தாம்பரத்தில் திமுகவினருக்கு தங்கம், வெள்ளி நாணயம் பரிசு

மறைந்த முன்னாள் நகர துணை செயலாளர் 4ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி, தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் கலந்துக்கொண்டு நலத்திட்ட உதவிகள், தேர்தலில் சிறப்பாக பணியாற்றிய திமுகவினர் 30 பேரில் 9 தங்கம், 21 வெள்ளி நாணயங்களை வழங்கினார். மறைந்த முன்னாள் நகர துணை செயலாளர் திருமதி.சுப்புலட்சுமி சர்தார் அவர்களின் நான்காம் ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு, அவரது மகனும் மாநகர துணை அமைப்பாளர் ச.ராஜேஷ் ஏற்பாட்டில் நலத்திட்ட உதவிகள் மற்றும் அன்னதானம் வழங்கும் நிகழ்சி நடைபெற்று, சிறப்பு அழைப்பாளராக […]
முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியீட்டு விழாவிற்கு வருகைதந்த மாண்புமிகு ஒன்றிய பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு.ராஜ்நாத் சிங் அவர்களும்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களும் சென்னை, மெரினா கடற்கரையில் அமைந்துள்ள முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நினைவிட வளாகத்திலுள்ள “கலைஞர் உலகம்” அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் வரலாற்றுப் புகைப்படங்களை பார்வையிட்டார்கள். இந்நிகழ்வின்போது, மாண்புமிகு ஒன்றிய இணை அமைச்சர் திரு.எல்.முருகன், மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோர் உடனிருந்தனர்.
கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியீட்டு விழாவில்

மாண்புமிகு ஒன்றிய பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு.ராஜ்நாத் சிங் அவர்கள் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு நினைவு நாணயத்தை வெளியிட, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் பெற்றுக்கொண்டார். இந்நிகழ்வின்போது, மாண்புமிகு நீர்வளத் துறை அமைச்சர் திரு.துரைமுருகன் உள்ளிட்ட அமைச்சர் பெருமக்கள், மாண்புமிகு ஒன்றிய இணை அமைச்சர் திரு. எல்.முருகன், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், தலைமைச் செயலாளர் திரு.சிவ் தாஸ் மீனா, இ.ஆ.ப. பொதுத் துறை செயலாளர் திருமதி.ரீட்டா ஹரீஷ் தக்கர், இ.ஆ.ப. […]
முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியீட்டு விழாவிற்கு வருகைதந்த மாண்புமிகு ஒன்றிய பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு.ராஜ்நாத் சிங் அவர்களை

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் பூங்கொத்து வழங்கி வரவேற்றார். இந்நிகழ்வின்போது, மாண்புமிகு நீர்வளத் துறை அமைச்சர் திரு.துரைமுருகன் உள்ளிட்ட அமைச்சர் பெருமக்கள், மாண்புமிகு ஒன்றிய இணை அமைச்சர் திரு.எல்.முருகன், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், தலைமைச் செயலாளர் திரு.சிவ் தாஸ் மீனா, இ.ஆ.ப., பொதுத் துறை செயலாளர் திருமதி. ரீட்டா ஹரீஷ் தக்கர், இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.
முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியீட்டு விழாவிற்கு வருகைதந்த

மாண்புமிகு ஒன்றிய பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு.ராஜ்நாத் சிங் அவர்களும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களும் சென்னை, மெரினா கடற்கரையில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணா அவர்களின் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்கள். இந்நிகழ்வின்போது, மாண்புமிகு ஒன்றிய இணை அமைச்சர் திரு.எல்.முருகன், மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர்அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.
கலைஞர் நூற்றாண்டு நினைவு ₹100 நாணயம் வெளியீட்டு விழா வரும் 18ம் தேதி சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடக்க உள்ளது

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடக்கும் இவ்விழாவில் ஒன்றிய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயத்தை வெளியிட உள்ளார். எடப்பாடி பழனிசாமி, ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்திய நாணயங்கள் எங்கே தயாரிக்கப்படுகின்றன என்பது தெரியுமா?

தெரிந்து கொள்ளுங்கள்! ! ! !இந்திய ரூபாய் நோட்டுகள் நாசிக் நகரத்தில் அச்சிடப்படுகிறது என்பது தெரியும். இந்திய நாணயங்கள் எங்கே தயாரிக்கப்படுகின்றன என்பது தெரியுமா? டெல்லி, மும்பாய், கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் ஆகிய நகரங்களில் தயாரிக்கப்படுகின்றன. எந்தக் காசு எந்த நகரத்தில் தயாரிக்கப்பட்டது என்பதற்கும் ஒரு குறி இடப்படுகிறது. நாணயங்களின் அடியில் தயாரிக்கப்பட்ட ஆண்டு குறிப்பிடப்பட்டிருக்கும். அதனைப் பார்த்திருப்பீர்கள். அத்துடன் ஒரு குறியும் இடம் பெற்றிருக்கும். அந்தக் குறியை வைத்து அந்த நாணயம் எந்த ஊரில் தயாரிக்கப்பட்டது […]