குரோம்பேட்டை ஸ்டேட் பாங்க் காலனி நேரு பார்க் துப்புரவு பணிகளை ஜெய் கோபால் கரோடியா பள்ளி என்.எஸ்.எஸ்.மாணவர்கள் மேற்கொண்டனர்

சிட்லபாக்கம் மாமன்ற உறுப்பினர் சி.ஜெகன், பிரதாப், சுனில், சீனிவாசன், கே.பிரதாப் உட்பட பலர் பங்கேற்றனர். தாமரைக்கண்ணன் நன்றி தெரிவித்தார்.

சிட்லபாக்கத்தில் துப்புரவு பணிக்கு பயன்படுத்தப்படும் வாகனங்கள் இரண்டாவது பிரதான சாலையின் ஓரத்தில் நிறுத்தப்பட்டு இருந்தன

இது அந்தப் பகுதியில் சாலையில் செல்வதற்கு இடையூறாக இருந்தது. இதுகுறித்து மாமன்ற உறுப்பினர் சிட்லபாக்கம் ஜெகன் ஏற்கனவே பதவியில் இருந்த ஆணையரிடம் தெரிவித்திருந்தார். அதன் பெயரில் புதிய ஆணையர் எஸ்.பாலசந்தர் உடனடியாக ஆய்வு மேற்கொண்டார். சிட்லபாக்கம் 1வது பிரதான சாலையில் கால்நடை மருத்துவமனைக்கு அருகில் உள்ள காலி இடத்தை தூய்மைப்படுத்தி அங்கு வாகனங்களை நிறுத்துவதற்கு ஏற்பாடு செய்தார். இதற்காக பொதுமக்கள் சார்பில் மாமன்ற உறுப்பினர் ஜெகன் நன்றி தெரிவித்தார்.

ராஜகீழ்பாக்கத்தில் துப்புரவு பணி

ராஜகீழ்பாக்கத்தில் உள்ள சரவணா நகர் பூங்காவில் S.S.R.P குடியிருப்போர் நலச் சங்கம் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்- தாம்பரம் தொகுதி இளைஞர் பெருமன்றம் சார்பில் துப்புரவு இயக்கம் நடத்தப்படுகிறது. பூங்கா நீண்ட காலமாக பராமரிக்கப்படாத நிலையில் உள்ளது. உள்ளூர்வாசிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தீவிரமாகப் பங்கேற்று பூங்காவை அதன் பழைய நிலைக்கு கொண்டு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மக்கள் விழிப்புணர்வு சங்கம் சார்பில் குரோம்பேட்டை நியூ காலனி பாரதிபுரம் ஆகிய தெருக்களில் உள்ள பட்டாசு கழிவுகளை அகற்றினார்கள்

சேவா ரத்னா டாக்டர் வி,சந்தானம் தலைமையில் நடந்தது. இதில் சமூக ஆர்வலர்கள் பலரும் கலந்து கொண்டனர். மாநகராட்சி உதவியுடன் இந்த சேவை நடந்தது.

பெருங்களத்துர் ரெயில் நிலையத்தில் குடியிருப்போர் நல சங்க உறுப்பினர்கள் தூய்மை பணியில் ஈடுபட்டனர்

தூய்மை தினத்தை ஒட்டி தென்னக ரயில்வே அலுவலர்கள் ஊழியர்களும், பெருங்களத்தூர் பீர்க்கங்கரணை குடியிருப்பு நலச்சங்கம், PP residence welfare Association இணைந்து ரயில் நிலையத்தை சுத்தம் செய்கின்ற பணியில் ஈடுபட்டனர். ரயில்வே ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் நலச்சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டு மிக சிறப்பாக ரயில் தண்டவாளம் மற்றும் பயணிகள் அமருமிடம் Subway அனைத்து பகுதிகளும் சுத்தம் செய்யப்பட்டது. இதில் திரளான ரயில்வே அலுவலர்கள் அதிகாரிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

தாம்பரம் பஸ் நிலையத்தில் பெருக்கி சுத்தம் செய்த மேயர்

நாடு முழுவதும் ஸ்வச் பாரத் அபியான் – ஸ்வச்டா ஹாய் சேவா என்ற சிறப்பு தூய்மை பணிகள் மேற்கொள்ள பாரத பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்திருந்தார்.அதன்படி சிறப்பு தூய்மை பணிகள் நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. தாம்பரம் மாநகராட்சியில் உள்ள 5 மண்டலங்களிலும் தீவிர தூய்மைப் பணிகள் நடைபெற்றது. தாம்பரம் சானடோரியம் பஸ் நிலையத்தில் நடைபெற்ற தூய்மை பணிகளை தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி தொடங்கி வைத்து உறுதிமொழி ஏற்றார். பின்னர் பஸ் நிலையத்தில் நடைபெற்ற […]

சிட்லபாக்கம் நமது நகரம் தூய்மை நகரம் விழிப்புணர்வு

05.07.2023 தாம்பரம் மாநகராட்சி செம்பாக்கம் மண்டலத்திற்கு உட்பட்ட 34 வது வார்டு பகுதியில் அமைந்துள்ள சிட்லபாக்கம் பெரிய ஏரி கரையை சுற்றியுள்ள பகுதிகளில் நமது நகரம் தூய்மை நகரம் என்ற இலக்கணத்திற்கு ஏற்ப தாம்பரம் மாநகராட்சி முன்னெடுக்கும் அனைத்து மக்கள் நல திட்டங்களுக்கு முன்னோடியாக திகழும் செம்பாக்கம் மண்டலம் பகுதியில் இன்று பிரின்ஸ் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற மாபெரும் இயற்கை வளங்கள் மற்றும் நீர் நிலைகளை பேணி காத்து இயற்கையான […]