அதானி என்னை வந்து சந்திக்கவும் இல்லை, நான் அவரை பார்க்கவும் இல்லை

அதானி மீதான குற்றச்சாட்டுகள் குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த பாஜக, பாமக வலியுறுத்துமா? சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

7 பேரை மீட்கும் பணியில் தொய்வு: அமைச்சர் விளக்கம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணி குறித்து அமைச்சர் எ.வ.வேலு விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் பேசியதாவது; இடிபாடுகளில் 7 பேர் சிக்கியுள்ளனர். எப்படியாவது அவர்களை காப்பாற்றியாக வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் நேற்று முதல் முயன்று வருகின்றனர். தேசிய பேரிடர் மீட்புபடையினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மழையால் பாதிக்கப்பட்டவர்கள் அரசு பள்ளியில் உள்ள முகாமில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது. ஒரு பாறை ஒன்று மிகப்பெரிதாக உள்ளது. […]

தமிழக அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு

அனைத்து அரசு பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கும் தீபாவளி போனஸை அறிவித்துள்ளது தமிழக அரசு. பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் சி மற்றும் டி பிரிவு தொழிலாளர்களுக்கு 20% வரை மிகை ஊதியம் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும். நிரந்தரத் தொழிலாளர்கள் குறைந்தபட்சம் ரூ.8,400, அதிகபட்சம் ரூ.16,800-ஐ போனஸ் ஆக பெறுவர் – முதல்வர் மு.க.ஸ்டாலின்.

மெட்ரோ 2ம் கட்ட திட்டம் – மத்திய அமைச்சரவை நிதி ஒதுக்க ஒப்புதல்

சென்னை மெட்ரோ 2ஆம் கட்ட திட்டத்திற்கு ரூ.63,246 கோடி நிதி ஒதுக்க பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல். மெட்ரோ 2ஆம் கட்ட திட்டத்திற்கு நிதி ஒதுக்க கோரி பிரதமர் மோடியை கடந்த வாரம் சந்தித்து முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை வைத்திருந்தார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ திரு.மு.க.ஸ்டாலின்‌ அவர்கள்‌

இன்று (27.9.2024) புதுதில்லியில்‌,அகில இந்திய காங்கிரஸ்‌ கட்சியின்‌ நாடாளுமன்ற குழுத்‌ தலைவர்‌ திருமதி சோனியா காந்தி அவர்களைசந்தித்துப்‌ பேசினார்‌. இச்சந்திப்பின்போது, கழக மக்களவை குழுத்‌ தலைவர்‌ திரு. டி.ஆர்‌.பாலு, கழகநாடாளுமன்றக்‌ குழுத்‌ தலைவர்‌ திருமதி கனிமொழி ஆகியோர்‌ உடனிருந்தனர்‌.

செந்தில் பாலாஜி முதலமைச்சரை சந்திக்க திட்டம்!

செந்தில் பாலாஜி இன்று சிறையில் இருந்து வெளிவரும் பட்சத்தில் முதலமைச்சரை விமான நிலையத்தில் சந்திக்க திட்டம். முதலமைச்சரை சந்தித்த பின் மருத்துவமனை சென்று உடல் நலத்தை பரிசோதிக்க செந்தில் பாலாஜி திட்டம் என தகவல்? ஒருவேளை இன்று புழல் சிறையில் இருந்து வெளிவராமல் நாளை வெளிவந்தால் நாளை இரவு முதலமைச்சரை சந்திக்க திட்டம்!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு எஸ்.பி.பி. சரண் மனமார்ந்த நன்றி

மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் குடும்பத்தினரின் கோரிக்கையை ஏற்று அவர் வாழ்ந்த காம்தார் நகர் மெயின் ரோட்டிற்கு எஸ்.பி.பாலசுப்பிரமணியம் சாலை என்று பெயர் சூட்டப்படும் என அறிவித்த மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு எஸ்.பி.பி. சரண் மனமார்ந்த நன்றியை தெரிவித்துள்ளார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை டெல்லி புறப்பட்டு செல்கிறார் பிரதமர் மோடியை நாளை சந்திக்கிறார்

முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை 5 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் இருந்து டெல்லி புறப்பட்டு செல்கிறார்.நாளை பிரதமர் மோடியை சந்தித்து பேசுகிறார். அப்போது தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நிலுவையில் உள்ள நிதிகளை விடுவிக்க கோரிய மனுவை பிரதமரிடம் அளிக்க உள்ளார்.தமிழ்நாட்டின் திட்டங்களுக்கு ஒன்றிய அரசு வழங்க வேண்டிய நிதி குறித்து பிரதமர் மோடியுடன் விவாதிக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று டெல்லி பயணம் மேற்கொள்ள உள்ளார். முதல்வருடன் முக்கிய அதிகாரிகள் மற்றும் எம்.பிக்கள் உடன் செல்கின்றனர்.பிரதமர் மோடி […]

அமெரிக்காவில் இருந்து சென்னைக்கு புறப்பட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

தமிழ்நாட்டுக்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக அமெரிக்கா சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிகாகோ விமானநிலையத்தில் இருந்து சென்னைக்கு புறப்பட்டார். தமிழ்நாட்டுக்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக 17 நாட்கள் அரசுமுறை பயணமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா சென்றிருந்தார். அமெரிக்காவில் ரூ.7156 கோடி மதிப்புள்ள முதலீடுகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.