கோயமுத்தூர் கொடீசியா கூட்ட அரங்கில், மாண்புமிகு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு.தா.மோ.அன்பரசன் அவர்களின் தலைமையில்,

கோயம்புத்தூர் மற்றும் சேலம் மண்டலங்களுக்குட்பட்ட 14 மாவட்டங்களில் மாவட்ட தொழில் மைய அலுவலகர்கள், சிட்கோ கிளை மேலாளர்கள், சேகோசர்வ், இண்ட்கோசர்வ் அலுவலர்களுடன் திறனாய்வு கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வின்போது, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அரசு செயலர் திருமதி.அர்ச்சனா பட்நாயக்,இ.ஆ.ப., தொழில் வணிகத்துறை ஆணையர் திரு.நிர்மல்ராஜ்,இ.ஆ.ப., கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.கிராந்தி பாடி,இ.ஆ.ப., மற்றும் துறை அலுவலகர்கள் கலந்து கொண்டனர்.

கோயம்புத்தூர் மாவட்டம் உருவாக்கப்பட்டு “கோயம்புத்தூர்” அதன் தலைநகரான தினம் இன்று. ( 24 நவம்பர் 1804 )

மைசூர் பேரரசில் இருந்த கோயம்புத்தூர், திப்பு சுல்தானின் மறைவுக்குப்பின், ஆங்கிலேயர்களால் மதராஸ் மாகாணத்தில் இணைக்கப்பட்டது. கோயம்புத்தூரில் இன்றையதினம் “கோயம்புத்தூர் தினம்” ஆக கொண்டாடப்படுகிறது.

கோயம்புத்தூர்‌ இந்துஸ்தான்‌ கலை அறிவியல்‌ கல்லூரியில்‌ நடைபெற்ற முத்தமிழறிஞர்‌ கலைஞர்‌ நூற்றாண்டு விழா

கோயம்புத்தூர்‌ இந்துஸ்தான்‌ கலை அறிவியல்‌ கல்லூரியில்‌ (20.11.2023) நடைபெற்ற முத்தமிழறிஞர்‌ கலைஞர்‌ நூற்றாண்டு விழாவில்‌ “இதழாளர்‌ கலைஞர்‌” சிறப்பிதழை தமிழ்வளர்ச்சி மற்றும்‌ செய்தித்துறை அமைச்சர்‌ / இதழாளர்‌ கலைஞர்‌ நூற்றாண்டு விழாக்குழுத்‌ தலைவர்‌ மு.பெசாம்காலன்‌, வீட்டு வசதித்துறை அமைச்சர்‌ சு.முத்துசாமி, சிறுபான்மையினர்‌ நலன்‌ மற்றும்‌ வெளிநாடுவாழ்‌ தமிழர்‌ நலத்துறை அமைச்சர்‌ / இதழாளர்‌ கலைஞர்‌ நூற்றாண்டு விழாக்‌ குழு இணைத்‌ தலைவர்‌ செஞ்சி கே.எஸ்‌.மஸ்தான்‌‌, பால்வளத்துறை அமைச்சர்‌ / இதழாளர்‌ கலைஞர்‌ நூற்றாண்டு விழாக்குழு இணைத்‌ தலைவர்‌ […]