பல்லாவரம் மாணவர் விடுதியில் ஊத்தப்பம் சாப்பிட்டு ஆய்வு செய்த கலெக்டர்

உங்களை தேடி உங்க ஊரில் திட்டத்தில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் பல்லாவரத்தில் ஒருநாள் முழுவதும் தங்கி 10 துறைகளை ஆய்வுசெய்தார். பல்லாவரம் நாகல் கேணி அரசு ஆதிதிரவிடர் மணவர்கள் விடுதியில் இரவு உணவை சாப்பிட்டு தரம் குறித்து கேட்டறிந்தார். தமிழக முதலமைச்சர் அறிவித்த உங்களை தேடி உங்க ஊரில் திட்டத்தில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் இன்று காலை முதல் பல்லாவரம் தொகுதியில் தங்கினார். அதனையடுத்து வருவாய், சுகாதாரம், உள்ளாட்சி, சமுக நலன் மகளிர் மேம்பாடு, ஆதிதிராவிடர் […]
கள்ளச்சாரயம் குடித்து உயிரிழக்கவில்லை-மாவட்ட ஆட்சியர் விளக்கம்

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி இறந்ததாக தவறான செய்தியை பரப்புகின்றனர்-மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார். கள்ளச்சாராயத்தால் இறந்ததாக போலீசோ, மருத்துவர்களோ இன்னும் உறுதிபடுத்தவில்லை. குடிப்பழக்கமே இல்லாத ஒருவர் உயிரிழந்துள்ளார், அதனால் தவறான தகவலை பரப்ப வேண்டாம்-மாவட்ட ஆட்சியர்.
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, 2024 நாடாளுமன்றப் பொதுத்தேர்தல் 19.04.2024 அன்று நடைபெறுவதையொட்டி

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் மாநகராட்சியில் பொதுமக்களிடையே 100% வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர் ஏற்படுத்திடும் வகையில் பல்லாவரம் துரைப்பாக்கம் ரேடியல் சாலை பல்லாவரம் பெரிய ஏரி அருகில் தேர்தல் குறித்து விழிப்புணர்வு வண்ண பலூன்களை மாவட்ட தேர்தல் அலுவலர் / செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ச.அருண்ராஜ் அவர்கள் வானில் பறக்கவிட்டார். உடன் தாம்பரம் மாநகராட்சி ஆணையாளர் ஆர்.அழகும்னா அவர்கள், காவல்துறை துணை ஆணையாளர் அ.பவன்குமார் அவர்கள் உதவி ஆட்சியர் (பயிற்சி) அனந்த்குமார் சிங் அவர்கள் உட்பட பலர் […]
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, 2024 நாடாளுமன்றப் பொதுத்தேர்தல் 19.04.2024 அன்று நடைபெறுவதையொட்டி

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் மாநகராட்சியில் பொதுமக்களிடையே 100% வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில் தாம்பரம் சண்முகா சாலை மார்க்கெட் பகுதியில் தேர்தல் குறித்து விழிப்புணர்வு உறுதி மொழியினை மாவட்ட தேர்தல் அலுவலர் / செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ச.அருண்ராஜ் தலைமையில் மாநகராட்சி அலுவலர்கள், மற்றும் பொதுமக்கள் ஏற்றுக் கொண்டனர். உடன் தாம்பரம் மாநகராட்சி ஆணையாளர் ஆர்.அழகுமீனா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
ஊராட்சி மன்ற தலைவர் பதவி நீக்கம்
ஊழல் முறைகேட்டில் ஈடுபட்ட தாமரைப்பாக்கம் திமுக ஊராட்சி மன்ற தலைவர் கீதா துளசிரமன் பதவி நீக்கம்; திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் அதிரடி உத்தரவு பதவி நீக்க உத்தரவு தமிழ்நாடு அரசின் இதழில் வெளியீடு
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் தாலுகாவில் வெள்ள நிவாரண பணிகளில் முறையாக செயல்படாத தாசில்தார் கைலாச குமாரசாமி பணியிட மாற்றம்

அவருக்கு பதிலாக கோபாலகிருஷ்ணனை ஏரல் தாலுகா தாசில்தாராக நியமனம் செய்து மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சுமிபதி உத்தரவு
லஞ்சம் கேட்ட தாசில்தார் – கலெக்டருக்கு ஐகோர்ட்டு உத்தரவு!

திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரி கிராமத்தை சேர்ந்தவர் குமரேசன். இவர் ஏலகிரி மலை அருகே உள்ள அத்தனாவூர் கிராமத்தில் உள்ள தனக்கு சொந்தமான 2 ஏக்கர் பட்டா நிலத்தில் பயிர் செய்து வருகிறார். அவருடைய நிலத்தில் சிலர் அத்து மீறி நுழைந்து பயிரையும், நிலத்தை சுற்றி போடப்பட்டு இருந்த பாதுகாப்பு வேலியையும் சேதப்படுத்தி உள்ளனர். இதுகுறித்து அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் பிரச்சினைக்கு இன்னும் முடிவு எட்டப்படவில்லை. இதற்கிடையே 3வது நபர் ஒருவர் திருப்பத்தூர் தாசில்தாரை அணுகி, […]