தாம்பரம் மாநராட்சி 34வது வார்டு சிட்லபாக்கம் பகுதி குமார் அவென்யூ அறிஞர் அண்ணா பூங்கா புதர்மண்டி பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் இருந்தது

சென்னை சென்ட்ரல் சிட்லபாக்கம் அரிமா சங்கம் சார்பில் பூங்காவை சுத்தம் செய்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தனர். இந்த நிகழ்ச்சியில் எஸ்.ஆர்.எம் கல்லூரி டீன் வி.ரேவதி, லயன்.விக்டோ பிளாக்கா, முன்னாள் கவுன்சிலர் பிரதாப் , 43-வது வார்டு மாமன்ற உறுப்பினர் சி.ஜெகன் கலந்து கொண்டார்கள்.
சிட்லபாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா நடந்தது. மாமன்ற உறுப்பினர் சிட்லபாக்கம் சி.ஜெகன், ரோட்டரி சங்கம், அரிமா சங்கம் மற்றும் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் குழுவினர் இணைந்து இந்த விழாவை நடத்தினார்

காலையில் விளையாட்டுப் போட்டிகளும் நடந்தன. விழாவில் சிட்லபாக்கம் சி.ஜெகனை வாழ்த்தி கௌரவித்தனர். இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக குடிநீர் வழங்கல் துறை இயக்குனர் சரவணன் சிறப்புரையாற்றினார். தலைமை ஆசிரியர் வில்லியம், முன்னாள் மாணவர் எல்.என்.ரகுராஜ் வழக்கறிஞர், சிவகுமார், ரோட்டரி கலை கோவிந்தராஜ், ரோட்டரி முத்துசாமி, பிரதாப், ஜீவா எஸ்எம்சி தலைவர், சொக்கலிங்கம், சுகுணா, எஸ்எம்சி உறுப்பினர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் விழாவில் பங்கேற்றனர்.
சிட்லபாக்கம் பிரதான சாலை மற்றும் பாபு தெரு சந்திப்பில் இருந்த உயர் மின்னழுத்த மின்கம்பம் நீண்ட நாட்களாக பழுதடையும் சூழ்நிலையிலும் சிறிது சிறிதாக சாய்ந்து கொண்டும் இருந்தது

மாமன்ற உறுப்பினர் சிட்லபாக்கம் சி.ஜெகன் தொடர் முயற்சியால் 3 பிரிவுகளுக்கு உட்பட்ட இந்த மின் கம்பத்தை சீரமைத்து புதிய மின் கம்பம் அமைக்கப்பட்டது. இதற்கு அப்பகுதி வாழ் பொதுமக்கள் அனைவரும் சி.ஜெகனுக்கும், மினவாரிய அதிகாரிகளுக்கும் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்தனர்.
சிட்லபாக்கம் பிரதான சாலை மற்றும் பாபு தெரு சந்திப்பில் இருந்த உயர் மின்னழுத்த மின்கம்பம் நீண்ட நாட்களாக பழுதடையும் சூழ்நிலையிலும் சிறிது சிறிதாக சாய்ந்து கொண்டும் இருந்ததது

மாமன்ற உறுப்பினர் சிட்லபாக்கம் சி.ஜெகன் தொடர் முயற்சியால் 3 பிரிவுகளுக்கு உட்பட்ட இந்த மின் கம்பத்தை சீரமைத்து புதிய மின் கம்பம் அமைக்கப்பட்டது. இதற்கு அப்பகுதி வாழ் பொதுமக்கள் அனைவரும் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்தனர். இதற்கு உறுதுணையாக இருந்த செம்பாக்கம், சிட்லபாக்கம், நேரு நகர் ஆகிய மூன்று மின் பிரிவுக்கும் உட்பட்ட உதவி பொறியாளர்கள், செயற்பொறியாளர் அசோகன் மற்றும் உதவி செயற்பொறியாளர் சிவராமன் ஆகிய அனைவருக்கும் மாமன்ற உறுப்பினர் சி.ஜெகன் நன்றி தெரிவித்தார்.
ஸ்ரீ ஹயகிரீவர் அகாடமி சார்பில் மாநில அளவிலான சதுரங்க போட்டி சிட்லபாக்கம் தனியார் பள்ளியில் நடைபெற்றது. இதில் சுமார் 500 மாணவ மாணவியர் கலந்து கொண்டனர். இதில் வெற்றி பெற்றவர்களுக்கு மாமன்ற உறுப்பினர் சி.ஜெகன், பா.பிரதாப் Ex.Mc, ஆகியோர் கோப்பையை வழங்கினர். அருகில் பவித்திரா ஜெகன்
சிட்லபாக்கத்தில், கோமதி நகர், அம்பேத்கர் நகர், SBI காலனி, திருமுருகன் சாலை, ராமகிருஷ்ணாபுரம், ஆகிய நியாய விலைக் கடைகளில், தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா, மிக்ஜாம் புயலினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவித் தொகை ரூ.6000/- வழங்கப்பட்டு வருவதையும், நிவாரண உதவித் தொகை கிடைக்காதவர்களுக்கு விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டு வருவதையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்

உடன் மாமன்ற உறுப்பினர்கள் சி.ஜெகன், சி.சுரேஷ், மற்றும் திமுக நிர்வாகிகள் பங்கேற்றனர்.
தாம்பரம் மாநகராட்சி 43வது வார்டுக்குட்பட்ட பகுதிகளில் மாமன்ற உறுப்பினர் சிட்லபாக்கம் சி.ஜெகன் தொடர் முயச்சியால் 8, 13, 16 ஆகிய 3 தேதிகளில் அப்பகுதிகளில் தொடர்ந்து மருத்துவமுகாம்கள் நடத்தப்பட்டது.
ஆனந்த் உயர் தொழில்நுட்ப கல்லூரியில் நடந்த பொங்கல் சிறப்பு பட்டிமன்ற விருது வழங்கும் விழாவில் தாம்பரம் மாநகராட்சி 43வது வார்டு மாமன்ற உறுப்பினர் சிட்லபாக்கம் சி.ஜெகன் சமுதாய முன்னேற்றத்திற்காக சிறப்பாக சேவையாற்றிவருவதர்காக அப்துல் கலாம் விருது 2023 வழங்கப்பட்டது. திரைப்பட நடிகர் பாண்டியராஜன் விருதினை வழங்கினார்.
சிட்லபாக்கம் திருமுருகன் சாலையில் மழை வெள்ளத்தில் ஏற்பட்ட பாதிப்புகளை 43வது வார்டு மாமன்ற உறுப்பினர் சி.ஜெகன் சீரமைத்தபோது எடுத்தபடம்
சாலை சீரமைக்கும் பணி

சிட்லபாக்கம் பகுதியில் கஸ்தூரிபாய் தெரு சாலை புதுப்பிக்கும் பணி தொடங்கியுள்ளது. மாமன்ற உறுப்பினர் சிட்லபாக்கம் சி.ஜெகன் தொடர் முயற்சியால், எஸ்.ஆர்.ராஜா எம்.எல்.ஏ தாம்பரம் மாநகராட்சி 3வது மண்டலக்குழு தலைவர் ச.ஜெயப்பிரதீப் உதவியால் சாலையை அமைப்பதற்கு முன்பு பழைய தார் சாலையை சுரண்டி எடுத்து புதிய தார் சாலை அமைப்பதற்கு பணி தொடங்கப்பட்டது.