழாக்குழுத் தலைவர் மு.பெசாம்காலன், வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி, சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் / இதழாளர் கலைஞர் நூற்றாண்டு விழாக் குழு இணைத் தலைவர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான், பால்வளத்துறை அமைச்சர் / இதழாளர் கலைஞர் நூற்றாண்டு விழாக்குழு இணைத் தலைவர் […]
கல்லூரிகளில் ராகிங்கில் ஈடுபடும் மாணவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்: கல்லூரி கல்வி இயக்ககம்
கோவை: கல்லூரிகளில் ராகிங்கில் ஈடுபடும் மாணவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கல்லூரி கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது. மேலும் கல்லூரி கல்வி இயக்ககத்தின் கீழ் இயங்கும் கல்லூரிகளில் ராகிங் நடைபெறவில்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என கோவை பி.எஸ்.ஜி. கல்லூரியில் நடந்த ராகிங் சம்பவத்தை தொடர்ந்து கல்லூரி கல்வி இயக்குநர் கீதா உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் ராகிங் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக கல்லூரிக் கல்வி இயக்குநர் கீதா, அனைத்து கல்லூரிகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது; “கல்லூரி […]
கண்ணை கட்டி கொண்டு களரி சண்டை போட்ட இளைஞர்

சென்னை வண்டலூர் அடுத்த மேலக்கோட்டையூரில் செயல்படும் இந்திய தகவல் தொழில்நுட்பம் வடிவமைத்தல் மற்றும் உற்பத்தி நிறுவன கல்லூரியில் கலை கலாச்சார விழா நடைபெற்றது. இதற்காக அருகில் உள்ள அரசு பள்ளி மாணவர்கள் அழைக்கப்பட்ட நிலையில் கல்லூரி மாணவர்கள் முன்னிலையில் மூடிய கண்கள் மீது மண்ணை வைத்து கருப்பு துணியால் கட்டிய நிலையில் எதிராக இருநபர்களிடம் கத்தி கேடாயத்துடன் சண்டையிட்ட களரிப்பையட்டு இளைஞர் அசத்தினார். அதுபோல் பெண்கள் பல்வேறு சகசங்களை செய்த நிலையில் ஆண் போட்டியாளர்களுக்கு இணையாக சண்டையிட்டதும் […]
பள்ளி மாணவர்களுக்கு ரூ.1,400.. கல்லூரி மாணவர்களுக்கு ரூ.1,500… உணவுத் தொகையை உயர்த்தி வழங்கிய தமிழக அரசு!!

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல விடுதிகள் மற்றும் உண்டி உறைவிடப் பள்ளிகளில் தங்கிப் படிக்கும் பள்ளி மாணவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான உணவுக்கான உதவித்தொகையை தமிழக அரசு உயர்த்தியுள்ளது. முன்னதாக, ஆதிதிராவிடர், பழங்குடியினர் நல விடுதிகள் மற்றும் உண்டி உறைவிடப் பள்ளிகளில் தங்கி படிக்கும் பள்ளி மாணவர்களுக்கான உணவு உதவித் தொகை ரூ.1,000 ஆகவும் அதேபோல, கல்லூரி மாணவர்களுக்கான உணவு உதவித் தொகை ரூ.1,500 ஆகவும் இருந்தது. இந்த நிலையில், கடந்த அக்டோபர் 4ம் தேதி நடைபெற்ற […]
இதய ஆரோக்கியத்தை வலியுறுத்தி கல்லூரி மாணவர்கள் பேரணி

பள்ளிக்கரணையில் இதயம் மற்றும் மூளை ஆரோக்கியத்தை பெரும்பாக்கம் குளோபல் கிளினிக்கல் மருத்துவமனை சார்பில் வாக்கத்தான் நடைபெற்றது, 300 க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற நிலையில் நடிகர் பிரசன்னா கொடியசைத்து துவக்கி வைத்தார். பள்ளிக்கரணை இந்திய கடல் ஆராய்சி மைய்யத்தில் இருந்து பள்ளிக்கரணை காவல் நிலையம் வரை 4 கி.மீ தூரத்தில் இதயம் மற்றும் மூளை ஆரோக்கியத்தை வலியுறுத்தும் விதமாக விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.
சென்னை பல்கலையில் ஆன்லைனில் பி.காம், பிபிஏ

சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்விமையத்தின் மூலம், வரும் கல்வியாண்டு முதல் ஆன்லைன் மூலம் பி.காம், எம்.காம், பிபிஏ ஆகிய மூன்றாண்டு இளநிலைக் கல்வியை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. ஆன்லைன் மூலம் வகுப்புகளை நடத்தவும், தேர்வுகளை நடத்தவும் திட்டமிடப்பட்டிருப்பதாகவும், விடியோ மூலம் வகுப்புகளை நடத்துவதற்கான ஏற்பாடுகளை அவுட்சோர்சிங் முறையில் செய்து கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர கால அவகாசம் நீட்டிப்பு

செப்டம்பர் 14ஆம் தேதி வரை மாணவர்கள் கல்லூரிகளில் சேரலாம் விருப்பம் உள்ள மாணவர்கள் http://tngasa.in மற்றும் http://tngasa.org என்ற இணையதளங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம்.